இளந்தமிழ்
ஏழாம் வகுப்பு
தமிழ்
இரண்டாம் பருவம்
வினா - வங்கி
_____________________________________________________________________________________________
பருவம் : 2 இயல் : 3
கலை, அழகியல் ஒரு வேண்டுகோள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மயிலும் மானும் வனத்திற்கு _________ தருகின்றன.
அ) களைப்பு ஆ) வனப்பு இ) மலைப்பு ஈ) உழைப்பு
2. மிளகாய் வற்றலின் _________ தும்மலை வரவழைக்கும்.
அ) நெடி ஆ) காட்சி இ) மணம் ஈ) ஓசை
3. அன்னை தான் பெற்ற ______ சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்.
அ) தங்கையின் ஆ) தம்பியின் இ) மழலையின் ஈ) கணவனின்
4. ‘வனப்பில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _
அ) வனம் + இல்லை ஆ) வனப்பு + இல்லை
இ) வனப்பு + யில்லை ஈ) வனப் + பில்லை
5. ‘வார்ப்பு + எனில்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) வார்ப்எனில் ஆ) வார்ப்பினில் இ) வார்ப்பெனில் ஈ) வார்ப்பு எனில்
நயம் அறிக.
ஒரே எழுத்திலோ ஓசையிலோ முடியும் இயைபுச் சொற்களைப் பாடலில் இருந்து எடுத்து எழுதுக.
குறுவினா
1. தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண் டியவை யாவை?
2. ஒரு கலை எப்பொழுது உயிர்ப்புடையதாக அமையும்?
சிறுவினா
1.சிற்பங்களும் ஓவியங்களும் எவ்வாறு அமைய வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?
சிந்தனை வினா
1. நீங்கள் ஒரு கலைஞராக இருந்தால் எத்தகைய படைப்புகளை உருவாக்குவீர்கள்?
PDF - FILE