10th-tamil-october exam-26-unit-5-question


கல்விவிதைகள் – மாதிரித் தேர்வு

அக்டோபர் மாதத் தேர்வு -2026

தமிழ்

வகுப்பு : 10                                                                                                         பாடம் : இயல் -5 மதிப்பெண் : 50                                                                                             நேரம் : 1.30 மணி

அ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                                                                            5x1=5

1. குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்____________________

அ) முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள்         ஆ) குறிஞ்சி,பாலை, நெய்தல் நிலங்கள்

இ) குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள்       ஈ) மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்

2. ‘ ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா ‘ எனக் கூறுபவர்

அ) கம்பர்        ஆ) இளங்கோவடிகள்            இ) பாரதியார்               ஈ) பாரதிதாசன்

3.சித்திரை, வைகாசி மாதங்களை __________ காலம் என்பர்.

அ) முதுவேனில்         ஆ) பின்பனி               இ) முன்பனி               ஈ) இளவேனில்

4. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

    றுண்டாகச் செய்வான் வினை – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி

அ) வஞ்சப் புகழ்ச்சி அணி     ஆ) எடுத்துக்காட்டு உவமையணி     இ) உருவக அணி            ஈ) உவமை அணி

5. மரபார்ந்த கலைவடிவங்கள் என்பவை

அ) குதிரையாட்டம்,புலியாட்டம்         ஆ) தப்பாட்டம், தேவராட்டம்             

இ) கரகாட்டம், காவடியாட்டம்           ஈ) தெருக்கூத்து, தோற்பாவைக் கூத்து

ஆ) பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி.                                                           3x1=3

          உறங்கு கின்ற கும்ப கன்ன உங்கள் மாய வாழ்வெலாம்

            இறங்கு கின்றது இன்று காணெ  ழுந்தி ராய் எழுந்திராய்

            கறங்கு போல விற்பி டித்த கால தூதர் கையிலே

            உறங்கு வாய் உறங்கு வாய் இனிக் கிடந்து உறங்குவாய்

6. இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ) முத்தொள்ளாயிரம்                       ஆ) திருவிளையாடற்புராணம்          

இ) முத்தொள்ளாயிரம்                        ஈ) கம்பராமாயணம்

7. இப்பாடலில் இடம் பெற்றுள்ள அடுக்குத் தொடர் சொற்களைத் தேர்க.

அ) உறங்கு கின்ற – இறங்கு கின்றது        ஆ) மாய வாழ்வெலாம் – கால தூதர் கையிலே

இ) உறங்குவாய் – உறங்குவாய்                   ஈ) கும்பகன்ன – எழுந்திராய்

8. கறங்கு என்பதன் பொருள்

அ) வில்          ஆ) அம்பு        இ) பொய்யான வாழ்வு            ஈ) காற்றாடி

இ) எவையேனும் எட்டு வினாக்களுக்கு விடையளி                                                         8x2=16

( வினா எண் : 18 – கட்டாய வினா )

9. கம்பர் எவ்வாறெல்லாம் புகழப்படுகிறார்?

10. சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.

11. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளிநகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?

12. தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக.

அ) அனைவரின் பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகரின் முகம் ___________

ஆ) வெயிலில் அலையாதே; உடல் _____________

13. படிப்போம்; பயன்படுத்துவோம்!

அ)  Story teller   ஆ) Aesthetics

14. அயற்கூற்றாக எழுதுக.

            “ கலைஞர், பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்” – பேராசிரியர் அன்பழகனார்.

15. தமிழ்மொழிக்குக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்த இரண்டினை எழுதுக.

16. விடைக்கேற்ற வினா அமைக்க.

     அ) கம்பராயணப் பாடல்கள் சந்த நயம் மிக்கவை.

      ஆ) “கவியரங்குகளே தமக்கு இளைப்பாறும் இன்னிழல் சோலைகளாயின!”என்பார் கலைஞர்.

17. தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.

    அ) அழைப்புமணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார். ( கலவைத் தொடராக்குக)

    ஆ) ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன், அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைப்பட்டது.( தனிச்சொற்றொடராக மாற்றுக )

18. “ உலகு “ என முடியும் குறளை எழுதுக.

ஈ) எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி.                                                      3x3=9

( வினா எண் : 23 – கட்டாய வினா )

19. வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.

20. மருத நிலத்தில் இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பரின் கலைநயத்துடன் எழுதுக.

21.’கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.’ – காலப் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.

22. போராட்டக் கலைஞர் குறித்து நீ அறிந்த செய்திகளை எழுதுக.

23. “ தண்டலை “ எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை எழுதுக.

உ) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்கவும்.                                          2x5=10

24. மொழிபெயர்க்க.

            Kalaignar karunanidhi is known for his  contributions to Tamil literature. His contributions cover a wide range; poems, letters, screenplays, novels, biographies, historical novels, stage-plays, dialogues and movie songs. He has written Kuraloviam for Thirukural, Tholkaappiya Poonga, Poombukar, as well as many poems, essays and books. Apart from literature, Karunanidhi has also contributed to the Tamil language through art and architecture. Like the Kuraloviyam, in which Kalaignar wrote about Thirukkural, through the construction of Valluvar Kottam he gave an architectural presence to Thiruvalluvar, in Chennai. At Kanyakumari, Karunanidhi constructed a 133-foot-high statue of Thiruvalluvar in honour of the scholar.

25.காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

26. நீங்கள் படித்து முடித்தபின் உங்கள் துறையின் அறிவைக் கொண்டு தமிழுக்குச் செய்யக்கூடிய தொண்டுகளை வரிசைப்படுத்துக.

ஊ) விரிவாக விடையளிக்கவும்.                                                                                    1x7=7

27.அ) போராட்டக் கலைஞர் – பேச்சுக் கலைஞர் – நாடகக் கலைஞர் – திரைக் கலைஞர் – இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.   ( அல்லது )

ஆ) உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.                                                                     

 click here


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post