10TH-TAMIL-ALL EXAM QUESTIONS - THREE MARKS - SALEM DT

 

பத்தாம் வகுப்பு - தமிழ்

மூன்று மதிப்பெண் – வினாக்கள்

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்டவை.

( பருவத்தேர்வு -2,காலாண்டு,அரையாண்டு,அலகுத் தேர்வு -4, திருப்புதல் -2 )

மூன்று மதிப்பெண் வினாக்கள்

பகுதி - 1

( உரைநடை )

1.சோலைக் காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வது போல் ஓர் உரையாடல் அமைக்க.

2. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்? ( R )

3. தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் இடம் சுட்டிப் பொருள் விளக்குக. ( R ) ( R ) ( R )

4 சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக. ( R ) ( R )

5. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது. – இது போல் இளம் பயிர்வகைகள் ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க. ( R ) ( R )

6. ஊர்தி ஓட்டுபவர் ஒவ்வொருவரும் கையில் கட்டாயம் வைத்திருக்க வேண்டியவை எவை?

7. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.

உரைப்பத்தி வினா.

அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன. அறம் கூறும் அவையம் பற்றி அறம் அறக் கண்ட நெறிமான் அவையம் என்கிறது புறநானூறு. உறையூரிலிருந்து அறாவையம் தனிச் சிறப்புப் பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மதுரையில் இருந்த அவையம் பற்றி மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது. ( R )

அ. அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தவை எவை?

ஆ. அவையம் பற்றி புறநானூறு கூறுவது யாது?

இ. மதுரையில் இருந்த அவையம் பற்றிக் கூறும் நூல் எது?

--------------------------------------------------------------------------------------

2. சீன நாட்டில் காண்டன் நகருக்கு 500கல் வடக்கே சூவன்சென் என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்த காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். அதன் காரணமாக சீனாவில் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அது சீனப் பேரரசரான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது.என்பதனைக் குறிக்கும் தமிழ் கல்வெட்டு இன்றும் இக்கோயிலில் உள்ளது. இக்கோயிலில் சோழர் காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அ. காண்டன் நகர் எங்குள்ளது?

ஆ. சீனாவில் கட்டப்பட்டுள்ள சிவன் கோவில் யாருடைய ஆணையின் கீழ் கட்டப்பட்டது?

இ. சிவன் கோயிலில் எந்த அரசர் காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன?

--------------------------------------------------------------------------------------

3. தம் வீட்டுக்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல்.விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் கருதுகின்றனர்.உறவினர் வேறு விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். விருந்தே புதுமை என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

அ. விருந்தினர் குறித்து தொல்காப்பியர் கூறியது யாது?

ஆ. விருந்தோம்பல் என்றால் என்ன?

இ. இப்பத்திக்கு பொருத்தமான தலைப்பிடுக

-------------------------------------------------------------------------------------

4. பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல   காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத்  தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக ( வெள்ளத்தில் மூழ்குதல் ) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.

1. பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.

2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?

3. பெய்த மழைஇத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?

--------------------------------------------------------------------------------------

5. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். விருந்தே புதுமை என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை.அமிழ்தே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுப்பார் நல்லார். அத்தகையோரால் தான் உலகம் நிலைத்திருக்கிறது. விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. வீட்டிற்கு வந்தவருக்கு வறிய நிலையிலும் எவ்வழியிலேனும் முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர் நம் முன்னோர். நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்கிறது சிறுபாணாற்றுப்படை. விதைத்துவிட்டு வந்த நெல்லை அரிந்து வந்து பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரியபுராணத்தில் காட்டப்படுகிறது.

1. விருந்து குறித்து தொல்காப்பியம் குறிப்பிடுவது யாது?

2. விருந்தோம்பல் குறித்து சிறுபாணாற்றுப்படை கூறுவன யாவை?

3. நம் முன்னோர்களின் மகிழ்ச்சி எதில் உள்ளது?

4. பெரியபுராணத்தில் குறிப்பிடப்படும் விருந்தோம்பல் குறித்த செய்தியை எழுதுக.

5. பெண்களின் சிறந்த பண்புகளில் ஒன்று எது?

பகுதி - 2

( செய்யுள் )

1. காசிக்காண்டம் உணர்த்தும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கங்களைக் கூறு.         

2. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாக பாவலரேறு சுட்டுவன யாவை? ( R )

3. தமிழழகனார் தமிழையும்,கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக. ( R )

4. முல்லைநிலத்தில் இருந்தும் மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவுப் பொருட்கள் யாவை? ( R )

5. மாளாத காதல் நோயாளன் போல் – எனும் தொடரிலுள்ள உவமையை விளக்குக. ( R ) ( R )

6. வாளித்தண்ணீர், சாயக் குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை – இச்சொற்களைத் தொடர்புப்படுத்தி ஒரு பத்தி அமைக்க.

7. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்ததது ஏன்? விளக்கம் தருக.

8. வைத்தியநாத புரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.

9. ‘ சித்தாளின் மனச்சுமைகள்

    செங்கற்கள் அறியாது’ – இடஞ்சுட்டிப் பொருள் தருக.

10. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?

11. முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா.கவிபாடுகிறார்?

12. வள்ளுவம் சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.

மனப்பாடச்செய்யுள்

13. “வாளால்” எனத் தொடங்கும் நாலாயிரத் திவ்விய பிரபந்தப்பாடலை அடிபிறழாமல் எழுதுக ( R )

14.” தூசும் “ எனத்தொடங்கும் சிலப்பதிகாரப்பாடலை அடிபிறழாமல் எழுதுக. ( R )

15. .” மாற்றம் “ எனத்தொடங்கும் காலக்கணிதம் பாடலை அடிபிறழாமல் எழுதுக. ( R )

16.” சிறு தாம்புத் “ எனத்தொடங்கும் முல்லைப்பாட்டுப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.

17. ” அருளைப் பெருக்கி “ எனத்தொடங்கும் நீதிவெண்பா பாடலை அடிபிறழாமல் எழுதுக ( R ) ( R )

18. அன்னை மொழியே“ எனத்தொடங்கும்  பாடலை அடிபிறழாமல் எழுதுக ( R )

19. ” வெய்யோன் “ எனத்தொடங்கும் கம்ப ராமாயணம் பாடலை அடிபிறழாமல் எழுதுக

20. ” விருந்தினனாக “ எனத்தொடங்கும்  பாடலை அடிபிறழாமல் எழுதுக

___________________________________________________________________________

 பகுதி - 3

( இலக்கணம் )

1. வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்

 கோலோடு நின்றான் இரவு – குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

2. வழு எத்தனை வகைப்படும்? அவை யாவை? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

3. தற்குறிப்பேற்ற அணியைச் சான்றுடன் விளக்குக. ( R ) ( R )

4.ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

5.அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது -இவ்வினை முற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

6.வினா எத்தனை வகைப்படும்? அவை யாவை? ( R )

7. கண்ணே கண்ணுறங்கு

  காலையில் நீயெழும்பு

  மாமழை பெய்கையிலே

 மாம்பூவே கண்ணுறங்கு

 பாடினேன் தாலாட்டு

 ஆடி ஆடி ஓய்ந்துறங்கு – இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.  

8. தோட்டத்தில் மல்லிகைப் பூ பறித்த பூங்கொடி வரும் வழியில் ஆடு மாடுகளுக்குத் தண்ணீர் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க் கடிகாரத்தில் மணி பார்த்தாள்.

- இப்பத்தியில் உள்ள தொகைநிலைத் தொடர்களின் வகைகளைக் குறிப்பிட்டு விரித்து எழுதுக.

9. தீவக அணியைச் சான்றுடன் விளக்குக.

10. பிறமொழிச்சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றி எழுதுக.

          உங்களிடம் ஏழு கோல்டு பிஸ்கட் உள்ளது. அதில் ஒன்று மட்டும் எடை குறைவானது. உங்களிடம் உள்ள ஒரு தராசை இரு முறைகள் மட்டுமே யூஸ் பண்ணி வெயிட் குறைந்த கோல்டு பிஸ்கட்டைக் கண்டுபிடிக்கவும்.

11. சொற்பொருள் பின்வருநிலை அணியை விளக்குக.

 

அலகிட்டு வாய்பாடு தருக

12. வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்

    கோலோடு நின்றான் இரவு

13. கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

   அருவினையும் மாண்ட தமைச்சு

14. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

    இன்மை புகுத்தி விடும்.

15. பொறியின்மை யார்க்கும் பழிஅன் றறிவறிந்

   தாள்வினை இன்மை பழி

16. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

   சுற்றுமாச் சுற்றும் உலகு  ( R )

  CLICK HERE TO GET PDF

வெ.ராமகிருஷ்ணன்,

தமிழாசிரியர்

அ.உ.நி.பள்ளி, கோரணம்பட்டி,

 

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post