10th-tamil-october exam-26-unit-6-question

 

கல்விவிதைகள் – மாதிரித் தேர்வு

அக்டோபர் மாதத் தேர்வு -2026

தமிழ்

வகுப்பு : 10                                                                                                         பாடம் : இயல் -6 

மதிப்பெண் : 50                                                                                             நேரம் : 1.30 மணி

அ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                                                                            5x1=5

1. கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்ததைத் தேர்க.

அ) 1991 டிசம்பர் 1     ஆ) 1856 நவம்பர் 1 இ) 1956 அக்டோபர் 13 ஈ) 1956 நவம்பர் 1

2. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்

அ) கம்பர்        ஆ) இளங்கோவடிகள்            இ) பாரதியார்               ஈ) பாரதிதாசன்

3.வலிமையை நிலைநாட்ட நடைபெற்ற போரில் வெற்றி பெற்ற அரசர் சூடி மகிழும் பூ.

அ) தும்பை      ஆ) வாகை                 இ) நொச்சி                 ஈ) கரந்தை

4.நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு – இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே

அ) பாண்டிய நாடு, சேர நாடு  ஆ)சோழ நாடு, சேர நாடு இ)சேரநாடு, சோழ நாடுஈ) சோழநாடு,பாண்டியநாடு

5. தமிழனத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ,சி கருதியது____

அ)திருக்குறள்           ஆ) புறநானூறு                       இ) கம்பராமாயணம்     ஈ) சிலப்பதிகாரம்

ஆ) பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி.                                                           3x1=3

“ பகர்வனர் திரிதரு நகரவீதியும்;

            பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

            கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்

            தூசும் துகிரும் ஆரமும் அகிலும்”

6. இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ) முத்தொள்ளாயிரம்                       ஆ) திருவிளையாடற்புராணம்          

இ) சிலப்பதிகாரம்                               ஈ) கம்பராமாயணம்

7. தூசும் துகிரும் – இலக்கணக் குறிப்புத் தருக    

அ) உவமைத் தொகை          ஆ) பண்புத்தொகை      இ) எண்ணும்மை              ஈ) அடுக்குத்தொடர்

8. காருகர் என்பதன் பொருள்

அ) பிட்டு விற்போர்    ஆ) வெற்றிலை விற்போர்    இ) ஓவியர்      ஈ) நெய்பவர்

இ) எவையேனும் எட்டு வினாக்களுக்கு விடையளி                                                         8x2=16

9. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ) ஒரு நாட்டின் வளத்தைப் பாடுவதைப் புலவர்கள் கவிமரபாகக் கொண்டிருந்தனர்.

ஆ) “ வெள்ளையனே வெளியேறு “ என்றத் தீர்மானம் 1942 ஆகஸ்டு 8ஆம் நாள் ஒரு மனதாக பம்பாயில் நிறைவேறியது.

10. உரைபாட்டுமடை என்றால் என்ன?

11. புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.

12. தொடரைப் படித்து விடையைத் தேர்ந்தெடு.

அ) கல் சிலை ஆகுமெனில், நெல்___________ஆகும்.

ஆ) விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை_____________

13. படிப்போம்; பயன்படுத்துவோம்!

அ)  MONARCHY            ஆ) REBELLION

14. பின்வரும் தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.

            அ) இல்லாமல் இருக்கிறது               ஆ) முன்னுக்குப் பின்

15. பொதுவியல் திணை பற்றிக் குறிப்பெழுதுக.

16. பகுபத உறுப்பிலக்கணம் தருக. : மயங்கிய

17. தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி, தமிழ் எண்ணுரு தருக.

            முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள்.

18. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.

ஈ) எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி.                                                      3x3=9

( வினா எண் : 23 – கட்டாய வினா )

19. சேர,சோழ,பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.

20. சிலப்பதிகாரம் பற்றி குறிப்பு வரைக.

21.” தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்”- இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

22. புறத்திணைகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

23. “ அள்ளல் பழனத்து “ எனத் தொடங்கும் முத்தொள்ளாயிரம் பாடலை எழுதுக.

உ) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்கவும்.                                          2x5=10

24. படிவம் நிரப்புக.

            636015 என்ற சேலம் மாவட்ட எருமாபாளயம் பஞ்சாயத்தில், ஆலமரத்துக்காடு தெருவில், கதவிலக்க எண் 5-2/504 ஜே என்னும் முகவரியில் வசித்து வரும் செல்வம் என்பவரின் மகள் திவ்யஸ்ரீ என்பவர் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்து, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி – குகை பகுதியில் உள்ள பள்ளியில் வேதியியல் பாடப்பிரிவில் ஆங்கில் வழியில் சேர விரும்புகிறார். அவருக்குரிய விண்ணப்படிவம் நிரப்புக.

25.காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

26. நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் “ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

ஊ) விரிவாக விடையளிக்கவும்.                                                                                    1x7=7

27.அ) சிலப்பதிகார மருவூர்ப் பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக   ( அல்லது )

ஆ) நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு – குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் “ மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் “ என்ற தலைப்பில் மேடை உரை அமைக்க.                                                                     


📚

இளந்தமிழ் PDF பதிவிறக்கம்

PDF கோப்பை பாதுகாப்பாகப் பதிவிறக்கம் செய்ய 15 விநாடிகள் காத்திருக்கவும்.

15

Preparing your download...

⬇ DOWNLOAD PDF

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post