அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு அன்பான வணக்கம். தமிழில் வாசிக்க , எழுத தடுமாறும் குழந்தைகள் மற்றும் எழுத்துகளை அறியாத குழந்தைகள் எவரும் இருக்கக் கூடாது என்ற எண்ணம் அனைத்து ஆசிரியப் பெருமக்களிடம் உள்ளது. அதற்கான அவர்களின் முன்னெடுப்புகள் முக்கியமானது. அவற்றில் இந்த தமிழ் விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளமும் தற்போது பங்கெடுத்துக் கொள்கிறது. தாய்த்தமிழை வளர்த்தெடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. அந்த வகையில் தமிழ்நாட்டு பள்ளிகளில் தமிழ் படிக்கத் தெரியாத மாணவர்கள் எவரும் இல்லை என்ற நிலையை எய்த வேண்டும். அந்த வகையில் நமது கல்விவிதைகள் மற்றும் தமிழ்விதை வலைதளங்கள் இணைந்து வாரா வாரம் தமிழ் படிக்க எழுத தெரியாத மாணவர்களுக்கு எவ்விதமான செயல்பாடுகளை வழங்க வேண்டும் என்பதனை வாராந்திர பாடக் குறிப்பேடு எழுத தயார் செய்வது போல வாரச் செயல்பாடுகளை வழங்க உள்ளோம். நம் நோக்கம் இந்த ஒரு மாத காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் படிக்க. வாசிக்க தெரிகிறது என்பதனை உறுதி செய்வதே.... அதற்கு உங்களின் ஒத்துழைப்பும் வேண்டும். நீங்கள் செய்யக் கூடிய செயல்பாடுகளையும் பகிர்ந்தால் நிச்சயம் அனைத்து மாணவர்களும் இதில் தேர்ச்சி அடைவர்.
கற்றல்
இனிமை
அக்டோபர்
இரண்டாம் வார வினாத்தாள்
எழுத்து அறியா
நிலை
மதிப்பெண் : 20
1. கீழ்க்கண்ட
எழுத்துகளை வாசித்துக் காட்டுக 5
அ) ட – ட்
ச – ச் ந – ந் ர - ர்
ஆ) ப
– ப் க – க் வ – வ் ல – ல்
இ) ம
– ம் த – த் ய – ய் ன – ன்
ஈ) ண் – ண ள் – ள ழ் – ழ
உ) ஞ் – ஞ
ங் – ங ற் - ற
2. நீங்கள் கற்றதில் விடுபட்ட
எழுத்தை நிரப்புக. 5
ட் ___ ___ச் ல் ____ வ ___ ண் _____
ப _______ க் ___
ய் ____ த _____ள ______
ழ் _____ ஞ _____ ங் ____
ற_____
3. நீங்கள் கற்ற ண்,ண,ள்,ள,ழ்,ழ்,ஞ்,ஞ,ங்,ங,ற்,ற
எழுத்துகளை பத்தியில் வட்டமிடுக 5
ஒரு வயதான முதியவரைப் போக்குவரத்து மிகுந்த சாலையில்
பாதுகாப்பாய் கரம் பிடித்து சாலையின் மறுபுறம் உள்ள ஒரு வங்கியில் கொண்டு போய்
விட்டு,அந்த வங்கியில் பணம் எடுத்தலுக்கான விண்ணப்பத்தையும்
பூர்த்தி செய்து விட்டு பணம் பெற்றுக் கொடுத்த அந்தச் சமயத்தில் அந்த முதியவர்
என்னைக் கையெடுத்துக் கும்பிட்டு நன்றி எனக் கூறிய வார்த்தை என் மனதை மட்டுமல்ல
என் கண்களையும் கலங்க வைத்தது.
4. நீ கற்ற எழுத்துகளைக்
கொண்டு 5 சொற்கள் உருவாக்குக. 5
( வினா எண் : 1 இல் எழுத்துகள் உள்ளது )
கற்றல்
இனிமை
அக்டோபர்
இரண்டாம் வார வினாத்தாள்
எழுத்து கூட்டி
வாசிப்போர் மதிப்பெண்
: 20
1. ஒத்த
ஓசையுடைய சொற்களை வாசித்தல் 5
படம்
மடம் தடம் வடம்
நயம் பயம் கடல் மடல்
கயல் வயல் மணல் சணல்
2. முதலெழுத்தை நெடிலாக மாற்றி
எழுதுக. 5
கல் _____ பல் ____
வசம் ___ தரம் _____
மடம் ______ வதம் ___ வரம் ____ வட்டம்
_____
பலம் _____ வனம் _____ தனம் ____
மனம் _____
3. கோடிட்ட இடத்திற்கு ஏற்ற
மெய்யெழுத்துகளை நிரப்புக 5
எ __ டு தா__தா நு__கு பா__வை பா__பா
அ__கா ப__சை வெ__ளை தே__ வெ__றி
4. சொல்வதனை எழுதுக. 5
(
ஆசிரியர் பயிற்சி நூல் -2 இல் உள்ள மதிப்பீடு பகுதியில் உள்ள சொற்களைப் பயன்படுத்திக்
கொள்ளலாம். அல்லது தாங்களே 10 சொற்களை சொல்லி எழுத வைக்கலாம். )
TO GET PDF