10TH-TAMIL-ALL EXAM QUESTIONS - TWO MARKS - SALEM DT

 

பத்தாம் வகுப்பு - தமிழ்

இரண்டு மதிப்பெண் – வினாக்கள்

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்டவை.

( பருவத்தேர்வு -2,காலாண்டு,அரையாண்டு,அலகுத் தேர்வு -4, திருப்புதல் -2 )

இரு மதிப்பெண் வினாக்கள்

பகுதி - 1

( செய்யுள், உரைநடை )

1. பெருஞ்சித்திரனார் படைத்த நூல்கள் நான்கினை எழுதுக             

2.பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள் யாவை?

3. வசன கவிதை குறிப்பு வரைக. ( R ) ( R ) ( R )

4. விரிச்சி என்றால் என்ன?

5. இறடிப் பொம்மல் பெறுகுவீர் – இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக ( R )

6. நற்றிணை நூலில் விருந்தோம்பல் பண்பு குறித்து கருத்து யாது?

7. உயிரினும் ஓம்பப்படுவது எது? ஏன்?

8. ‘ நிமிர்ந்த மா அல் போல ‘ – உவமையை விளக்குக

9. பொருத்துக:

அ) கொண்டல் -  1) மேற்கு

ஆ) கோடை    -  2) தெற்கு

இ) வாடை      -  3) கிழக்கு

ஈ) தென்றல்     -  4) வடக்கு

10. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

11.மா அல் – பொருளும் இலக்கணக் குறிப்பும் தருக.

12. மெய்கீர்த்தி பாடுவதன் நோக்கம் என்ன? ( R ) ( R ) ( R )

13. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக. ( R )

14.பாசவர்,வாசவர்,பல்நிண விலைஞர், உமணர் சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்? ( R )

15. காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?

16. மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!

    முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! – இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

17. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

18. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

19. தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினையும் குறிப்பிட்டுக் காரணம் எழுதுக.

20. தஞ்சம் எளியர் பகைக்கு – இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும் எழுதுக.

21. குறிப்பு வரைக :- அவையம் ( R )

22. ‘கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

     உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது’

அ. அடி எதுகை எடுத்தெழுதுக            ஆ. இலக்கணக் குறிப்பு தருக: கொள்க, குரைக்க

23. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு – இத்தொடரை இரு தொடர்களாக்குக.

24. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

     வடுக்காண் வற்றாகும் கீழ் – இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி அதன் இலக்கணம் தருக.

25. ‘நச்சப்படாதவன்’ செல்வம் – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

26.  விடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

___________________________________________________________________________

இரு மதிப்பெண் வினாக்கள் / பகுதி - 2

( இலக்கணம் , மொழித்திறன் )

1. அளபெடை எத்தனை வகைப்படும் அவை யாவை?

2. வேங்கை  என்பதைத் தனிமொழியாகவும் தொடர்மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக. ( R )

3. கீழ்க்காணும் சொற்களின் கூட்டப் பெயர்களை கண்டுபிடித்து எழுதுக.

( குவியல், குலை, மந்தை, கட்டு )

கல் , பழம் , புல் , ஆடு

4.எழுது என்றாள் என்பது விரைவு காரணமாக “ எழுது எழுது என்றாள்” என அடுக்குத் தொடரானாது.சிரித்து பேசினார் என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்? ( R ) ( R )

5.பதிந்து – பகுபத உறுப்பிலக்கணம் தருக.

6.தொடரில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.

அ. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்         ஆ. கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்

7. கலைச்சொல் தருக.

அ) CLASSICAL LITERATURE  ( R )    ஆ) FOLK LITERATURE         

8. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக

அ) விடு - வீடு  ஆ) மடு - மாடு  

9. இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின் விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? இதோ இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா, இல்லையா? மேற்கண்ட  உரையாடலில் உள்ள வினா வகைகளை எடுத்தெழுதுக

10. வினா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

11. மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக

          கண்ணும் கருத்தும்

12. கலைச்சொல் அறிவோம்

அ) BELIEF ( R )          ஆ) DOCUMENT  ( R )

13.. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.

) புதுக்கோட்டை      ) கோயம்புத்தூர்      ) தஞ்சாவூர்             ) உதக மண்டலம்

14. பேச்சு வழக்கு சொல்லை எழுத்து வழக்காக மாற்றுக.

 ‘ ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே! அப்ப அவனுக்கு மூணு வயசு இருக்கும்’

15. ‘ அமர்ந்தான் ‘ – பகுபத உறுப்பிலக்கணம் தருக. ( R ) ( R )

16. அண்ணன் நேற்று வீட்டிற்கு வந்தது. அண்ணன் புறப்படும் போது அம்மா வழியனுப்பியது. ( வழுவை வழாநிலையாக மற்றுக )

17. பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக. ( தோற்பாவை, விருது, தோற்பவை, விருந்து )

அ. வாழ்க்கையில் _________ மீண்டும் வெல்லும். இதைத் தத்துவமாய்த் __________ கூத்து சொல்லும்.

ஆ. தெருக்கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே _______ அதில் வரும் காசு குறைந்தாலும் அதுவேயவர் ________

18. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:

          மலை – மாலை  ( R )

19. முன்னுக்குப் பின் – இச்சொற்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.

20. கலைச்சொல் தருக:-

அ) MODERN LITERATURE               ஆ. CONSONANT

21. பொருத்தமான நிறுத்தற் குறியிடுக:-

          பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி சோழன் கண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்குலேயருக்கு அடிமைப் பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப்போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் – மா.பொ.சி

22. எண்ணுப் பெயர்களைக் கண்டு தமிழ் எண்களில் எழுதுக. ( R )

அ) எறும்புந்தன் கையால் எண்சாண்             ஆ. நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

23. கலைச்சொல் தருக :-  VOWEL

24. வருகின்ற கோடைவிடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் – இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

25. கலைச்சொல் தருக.

அ. LUTE MUSIC          ஆ. GRAND DAUGHTER

26. காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.

27. கலைச்சொல் தருக.

அ. MYTH  ( R )

28. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.

) திருச்சிராப்பள்ளி     ) நாகப்பட்டினம்

29. ‘ அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

    பண்பும் பயனும் அது ‘ – இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?

30. தீவக அணியின் வகைகள் யாவை?

31. பாடலில் இடம் பெற்றுள்ள தமிழ்ப்புலவர்களின் பெயர்களைக் கண்டறிந்து எழுதுக.

 ‘ கம்பனும் கண்டேத்தும் உமறுப் புலவரை எந்தக்

  கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை ‘

32. சொற்களில் மறைந்துள்ள தொகைகளை எழுதுக.

அ. கீரி பாம்பு              ஆ. முத்துப்பல்

33. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக

அ) சிறு - சீறு   ஆ) விடு – வீடு  ( R )

34. பழமொழிகளை நிறைவு செய்க.

அ. ஒரு பானை ________             ஆ. உப்பிட்டவரை

35. கலைச்சொல் தருக.

அ. CASMIC RAYS               ஆ. INTELLECTUAL

36. “ நேற்று நான் பார்த்த அருச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்” என்று சேகர் என்னிடம் கூறினான். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக.

37. தொடரை அடைப்புக் குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.

அ. அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார். ( கலவைச் சொற்றொடராக மாற்றுக )

ஆ. ஓடிக் கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன் அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைப்பட்டது.

 ( தனிச்சொற்றொடராக மாற்றுக )

38.புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.

39. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக

அ) மலை - மாலை     ஆ) தொடு – தோடு

40. “ தம்பீ, எங்கே நிக்கிறே”?,” நீங்க சொன்ன எடத்துல தாண்ணே!, எதிர்த்தாப்புல ஒரு டீஸ்டால் இருக்குது” – இவ்வுரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.

41. சரியாக அமையும் சொற்களை எழுதுக. ( பூவில், எழுத்து, கரு )

அ. குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து __________

ஆ. மீன் இருப்பது நீரில் ; தேன் இருப்பது ________

42. பகுபத உறுப்பிலக்கணம் தருக.  : உரைத்த

43. உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக.

 மழை முகம் காணாப் பயிர்போல

44. குறிப்பைப் பயன்படுத்தி எதிர்மறையான சொற்கள் தருக

அ. மீளாத்துயர்           ஆ. கொடுத்துச் சிவந்த            இ. அருகில் அமர்க

45 பொருத்துக:-

1. ஆசுகவி                          -        இனிய ஓசைநயம் சிறக்கப் பாடுபவர்

2. மதுரகவி                        -        சொல்லணி அமைத்துப் பாடுபவர்

3. சித்திரகவி                      -        பாடு எனக் கூறியவுடன் பாடுபவர்

விடைக்கேற்ற வினா அமைக்க

1.வித்துவக்கோடு என்னும் ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது.

2. முல்லைப் பாட்டை எழுதியவர் நப்பூதனார்.

3. தமிழ் மரபியலில் ‘ பொன் ஏர் பூட்டுதல் ‘ என்ற பண்பாடு உள்ளது.

4. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்.

5. ஜூன் 15-ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடுகிறோம்

6. நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலையே தெருக் கூத்து.

7. காந்தியடிகள் நாட்டு விடுதலைக்காக அறவழியில் போராடினார்.

8. கீழடி அகழாராய்ச்சி மூலம் தமிழரின் தொன்மைக் காலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

9. பண்டைத் தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் விருந்தோம்பல் பண்பாடு செழித்திருந்தது,

10. தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர்.

 

திருக்குறள்

1.” தரும் “  என முடியும் குறளை எழுதுக.

2. “ வினை “ என முடியும் குறளை எழுதுக.

3.” முயற்சி “ எனத் தொடங்கும் குறளை எழுதுக.

4. “ எப்பொருள் “ எனத் தொடங்கும் குறளை எழுதுக. ( R )

5. “ விடும் “ என முடியும் குறளை எழுதுக.

6. “ பொருள் “ என முடியும் குறளை எழுதுக.

 CLICK HERE TO GET PDF

 

வெ.ராமகிருஷ்ணன்,

தமிழாசிரியர்

அ.உ.நி.பள்ளி, கோரணம்பட்டி,

 

  

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post