7TH-TAMIL-TERM2- QUESTION BANK - UNIT2 - OREYZHUTHU ORU MOLI,PAGUPATHAM,PAGAPATHAM

  

இளந்தமிழ்

ஏழாம் வகுப்பு

தமிழ்

இரண்டாம் பருவம்

வினா - வங்கி

_____________________________________________________________________________________________

ஓரெழுத்து ஒரு மொழி , பகுபதம் , பகாப்பதம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை _______.

அ) 40           ஆ) 42          இ) 44           ஈ) 46

 2. 'எழுதினான்' என்பது _______.

அ) பெயர்ப் பகுபதம் ஆ) வினைப் பகுபதம்

இ) பெயர்ப் பகாப்பதம் ஈ) வினைப் பகாப்பதம்

 3. பெயர்ப்பகுபதம் _______ வகைப்படும்.

அ) நான்கு ஆ) ஐந்து இ) ஆறு ஈ) ஏழு

 4. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு _______

அ) பகுதி       ஆ) விகுதி    இ) இடைநிலை       ஈ) சந்த

பொருத்துக.

1. பெயர்ப் பகுபதம் – வாழ்ந்தான்

2. வினைப் பகுபதம் – மன்

3. இடைப் பகாப்பதம் - நனி

4. உரிப் பகாப்பதம் - பெரியார்

சரியான பகுபத உறுப்பை எழுதுக.

போவாள் – போ + வ் + ஆள்

போ - _____________

வ் - _____________

ஆள் - _____________

நடக்கின்றான் - நட + க் + கின்று + ஆன்

நட - _____________

க் - _____________

கின்று - _____________

 ஆன் - _____________

பின்வரும் சொற்களைப் பிரித்துப் பகுபத உறுப்புகளை எழுதுக.

 1. பார்த்தான் 2. பாடுவார்

குறுவினா

1. ஓரெழுத்து ஒருமொழி என்றால் என்ன?

2. பதத்தின் இருவகைகள் யாவை ?

 3. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

சிறுவினா

 1. விகுதி எவற்றைக் காட்டும்?

2. விகாரம் என்பது யாது? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 3. பெயர்ப்பகுபதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

PDF - FILE

CLICK HERE  

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post