6TH-SEAS-TAMIL-QUIZ-PART-3

  

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளின் கனிவான வணக்கம். 3-11-23  தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாநில அளவிலான அடைவுத் திறன் தேர்வு நடத்தப்படவுள்ளது. இது எதிர் வரும் 2024 தேசிய அடைவுத் திறன் தேர்வுக்கான முன்னெடுப்பாகும். இந்த மாநில அளவிலான அடைவுத் திறன் தேர்வு தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 3,6,9 ஆகிய வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் நடத்தப்படுகிறது. அந்த தேர்வுகளை எளிமையாக எதிர்க்கொள்ள நமது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளமானது 25 வினாக்கள் கொண்ட சிறு சிறு தேர்வுகளாக நடத்தப்பட உள்ளது.  இந்த தேர்வானது உங்களுக்கு 30 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. இந்த தேர்வினை பயிற்சியாக எடுத்துக் கொண்டு எதிர் வரும் மாநில அளவிலான அடைவுத் தேர்வினை சிறப்பாக எதிர்க் கொள்ளவும்.

மாநில அளவிலான அடைவுத் தேர்வு - 2023
ஆறாம் வகுப்பு
தமிழ்
பகுதி - 1
மொத்த வினாக்கள் : 25                                                                                    மொத்த மதிப்பெண் : 25

51. அகத்தி, பசலை, முருங்கை இவற்றிற்கு வழங்கும் இலைப் பெயர்

அ) ஓலை     ஆ) கூந்தல்            இ) கீரை       ஈ) தழை

52. தழை என்னும் இலைப்பெயர் வழங்கப்படுவது

அ) வாழை    ஆ) நாணல்             இ)  நெல்      ஈ) மல்லி

53. மடல் என்னும் இலைப் பெயர் வழங்கப்படுபவது

அ) தாழை     ஆ) நாணல்             இ)  நெல்      ஈ) மல்லி

54. கமுகு என்பது எந்த மரத்தைக் குறிக்கிறது?

அ) தென்னை         ஆ) பனை     இ) பாக்கு      ஈ) அரசு

55. கவிதை வடிவங்களில் மாறுபட்டதைக் காண்க.

அ) செய்யுள்            ஆ) துளிப்பா            இ) ஹைக்கூ          ஈ) புதினம்

56. கீழ்க்கண்ட வற்றில் எது உரைநடை வடிவம்.

அ) கவிதை            ஆ) விடுகதை         இ) சிறுகதை           ஈ) துளிப்பா

57. கூற்று 1 : எண்ணைத்தை வெளிப்படுத்துவது இயல்தமிழ்

      கூற்று 2 : உள்ளத்தை மகிழ்விப்பது இசைத்தமிழ்

     கூற்று 3 : வாழ்வின் நிறைக்குறைகளைச் சுட்டிக்காட்டுவது நாடகத்தமிழ்

    காரணம் : தமிழுக்கு முத்தமிழ் என்னும் சிறப்புப் பெயர் உண்டு.

அ) கூற்றுகள் தவறு ; காரணம் சரி           ஆ) கூற்றுகள்  சரி ; காரணமும் சரி

இ) கூற்றுகள் மற்றும் காரணம் தவறு        ஈ) கூற்றுகள் சரி ; காரணம் தவறு

58. INTERNET – என்பதன் தமிழ் சொல்

அ) முகநூல்            ஆ) தேடுபொறி        இ) செயலி              ஈ) இணையம்

59. ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்சொல் இணையைக் காண்க.

1) புலனம்             -      FACEBOOK

2) இணையம்         -      WHATSAPP

3) முக நூல்          -      SEARCH ENGINE

4)  செயலி           -       APP

அ)      2        ஆ)     1        இ)      4        ஈ)      3

60. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அது எதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்?

அ) குறியீடு             ஆ) எண்                இ) எழுத்து             ஈ) ஒலி

61. “ எ “ என்பதன் தமிழெண் ______

அ) 8            ஆ)     9        இ) 7            ஈ) 5

62. பத்துப்பாட்டு, எட்டுத் தொகை சங்க இலக்கியங்கள். – இத்தொடரில் காணும் எண்ணுப்பெயர்களின் தமிழ் எண்களைக் காண்க.

அ) அ,க        ஆ) ரு,உ      இ) அ0,0ச     ஈ) க0, அ

63. பொருத்துக.

சொல்                -      இடம் பெற்ற நூல்

1. வேளாண்மை      -      அ. குறுந்தொகை

2. உழவர்             -      ஆ. கலித்தொகை

3. மருந்து            -      இ. நற்றிணை

4. மீன்                -      ஈ. அகநானூறு

அ) 1-ஈ         2-அ            3 – ஆ          4-இ            ஆ) 1-ஆ     2-இ  3-ஈ   4-அ

இ) 1 -அ       2-ஈ             3 – இ           4 – ஆ          இ) 1-இ        2- ஆ 3-அ   4- ஈ

64 . ‘ தொன்மை ‘ – என்னும் சொல்லின் பொருள்________

அ) புதுமை    ஆ) பழமை    இ) பெருமை ஈ) சீர்மை

65. ‘ இடப்புறம் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

அ) இடன் + புறம்   ஆ) இடை + புறம்        இ) இடம் + புறம்       ஈ) இடப் + புறம்

66. ‘ சீரிளமை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

அ) சீர் + இளமை  ஆ) சீர்மை + இளமை   இ) சீரி + இளமை  ஈ) சீற் + இளமை

67. சிலம்பு + அதிகாரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்____

அ) சிலம்பதிகாரம் ஆ) சிலப்பதிகாரம்  இ) சிலம்புதிகாரம் ஈ) சில பதிகாரம்

68. கணினி + தமிழ் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______

அ) கணினிதமிழ்  ஆ) கணினித்தமிழ்        இ) கணிணிதமிழ்  ஈ) கனினிதமிழ்

69 “ தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர்___

அ) கண்ணதாசன்    ஆ) பாரதியார் இ) பாரதிதாசன்         ஈ) வாணிதாசன்

70.“ மா “ என்னும் சொல்லின் பொருள்_____

அ) மாடம்      ஆ) வானம்    இ) விலங்கு  ஈ) அம்மா

71. நிலம்,தீ,நீர் வளி விசும்போடு ஐந்தும்

    கலந்த மயக்கம் உலகம் ஆதலின் – இவ்வடிகள் இடம் பெறும் நூல்

அ) கார்நாற்பது         ஆ) பதிற்றுப்பத்து              இ) நற்றிணை         ஈ) தொல்காப்பியம்

72. கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி  - இவ்வடிகள் இடம் பெறும் நூல்

அ) கார்நாற்பது        ஆ) பதிற்றுப்பத்து              இ) நற்றிணை         ஈ) தொல்காப்பியம்

73. நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு – இவ்வடிகள் இடம் பெற்ற நூல்

அ) கார்நாற்பது         ஆ) பதிற்றுப்பத்து              இ) நற்றிணை         ஈ) தொல்காப்பியம்

74. கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய

நரம்பின் முடிமுதிர் பரதவர் – இவ்வடிகள் இடம் பெற்ற நூல்

அ) கார்நாற்பது         ஆ) பதிற்றுப்பத்து              இ) நற்றிணை         ஈ) தொல்காப்பியம்

75. ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்

  நாழி முகவாது நால் நாழி – எனக் கூறுபவர்

அ) திருவள்ளுவர்    ஆ) ஒளவையார்      இ) நச்செள்ளையார்           ஈ) நல்லந்துவனார்


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post