9TH-SEAS-TAMIL-QUIZ-PART-1

  

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளின் கனிவான வணக்கம். 3-11-23  தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாநில அளவிலான அடைவுத் திறன் தேர்வு நடத்தப்படவுள்ளது. இது எதிர் வரும் 2024 தேசிய அடைவுத் திறன் தேர்வுக்கான முன்னெடுப்பாகும். இந்த மாநில அளவிலான அடைவுத் திறன் தேர்வு தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 3,6,9 ஆகிய வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் நடத்தப்படுகிறது. அந்த தேர்வுகளை எளிமையாக எதிர்க்கொள்ள நமது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளமானது 25 வினாக்கள் கொண்ட சிறு சிறு தேர்வுகளாக நடத்தப்பட உள்ளது.  இந்த தேர்வானது உங்களுக்கு 30 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. இந்த தேர்வினை பயிற்சியாக எடுத்துக் கொண்டு எதிர் வரும் மாநில அளவிலான அடைவுத் தேர்வினை சிறப்பாக எதிர்க் கொள்ளவும்.

மாநில அளவிலான அடைவுத் தேர்வு - 2023
எட்டாம் வகுப்பு
தமிழ்
பகுதி - 1
மொத்த வினாக்கள் : 25                                                                                    மொத்த மதிப்பெண் : 25

மாநில கல்வி அடைவுத் திறன் தேர்வு

தமிழ்

ஒன்பதாம் வகுப்பு

மாதிரி வினாத்தாள் – 1

1. “ புதிய அறம் பாட வந்த அறிஞன் “ என புகழப்படுவர் __________

அ) வாணிதாசன்                ஆ) பாரதிதாசன்                இ) பாரதியார்           ஈ) இராமலிங்கம்

2. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் ______

அ) வைப்பு                        ஆ) கடல்                         இ) பரவை              ஈ) ஆழி

3. உயிரும் நீ; மெய்யும் நீ; ஓங்கும் அறமாம் பயிரும் நீ – என செந்தமிழைப் பாடியவர்

அ) வாணிதாசன்                ஆ) பாரதிதாசன்                இ) பாரதியார்           ஈ) அரங்கன்

4. நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் – இப்பாடலில் “ விசும்பு “ என்பதன் பொருள் யாது?

அ) காற்று                         ஆ) ஆகாயம்                     இ) நீர்                    ஈ) நெருப்பு

5. தழாஅல் – இச்சொல்லில் காணப்படும் மாத்திரை அளவு

அ) 3            ஆ) 2           இ) 4            ஈ) 6

6. இளமைப் பெயரைக் காண்க:- சிங்கம்

அ) குட்டி      ஆ) கன்று     இ) குருளை  ஈ) பறழ்

7. பொருத்துக

விலங்கு              -              ஒலி மரபு

1. சிங்கம்                 -                 அ) உறுமும்

2. புலி                    -                 ஆ) முழங்கும்

3. பசு                     -                 இ) பிளிறும்

4. யானை               -                 ஈ) கதறும்

அ) 1-ஆ       2-அ            3-ஈ             4-இ            ஆ) 1-இ       2-அ   3-ஈ   4-ஆ

இ) 1- ஈ        2-இ            3-ஆ           4- அ           ஈ) 1- அ        2-ஆ  3-இ   4-ஈ

8. காரணம் : தொடக்கத்தில் எழுத்துகளின் வரி வடிவம் ஓவிய எழுத்து.

கூற்று : தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ, வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது.

அ) காரணம், கூற்று – தவறு           ஆ) காரணம், கூற்று – சரி

இ) காரணம் தவறு, கூற்று சரி        ஈ) காரணம் சரி, கூற்று தவறு

9. ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலை ______

அ) ஓவிய எழுத்து             ஆ) வட்டெழுத்து     இ) ஒலி எழுத்து நிலை       ஈ) கண்ணெழுத்து

10. தமிழ் எழுத்துகள் நிலையான வடிவத்தை பெற காரணம்

அ) ஓலைச்சுவடியில் எழுதியதால்           ஆ) கல்வெட்டுகளில் எழுதியதால்

இ) ஓவியமாக வரைந்ததால்                   ஈ) அச்சுக்கலை தோன்றியதால்

11. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்துகள் _______

அ) கண்ணெழுத்து  ஆ) வட்டெழுத்து     இ) ஓவிய எழுத்து    ஈ) தமிழெழுத்து

12. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் _______

அ) கண்ணெழுத்து  ஆ) வட்டெழுத்து     இ) ஓவிய எழுத்து    ஈ) தமிழெழுத்து

13. பாறைகளில் எழுத்துகள் செதுக்கும் போது எவற்றை பயன்படுத்த முடியாது?

அ) குறிகள்             ஆ) வளைகோடுகள்          இ) நேர்கோடுகள்     ஈ) சுழிகள்

14. காரணம் : தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் வீரமாமுனிவர்.

கூற்று 1 : ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை களைந்தார்

கூற்று 2 : அச்சுகள் உருவாக்க எழுத்துகளில் சீர்திருத்தம் செய்தார்.

அ) காரணம் மற்றும் கூற்றுகள் சரி           ஆ) காரணம் தவறு, கூற்றுகள் தவறு

இ) காரணம் சரி; கூற்று -1 சரி; கூற்று 2 தவறு     ஈ) காரணம் சரி; கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

15.தமிழில் சொல் என்பதற்கான பொருள் _______

அ) எழுத்து             ஆ) வாக்கியம்          இ) நெல்       ஈ) தொடர்

16. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே – என குறிப்பிடும் நூல்

அ) நன்னூல்           ஆ) அகத்தியம்        இ) தொல்காப்பியம்            ஈ) திருக்குறள்

17. நன்னூலார் எந்த இரு குறில் எழுத்துகளை இணைத்து ஒரெழுத்து ஒரு மொழி 42 எனக் கூறுகிறார்?

அ) நொ,து              ஆ) நொ,அ             இ) சொ,து               ஈ) கெ,து

18. காட்டுப் பசுக்கு வழங்கும் பெயர்______

அ) சேமா                ஆ) புளிமா              இ) ஆமா                ஈ) தேமா

19. அம்புவிடும் கலையை எவ்வாறு குறிப்பிடுகிறது தமிழ்?

அ) அகலை            ஆ) ஏகலை            இ) ஏய்தல்              ஈ) விடுதல்

20. செந்தமிழ் அந்தணர் என அழைக்கப்படுபவர் ______

அ) பாரதியார்           ஆ) பாரதிதாசன்      இ) இளங்குமரனார்   ஈ) வாணிதாசன்

21. உயிரெழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

அ) மார்பு       ஆ) தலை     இ) கழுத்து    ஈ) மூக்கு

22. ஆய்த எழுத்து எதனை இடமாகக் கொண்டு பிறக்கிறது?

அ) மார்பு       ஆ) தலை     இ) கழுத்து    ஈ) மூக்கு

23. வாய்திறக்கும் முயற்சியுடன் இதழ் குவிப்பதால் பிறக்கும் எழுத்து

அ)  இ          ஆ) அ          இ) ஒள         ஈ) ஏ

24. மேல் இதழும், கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கும் மெய் எழுத்து

அ) த்,ந்         ஆ) ப்,ம்         இ)ஞ்ச்          ஈ) ட்ண்

25. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம்

அ) தலை      ஆ) மார்பு       இ) மூக்கு      ஈ) கழுத்து

TO ATTEND THE ONLINE QUIZ


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post