அலகிடுதல்
நேர் |
நிரை |
1.
தனி குறில் – 1 |
1.
இரு குறில் – 1 1 |
2.
குறில் + ஒற்று – 1 0 |
2.
இரு குறில் + ஒற்று - 11 |
3.
தனி நெடில் – 2 |
3.
குறில் + நெடில் – 1 2 |
4.
நெடில் + ஒற்று – 2 0 |
4.
குறில் + நெடில் + ஒற்று – 1 2 0 |
இங்கு
கொடுக்கப்பட்டுள்ள எண்கள் மாத்திரை அளவு ஆகும்.
ஒற்றுக்கு
(
மெய்யெழுத்து ) ½ மாத்திரை அளவினை இங்கு சூழியமாக ( 0 ) கொடுக்கப்பட்டுள்ளது என்பதனை
நினைவில் கொள்க
அசை
வாய்பாடுகள்
ஓரசைச் சீர் |
ஈரசைச் சீர் |
நேர்
– நாள்
நிரை
– மலர் நேர்பு
– காசு
( கா - சு ) நிரைபு
– பிறப்பு
( பிறப் -பு ) குறிப்பு
: ஓரசைச்சீர்கள்
குறட்பாவின் இறுதியில் மட்டுமே வரும். இவற்றில் ஒன்றுடன் முடியும். |
நேர்
– நேர் = தேமா நிரை
– நேர் = புளிமா நிரை
– நிரை = கருவிளம் நேர்
– நிரை = கூவிளம் |
மூவசைச் சீர் |
|
நேர்
– நேர் - நேர் = தேமாங்காய் நிரை
– நேர் - நேர் = புளிமாங்காய் நிரை
– நிரை - நேர் = கருவிளங்காய் நேர்
– நிரை - நேர் = கூவிளங்காய் குறிப்பு
: திருக்குறளில் நேர் அசை உள்ள மூவசை சீரில் காய் சீர் மட்டுமே வரும். |
நேர்
– நேர் - நிரை = தேமாங்கனி நிரை
– நேர் - நிரை = புளிமாங்கனி நிரை
– நிரை - நிரை = கருவிளங்கனி நேர்
– நிரை - நிரை = கூவிளங்கனி குறிப்பு
: திருக்குறளில் நேர் அசை உள்ள மூவசை சீரில் கனி சீர் வராது.. |
சில எடுத்துக்காட்டுகள்
1. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்
குரிமை உடைத்திவ்
உலகு
சீர்
|
அசை |
வாய்பாடு |
கரு-மம் |
நிரை+நேர் |
புளிமா |
சிதை-யா-மல் |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
கண்+ணோ+ட |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
வல்-லார்க் |
நேர்+நேர் |
தேமா |
குரி-மை |
நிரை+நேர் |
புளிமா |
உடைத்-திவ் |
நிரை+நேர் |
புளிமா |
உலகு |
நிரைபு |
பிறப்பு |
இக்குறள் பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது
2. அரியவற்றுள் எல்லாம்
அரிதே பெரியாரை
பேணித் தமரா கொளல்
சீர் |
அசை |
வாய்பாடு |
அரி-யவற்-றுள் |
நேர்+ நேர்+நேர் |
தேமாங்காய் |
எல்-லாம் |
நேர்+ நேர் |
தேமா |
அரி-தே |
நிரை+நேர் |
புளிமா |
பெரி-யா-ரை |
நேர்+ நேர்+நேர் |
தேமாங்காய் |
பே-ணித் |
நேர்+ நேர் |
தேமா |
தம-ரா |
நேர்+ நேர் |
தேமா |
கொளல் |
நிரை |
மலர் |
இக்குறள் மலர் என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.
3. தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்
சீர்
|
அசை |
வாய்பாடு |
தே-வர் |
நேர்+நேர் |
தேமா |
அனை-யர் |
நிரை+நேர் |
புளிமா |
கய-வர் |
நிரை+நேர் |
புளிமா |
அவ-ருந்-தாம் |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
மே-வன |
நேர்+நிரை |
கூவிளம் |
செய்-தொழு-க |
நேர்+நிரை+நேர் |
கூவிளங்காய் |
லான் |
நேர் |
நாள் |
இக்குறள் நாள் என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.
4. வேலோடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலோடு நின்றான் இரவு
சீர் |
அசை |
வாய்பாடு |
வே-லொடு |
நேர்
+நிரை |
கூவிளம் |
நின்-றான் |
நேர்+நேர் |
தேமா |
இடு-வென் |
நிரை+நேர் |
புளிமா |
றது-போ-லும் |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
கோ-லொடு |
நேர்
+நிரை |
கூவிளம் |
நின்-றான் |
நேர்+நேர் |
தேமா |
இரவு |
நிரைபு |
பிறப்பு |
இக்குறள் பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது
5. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல்
ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு
சீர் |
அசை |
வாய்பாடு |
வன்-கண் |
நேர்+ நேர் |
தேமா |
குடி-காத்-தல் |
நிரை+ நேர்+நேர் |
புளிமாங்காய் |
கற்-றறி-தல் |
நேர்+ நிரை+நேர் |
கூவிளங்காய் |
ஆள்–வினை-யோ |
நேர்+ நிரை+நேர் |
கூவிளங்காய் |
டைந்-துடன் |
நேர்+ நிரை |
கூவிளம் |
மாண்-ட |
நேர்+ நேர் |
தேமா |
தமைச்சு |
நிரைபு |
பிறப்பு |
இக்குறள் பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.
6. பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்
சீர் |
அசை |
வாய்பாடு |
பண்-என்-னாம் |
நேர்+ நேர்+நேர் |
தேமாங்காய் |
பா-டற் |
நேர்+ நேர் |
தேமா |
கியை-பின்-றேல் |
நிரை+நேர்+ நேர் |
புளிமாங்காய் |
கண்-என்-னாம் |
நேர்+ நேர்+நேர் |
தேமாங்காய் |
கண்-ணோட்-டம் |
நேர்+ நேர்+நேர் |
தேமாங்காய் |
இல்-லாத |
நேர்+ நேர்+நேர் |
தேமாங்காய் |
கண் |
நேர் |
நாள் |
இக்குறள் நாள் என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.
7. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து
சீர் |
அசை |
வாய்பாடு |
தொழு-தகை |
நிரை – நிரை |
கருவிளம் |
யுள் - ளும் |
நேர் – நேர் |
தேமா |
படை-யொடுங்-கும் |
நிரை – நிரை - நேர் |
கருவிளங்காய் |
ஒன்-னார் |
நேர் – நேர் |
தேமா |
அழு-தகண் |
நிரை – நிரை |
கருவிளம் |
ணீ - ரும் |
நேர் – நேர் |
தேமா |
அனைத்து |
நிரைபு |
பிறப்பு |
இக்குறள் பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.
8. இன்மையின் இன்னா தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது
சீர் |
அசை |
வாய்பாடு |
இன்-மை-யின் |
நேர் – நேர் – நேர் |
தேமாங்காய் |
இன் – னா |
நேர் – நேர் |
தேமா |
தியா-தெனின் |
நிரை – நிரை |
கருவிளம் |
இன்-மை-யின் |
நேர் – நேர் – நேர் |
தேமாங்காய் |
இன்-மை-யே |
நேர் – நேர் – நேர் |
தேமாங்காய் |
இன்-னா |
நேர் – நேர் |
தேமா |
தது |
நிரை |
மலர் |
இக்குறள் மலர் என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.
9. மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை
சீர் |
அசை |
வாய்பாடு |
மதி-நுட்-பம் |
நிரை– நேர் - நேர் |
புளிமாங்காய் |
நூ-லோ |
நேர் – நேர் |
தேமா |
டுடை-யார்க் |
நிரை – நேர் |
புளிமா |
கதி-நுட்-பம் |
நிரை– நேர் - நேர் |
புளிமாங்காய் |
யா-வுள் |
நேர் – நிரை |
கூவிளம் |
முன்-நிற் |
நேர் – நேர் |
தேமா |
பவை |
நிரை |
மலர் |
இக்குறள் மலர் என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.
10. கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு
சீர் |
அசை |
வாய்பாடு |
கரு-வியும் |
நிரை – நிரை |
கருவிளம் |
கா-லமும் |
நேர் - நிரை |
கூவிளம் |
செய்-கை-யும் |
நேர் – நேர் - நேர் |
தேமாங்காய் |
செய்-யும் |
நேர்-நேர் |
தேமா |
அரு-வினை-யும் |
நிரை- நிரை -நேர் |
கருவிளங்காய் |
மாண்-ட |
நேர் - நேர் |
தேமா |
அமைச்சு |
நிரைபு |
பிறப்பு |
இக்குறள் பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.