10TH-TAMIL-ALL EXAM QUESTIONS - FIVE MARKS - SALEM DT

 

பத்தாம் வகுப்பு - தமிழ்

ஐந்து மதிப்பெண் – வினாக்கள்

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்டவை.

( பருவத்தேர்வு -2,காலாண்டு,அரையாண்டு,அலகுத் தேர்வு -4, திருப்புதல் -2 )

ஐந்து மதிப்பெண் வினாக்கள்

செய்யுள்

1.செய்யுள் நயம் பாராட்டல்   ( R )

          நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

                   நேர்ப்பட வைத்தாங்கே

          குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு

                   கோல வெறிபடைத்தோம்;

          உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கனும்

                   ஓட்டி மகிழ்ந்திடுவோம்

          பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு

                   பாடுவதும் வியப்போ? – மகாகவி பாரதியார்

2. சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும், அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.( R )

3. முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக. ( R )

4 இறைவன்,புலவன் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக. ( R ) ( R )

5. நயம் பாராட்டுக:-

          “ கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த

          குளிர்தருவே தருநிழலே நிகழ்கனிந்த கனியே

          ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே

          உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே” - வள்ளலார்

6. கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க. ( R )

7. மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ்வாழ்த்தையும் ஒப்பிட்டு எழுதுக.

8. இரண்டாம் இராசராச சோழன் – மெய்க்கீர்த்தி பாடலின் நயத்தை விளக்குக.

9. நிகழ்கலைகள் குறித்து நீங்கள் அறிந்தவற்றை தொகுத்து எழுதுக

10. நயம் பாராட்டுக

          தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே

          தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே

          ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே

          உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே

          வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே

          மாந்தருக் கருகண்ணா வயங்குநன் மொழியே

          தானனி சிறப்புறந் தனித்தமிழ் மொழியே

          தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே          - கா. நமச்சிவாயர்

கடித வினாக்கள்

1. மாநில அளவில் நடைபெற்ற ‘ மரம் இயற்கையின் வரம் ‘ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக. ( R ) ( R ) ( R ) ( R )

2.. உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலைக்கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு கடிதம் வரைக. ( R ) ( R )

3. நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் ‘ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் ‘ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்கு கடிதம் எழுதுக. ( R )

4. உங்க:ள் தெருவில் பழுதடைந்த மின் விளக்குகளால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு எற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.

5. பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படத்தையும் அதற்குப் பாராட்டு பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் வரைக.

6. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ‘ மரம் நடு ‘ விழாவுக்கு, வந்திருந்த சிறப்பு விருந்தினருக்கும் பெற்றோருக்கும் பள்ளியின் ‘ பசுமைப் பாதுகாப்புப் படை ‘ சார்பாக நன்றியுரை எழுதுக. ( R )

7. மென்திறன் பேசியால் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்து உன் சகோதரிக்கு மடல் எழுதுக.

படிவ வினாக்கள்

1. நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக. ( R )

2. மேல்நிலை சேர்க்கை விண்ணப்பப் படிவத்தை நிரப்புக.

3. எழுத்தர் பணி வேண்டி தன் விவரப் பட்டியலை நிரப்புக.

4. வீட்டு எண்: 48, கவிமணி தெரு, கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பினை நிறைவு செய்த தமிழரசனின் மகன் இனியன் மேல்நிலை வகுப்பில் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை இனியனாகப் பாவித்து உரிய படிவத்தைத் தேர்ந்தெடுத்து நிரப்புக.

5. 4/45, பூங்கா நகர், காஞ்சிபுரம் மாவட்டத்தில்  வசித்து வரும் கருப்பையாவின் மகள் இனியா நூலகத்தில் உறுப்பினராகச் சேர உள்ளார். தேர்வர் தன்னை இனியாவாகப் பாவித்து உரிய படிவத்தில் நிரப்புக.

வினா எண் – 42 ( மொழிபெயர்ப்பு, நிற்க அதற்குத் தக. மொழித்திறன் )

மொழிபெயர்ப்பு

1. The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark.The milky clouds start their wandering.The colourful birds start twitting their morning melodies in percussion.The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant. ( R ) ( R )

2. Malar: Devi,switch off the lights when you leave the room

Devi : Yeah! We have to save electricity

Malar : Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.

3. Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had  the most fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight,seasonal rains and the fertility of the soil.Among these elements of nature,sunlight was considered indispensible by the ancient Tamils.

4. 1. Education is what remains after one has forgotten what one has learned in school – Albert Einstein ( R )

   2. Tomorrow is often the busiest day of the week – Spanish proverb

   3. It is during our darkest moment that we must focus to see the light – Aristotle

   4. Success is not final,failure is not fatal.It is the courage to continue that counts – Winston Churchill

5.       Wondering at the cute music

          Coming from the chamber

          Entered I to to look up to in still

          My grand – daughter

          Learning by rote the verses

          Of a didactic compilation

வாழ்வியல் வினா

நிற்க அதற்குத் தக

1. பள்ளியிலும் வீட்டிலும் உனது செயல்கள் எவ்வாறு இருக்கும் என வேறுபடுத்திக் காட்டுக. ( R ) ( R )

2. இயற்கைச் சீற்றங்களுள் ஒன்றான புயல் ஏற்படும் போது நாம் செய்ய வேண்டுவன செய்யக் கூடாதனவற்றையும் புயல்  அறிவிப்பைக் கேட்ட நீங்கள்,உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்துக.

3. தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக் கொண்டிருக்கும் தம்பி; திறன் பேசியிலேயே  விளையாடிக் கொண்டிருக்கும் தங்கை; காணொளி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன். எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழி. இவர்கள் எந்நேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள்! இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட நீங்கள் செய்யும் முயற்சிகளை பட்டியலிடுக.

( R )

மொழித்திறன் வினாக்கள்

( மாறுபட்டு கேட்கப்பட்டவை )

1.தொகைச் சொற்களை பிரித்து எழுதி, தமிழ் எண்ணுரு தருக.

          மூவேந்தர்களால் நாற்றிசையும், போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே! தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இரு திணையே! ஐந்திணைகளையும் அழகுற தந்தாய். அதனால் நானிலத்தில் உன் பெருமை எட்டுத்திக்கும் பரவி நிற்கிறது.

2. பொருத்தமானவற்றை சொற்பெட்டியில் கண்டு எழுதுக.

( தங்கும், அவிழும்,தயங்கும், தோற்பாவை, விருது, தோற்பவை, கவிழும், விருந்து )

அ. காலை ஒளியினில் மலரிதழ் ________ சோலைப் பூவினில் வண்டினம் ________

ஆ. மலை முகட்டில் மேகம் ______ அதைப் பார்க்கும் மனங்கள் செல்லத்___________

இ. வாழ்க்கையில் _________ மீண்டும் வெல்லும்.இதைத் தத்துவமாய்த் _________ கூத்து சொல்லும்.

ஈ. தெருக் கூத்தில் நடிகருக்குக் கைத்தட்டலே __________ அதில் வரும் காசு குறைந்தாலும் அதுவே அவர் ______

3. பின்வரும் உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக

 “ தம்பீ? எங்க நிக்கிற?”

நீங்க சொன்ன எடத்துலதாண்ணே! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது.

 அங்ஙனக்குள்ளேயே டீ சாப்டுட்டு, பேப்பர்ப் படிச்சிக்கிட்டு இரு…… நா வெரசா வந்துருவேன்.

அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே! அவெனப் பார்த்து ரொம்ப நாளாச்சு!

4. ஊர்பெயர்களின் மரூஉவை எழுதுக

1. உதக மண்டலம்    2. நாகப்பட்டினம்       3. புதுச்சேரி        4. கும்பகோணம்         5. மயிலாப்பூர்

5. வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.

அ. ஊட்டமிகு உணவு உண்டார்.அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

ஆ. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.

இ. நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர்.

ஈ. பொது அறிவு நூல்களைத் தேடிப்படித்தார். போட்டித் தேர்வில் வென்றார்.

 CLICK HERE TO GET PDF

வெ.ராமகிருஷ்ணன்,

தமிழாசிரியர்

அ.உ.நி.பள்ளி, கோரணம்பட்டி,

 

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post