திருத்தப்பட்ட பதிப்பு
இரண்டாம் பதிப்பு
அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். 2023- 2024 ஆம் கல்வி ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மாணவச் செல்வங்கள் அனைவரும் இந்த பொதுத் தேர்வில் தேர்ச்சிப் பெற தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம் மனதார வாழ்த்துகிறது. இந்த கல்வி ஆண்டில் தமிழ் நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதக் கூடிய அனைத்து மாணவர்களும் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்ற ஆசிரியர்களாகிய உங்கள் பங்கு மிக முக்கியம். உங்களின் பங்கில் நமது வலைதளம் சிறு அணில் பிள்ளைபோல் உதவ காத்திருக்கிறது. 100% தேர்ச்சிக்கு சவாலாக இருப்பவர்கள் மெல்லக் கற்கும் மாணவர்கள். இவர்களை கரையேற்றுவதே நமது முதன்மையான நோக்கம். அதற்காக நாம் பல்வேறு வகையில் பாடங்களையும், வினாத்தாள்களையும் தயாரித்து வழங்கிவருகிறோம். உங்களின் உழைப்பு கடினமானது என்பதனை நாங்கள் அறிவோம். உங்களோடு சேர்ந்து பயணிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.அந்த வகையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதக் கூடிய மாணவர்களுக்கு பயனளிக்கக் கூடிய ஒரு வழிகாட்டியை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த வழிகாட்டியானது அரசு பொதுத் தேர்வுகள் விடைக்குறிப்புகள் அடிப்படையில் புத்தகத்தில் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடை தரப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டியானது அனைத்து வகை மாணவர்களுக்கும் உதவக்கூடியது. மீத்திற மாணவர்களுக்கு மட்டும் எட்டு மதிப்பெண் வினாக்களில் கூடுதல் தகவலை சேர்த்து எழுதினால் முழு மதிப்பெண் கிடைக்கும்.
குறிப்பாக..........
இது மெல்லக் கற்கும் மாணவர்கள் மற்றும் சராசரி மாணவர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனை சென்ற ஆண்டு பயின்ற மாணவர்களின் சராசரி 70%க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக 90 வரை மதிப்பெண்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த வழிகாட்டியானது மெல்லக் கற்கும் மற்றும் சராசரி மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியது. இதனுடைய மாதிரி பக்கங்கள் உங்களுக்கு இங்கே வழங்கப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள்...........
பின்பு உங்கள் வகுப்பு மாணவர்களுக்கு எத்தனை வழிகாட்டி தேவை என்பதனை எங்களுடைய புலன எண் 8072426391, 9976679097, 8667426866 என்ற எண்ணிற்கு தகவல் கொடுங்கள். உங்களின் பிரதிகளை உங்களின் முகவரிக்கு நாங்கள் அனுப்புகிறோம்.
உங்கள் ஆதரவே எங்களின் உழைப்பு
எது தேவையோ அது நமது பணி
என்றும் கல்விப்பணியில் உங்கள்
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள்
இளந்தமிழ்
சிறப்பு வழிகாட்டி
மாதிரி பக்கங்கள்
நீங்கள் இந்த மாதிரி பக்கத்தில் கொடுக்கப்ப்பட்டுள்ள வங்கி கணக்கு அல்லது GPAY பணம் செலுத்தலாம். நீங்கள் செலுத்திய பணத்தின் RECEIPT மேற்கண்ட புலன எண்ணிற்கு அனுப்பவும். விலை நிலவரம் சலுகைகள் மற்றும் அனுப்புகைக் கட்டணம் உங்களுக்கு நீங்கள் ஆர்டர் கொடுக்கும் போது தெரிவிக்கப்படும். உங்களின் ஆதரவினை என்றும் நாடும் உங்கள் தமிழ் விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம்.
வழிகாட்டி கிடைக்கப் பெற்றப்பின் அதன் நிறைகள் மற்றும் குறைகளை கனிவுடன் தெரிவிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன். ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டி இருப்பின் அதனை அடுத்த அச்சில் சரி செய்து விடலாம்.