10TH-TAMIL-ALL UNIT - PAGUPATHA URUPPILAKKANAM

 

பகுபத உறுப்பிலக்கணம்

 

பொறித்த – பொறி + த் + த் + அ

பொறி – பகுதி

த் – சந்தி

த் – இறந்த கால இடைநிலை

அ – பெயரெச்ச விகுதி

உரைத்த – உரை + த் + த் + அ

உரை– பகுதி

த் – சந்தி

த் – இறந்த கால இடைநிலை

அ – பெயரெச்ச விகுதி

மலைந்து – மலை + த் (ந்) +த் + உ

மலை– பகுதி

த் – சந்தி, த்-ந் – ஆனது விகாரம்

த் – இறந்த கால இடைநிலை

உ – வினையெச்ச விகுதி

வருக – வா(வரு) + க

வா  பகுதி

வரு எனத் திரிந்தது விகாரம்

க – வியங்கோள் வினைமுற்று விகுதி

 

பொழிந்த – பொழி + த்(ந்) + த் + அ

பொழி – பகுதி

த் – சந்தி ; த் – ந் ஆனது விகாரம்

த் – இறந்த கால இடைநிலை

அ – பெயரெச்ச விகுதி

கிளர்ந்த – கிளர் + த்(ந்) + த் + அ

கிளர் – பகுதி

த் – சந்தி

த் – இறந்த கால இடைநிலை

அ – பெயரெச்ச விகுதி

தணிந்தது – தணி + த் (ந்) + த் + அ + து

தணி – பகுதி

த் – சந்தி, த்-ந்- ஆனது விகாரம்

த் – இறந்த கால இடைநிலை

அ – சாரியை

து – படர்க்கை வினைமுற்று விகுதி

பதிந்து – பதி + த் (ந்) +த் + உ

பதி – பகுதி

த் – சந்தி, த்-ந் – ஆனது விகாரம்

த் – இறந்த கால இடைநிலை

உ – வினையெச்ச விகுதி

மயங்கிய – மயங்கு + இ (ன்) + ய் + அ

மயங்கு – பகுதி

இ(ன்) – இறந்த கால இடைநிலை; ‘ன்’-புணர்ந்து கெட்டது.

ய் – உடம்படு மெய்

அ – பெயரெச்ச விகுதி

அறியேன் – அறி + ய் + ஆ + ஏன்

அறி – பகுதி

ய் – சந்தி,

ஆ – எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது.

ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

அமர்ந்தான் – அமர் + த் (ந்) + த் + ஆன்

அமர் – பகுதி

த் – சந்தி, த்-ந்- ஆனது விகாரம்

த் – இறந்த கால இடைநிலை

ஆன்– ஆண்பால் வினைமுற்று விகுதி

ஒலித்து – ஒலி + த்  + த் + உ

ஒலி – பகுதி

த் – சந்தி,

த் – இறந்த கால இடைநிலை

உ – வினையெச்ச விகுதி

உறங்குவாய் – உறங்கு + வ் + ஆய்

உறங்கு – பகுதி

வ் – எதிர் கால இடைநிலை

ஆய்– முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

உறங்குகின்ற – உறங்கு + கின்று + அ

உறங்கு – பகுதி;

கின்று – நிகழ்கால இடைநிலை;

- பெயரெச்ச விகுதி


3 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post