அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளின் கனிவான வணக்கம். 3-11-23 தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாநில அளவிலான அடைவுத் திறன் தேர்வு நடத்தப்படவுள்ளது. இது எதிர் வரும் 2024 தேசிய அடைவுத் திறன் தேர்வுக்கான முன்னெடுப்பாகும். இந்த மாநில அளவிலான அடைவுத் திறன் தேர்வு தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 3,6,9 ஆகிய வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் நடத்தப்படுகிறது. அந்த தேர்வுகளை எளிமையாக எதிர்க்கொள்ள நமது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளமானது 25 வினாக்கள் கொண்ட சிறு சிறு தேர்வுகளாக நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வானது உங்களுக்கு 30 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. இந்த தேர்வினை பயிற்சியாக எடுத்துக் கொண்டு எதிர் வரும் மாநில அளவிலான அடைவுத் தேர்வினை சிறப்பாக எதிர்க் கொள்ளவும்.
பருவம் : 01 இயல் – 1
26. பாட்டு+
இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------
அ) பாட்டிருக்கும் ஆ)
பாட்டுருக்கும் இ) பாடிருக்கும் ஈ)
பாடியிருக்கும்
27. எட்டு +
திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------
அ) எட்டுத்திசை ஆ) எட்டிதிசை இ) எட்டுதிசை ஈ) எட்டிஇசை
28. பொய்
அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் – அன்பு
பூண்டவரின் இன்பப்
பாட்டிருக்கும் – இப்பாடலடியில் காணப்படும் எதுகையைக் காண்க.
அ) பொய் – அன்பு ஆ) அகற்றும் – இன்பம் இ) பூட்டறுக்கும் – பாட்டிருக்கும் ஈ) பொய் – பூண்டவர்
29. தனித்தமிழையும் தமிழுணர்வையும்
பரப்பிய பாவலர் ________
அ) பெருஞ்சித்திரனார் ஆ) கனகசுப்புரத்தினம் இ) ராமலிங்கம் ஈ) காசி ஆனந்தன்
30. தேன்
தோன்றியது போல மக்கள் நாவில் செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி! – என தமிழை
வாழ்த்திப்பாடுபவர்
அ) மாணிக்கம் ஆ) கனகசுப்புரத்தினம் இ) பாரதியார் ஈ) வாணிதாசன்
31. உலகில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை
அ) ஐந்தாயிரம் ஆ) ஆறாயிரம் இ) ஏழாயிரம் ஈ)
எட்டாயிரம்
32. மனிதரைப்
பிற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்தியும் மேம்படுத்தியும் காட்டுவது
________
அ) கல்வி ஆ) சிரிப்பு இ) அழுகை ஈ) மொழி
33. “ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி
போல்
இனிதாவது எங்கும் காணோம் – எனப்
பாடுபவர்
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) ராமலிங்கம் ஈ)
காசி ஆனந்தன்
34. தமிழில் தோன்றிய மிக தொன்மையான
நூல் _______
அ) திருக்குறள் ஆ) கம்பராமாயணம் இ) தொல்காப்பியம் ஈ)
சிலப்பதிகாரம்
பத்தியைப் படித்து வினாக்களுக்கு
விடையளி
தமிழ்மொழி
பேசவும் படிக்கவும் எழுதவும் உகந்த மொழி. உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றுபவை உயிர்மெய் எழுத்துகள். உயிர் எழுத்துகள், மெய்
எழுத்துகள் ஆகியவற்றின் ஒலிப்பு முறைகளை அறிந்து கொண்டால் உயிர்மெய் எழுத்துகளை
எளிதாக ஒலிக்கலாம். எழுத்துகளைக் கூட்டி ஒலித்தாலே தமிழ் படித்தல் இயல்பாக
நிகழ்ந்துவிடும். (எ.கா.)
அ + மு + து = அமுது.
தமிழ்மொழியை
எழுதும் முறையும் மிக எளிதுதான். இதற்கேற்ப,
தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
(எ.கா.) வலஞ்சுழி எழுத்துகள் - அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி
எழுத்துகள் - ட , ய, ழ
35. பேசவும் படிக்கவும் எழுதவும்
உகந்த மொழியாக கருதப்படும் மொழி
அ) தமிழ் ஆ) ஆங்கிலம் இ) இந்தி ஈ) உருது
36. உயிரும் மெய்யும் இணைவதால்
தோன்றுபவை
அ) உயிர் எழுத்து ஆ) மெய்யெழுத்து இ) உயிர்மெய்யெழுத்து ஈ)
ஆய்த எழுத்து
37. தமிழ் எழுத்துகள் பெரும்பாலும்
எந்த வகை எழுத்துகளாக உள்ளன.
அ) வலஞ்சுழி ஆ) இடஞ்சுழி இ) சுழிகளற்ற ஈ)
குறியீடு
38. எழுத்துகளை கூட்டி ஒலித்தாலே
இயல்பாக அமையும் மொழி ______
அ) வடமொழி ஆ) தமிழ் இ) ஆங்கிலம் ஈ)
இந்தி
39. கீழ்க்காணும் எழுத்துகளில்
வலஞ்சுழி எழுத்தினை அடையாளம் காண்க.
அ) ட ஆ) ய இ)
ழ ஈ) ஞ
40. கீழ்க்காணும் எழுத்துகளில்
இடஞ்சுழி எழுத்தினை அடையாளம் காண்க.
அ) அ ஆ) ட இ) ஒள ஈ) ண
41. தமிழென் கிளவியும்
அதனோ ரற்றே- என
தமிழைப் பற்றி குறிப்பிடும் நூல்________
அ) திருக்குறள் ஆ) தொல்காப்பியம் இ) சிலப்பதிகாரம் ஈ)
மணிமேகலை
42. இமிழ்கடல்
வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின – என தமிழ்நாட்டைப் பற்றிக் குறிப்பிடும்
நூல் _______
அ) திருக்குறள் ஆ) தொல்காப்பியம் இ) சிலப்பதிகாரம் ஈ)
மணிமேகலை
43. தமிழன் கண்டாய் – என தமிழன்
பற்றி குறிப்பிடும் நூல் _______
அ) திருக்குறள் ஆ) தொல்காப்பியம் இ) சிலப்பதிகாரம் ஈ)
தேவாரம்
44. ஒழுங்கு முறையைக் குறிக்கும்ச்
சொல் _______
அ) எளிமை ஆ) சீர்மை இ) பொதுமை ஈ)
நேர்மை
45. பாகற்காய் – சொல்லைப் பிரித்து
எழுதுக
அ) பாகு + காய் ஆ) பாகல் + காய் இ) பாகு + அல் + காய் ஈ)
பாகற் + அல் + காய்
46. திணையின் வகைகள் யாவை?
அ) 2 ஆ) 3 இ) 4 ஈ) 5
47. பொருத்துக
1. இலக்கண நூல்கள் - அ) சிலப்பதிகாரம், மணிமேகலை
2. சங்க இலக்கியங்கள் - ஆ)
நாலடியார் , திருக்குறள்
3. அற நூல்கள் - இ)
தொல்காப்பியம் , நன்னூல்
4. காப்பியங்கள் - ஈ)
எட்டுத் தொகை, பத்துப்பாட்டு
அ) 1 – இ 2-ஈ 3-ஆ 4-அ ஆ) 1-ஆ 2-ஈ 3-இ 4- அ இ) 1-ஈ 2- அ 3- ஆ 4-ஈ
ஈ) 1- அ 2- ஆ 3 – ஈ 4 – இ
48. பூவின் நிலைகளை சரியான முறையில்
வரிசைப்படுத்துக.
1. அரும்பு, ,முகை,மலர்,அலர்,வீ,செம்மல்,
மொட்டு
2.முகை,மலர்,அலர்,வீ, அரும்பு
,செம்மல், மொட்டு
3. அரும்பு, மொட்டு,முகை,மலர்,அலர்,வீ,செம்மல்
4. முகை,மலர், ,வீ, அரும்பு ,செம்மல்,
மொட்டு, அலர்
அ) 1 ஆ) 3 இ) 2 ஈ) 4
49. மரம்,
விலங்கு, பெரிய, திருமகள்,
அழகு, அறிவு, அளவு,
அழைத்தல், துகள், மேன்மை,
வயல், வண்டு எனும் பலப் பொருளைத் தரக் கூடிய
ஒர் எழுத்து சொல் _______
அ) ஐ ஆ) கோ இ)
மா ஈ) ஆ
50. தாவர இலைப் பெயர்களைப் பொருத்துக
1. ஆல்,அரசு - அ)
தோகை
2. அருகு, கோரை - ஆ)
தாள்
3. நெல், வரகு - இ)
இலை
4. கரும்பு, நாணல் - ஈ)
புல்
அ) 1-இ 2-ஈ 3-ஆ
4-அ ஆ) 1-ஈ 2-அ 3-ஈ 4 -ஆ இ) 1 -ஆ 2–இ 3- அ 4- ஈ
ஈ) 1- அ 2 – ஆ 3- இ 4 -ஈ
TO ATTEND THE ONLINE QUIZ