அனைவருக்கும் வணக்கம். தமிழக அரசு பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் கல்வி பயில வேண்டும் என்ற உரிய நோக்கத்தோடு பல்வேறு விதமான பாராட்டத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அது மிகவும் பயனளிக்கக்கூடியது. தமிழக அரசு விலையில்லா பல்வேறு பொருட்களை மாணவர்களுக்கு வழங்கி இடைநிற்றலை தவிர்த்து வருகிறது. மேலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், அதனை ஊக்கப்படுத்தும் விதமான பல்வேறு வகையான திறனாய்வுத் தேர்வுகளை நடத்தி வருகிறது. குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் கற்றலில் இடைநிற்றலைத் தவிர்க்க ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வு தேர்வு நடத்தி அதில் வெற்றி பெறுவோருக்கு ரூ 1000 ஊக்கத் தொகையும் வழங்கி ஊக்குவிக்கிறது. அந்த வகையில் கடந்த டிசம்பர் 16 - 2023 அன்று தமிழ்நாடு முழுவதும் கிராமப்புற மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வுத் தேர்வு நடத்தியது. அதனுடைய வினாத்தாளினை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இங்கு TRUST EXAM 2023 வினாத்தாளினை பதிவேற்றம் செய்துள்ளோம்.இதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
வினாத்தாள் - PDF
விடைக்குறிப்பு
Tags:
TRUST EXAM