இளந்தமிழ்
ஏழாம் வகுப்பு
தமிழ்
இரண்டாம் பருவம்
வினா - வங்கி
_____________________________________________________________________________________________
பருவம் : 2 இயல் : 2
அழியாச்செல்வம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் _____
அ) வீடு ஆ) கல்வி இ) பொருள் ஈ) அணிகலன்
2. கல்வியைப் போல் _____ செல்லாத செல்வம் வேறில்லை.
அ) விலையில்லாத ஆ) கேடில்லாத இ) உயர்வில்லாத ஈ) தவறில்லாத
3. ‘வாய்த்தீயின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __
அ) வாய்த்து + ஈயீன் ஆ) வாய் + தீயின்
இ) வாய்த்து +தீயின் ஈ) வாய் + ஈயீன்
4. ‘கேடில்லை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___
அ) கேடி + இல்லை ஆ) கே +இல்லை
இ) கேள்வி + இல்லை ஈ) கேடு + இல்லை
5. எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) எவன்ஒருவன் ஆ) எவன்னொருவன்
இ) எவனொருவன் ஈ) ஏன்னொருவன்
குறுவினா
கல்விச் செல்வத்தின் இயல்புகளாக நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக.
சிறுவினா
கல்விச் செல்வம் குறித்து நாலடியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
சிந்தனை வினா
‘கல்விச் செல்வம் அழியாத செல்வ ம் எனப்படுவது ஏன்?’ – சிந்தித்து எழுதுக.
PDF - FILE