இளந்தமிழ்
ஏழாம் வகுப்பு
தமிழ்
இரண்டாம் பருவம்
வினா - வங்கி
_____________________________________________________________________________________________
பருவம் : 2 இயல் : 2 வாழ்விக்கும் கல்வி
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் ______
அ) கல்வி ஆ) காலம் அறிதல்
இ) வினையறிதல் ஈ) மடியின்மை
2. கல்வியில்லாத நாடு ________ வீடு.
அ) விளக்கில்லாத ஆ) பொருளில்லாத
இ) கதவில்லாத ஈ) வாசலில்லாத
3. ‘பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்’ என்று பாடியவர் _
அ) திருக்குறளார் ஆ) திருவள்ளுவர் இ) பாரதியார் ஈ) பாரதிதாசன்
4. ‘உயர்வடைவோம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
அ) உயர் + வடைவோம் ஆ) உயர் + அடைவோம்
இ) உயர்வு + வடைவோம் ஈ) உயர்வு + அடைவோம்
5. இவை + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______
அ) இவைஎல்லாம் ஆ) இவையெல்லாம்
இ) இதுயெல்லாம் ஈ) இவயெல்லாம்
சொற்றொடரில் அமைத்து எழுதுக.
1. செல்வம் 2. இளமைப்பருவம் 3. தேர்ந்தெடுத்து
குறுவினா
1. மனிதப் பிறவிக்கும் பிற உயிரினங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?
2. கல்வி அறிவு இல்லாதவர்கள் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?
3. நூல்களை எவ்வாறு படிக்க வேண்டும்?
சிறுவினா
1. கல்வியே அழியாத செல்வம் என்பதை விளக்குக.
2. கல்வியையும் விளக்கையும் திருக்குறளார் எவ்வாறு ஒப்பிடுகிறார்?
சிந்தனை வினா
1. நல்ல நூலின் இயல்புகளாக நீங்கள் கருதுவன யாவை?
PDF - FILE