10TH-TAMIL-ALL EXAM QUESTIONS - EIGHT MARKS - SALEM DT

 

பத்தாம் வகுப்பு - தமிழ்

எட்டு மதிப்பெண் – வினாக்கள்

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்டவை.

( பருவத்தேர்வு -2,காலாண்டு,அரையாண்டு,அலகுத் தேர்வு -4, திருப்புதல் -2 )

எட்டு மதிப்பெண் வினாக்கள்

உரைநடை

1. தமிழரின் சொல்வளம் பற்றியும், புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும், தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்புகளை எழுதுக ( R ) ( R ) ( R ) ( R ) ( R )

2.. நிகழ்கலை வடிவங்கள் – அவை நிகழும் இடங்கள் – அவற்றின் ஒப்பனைகள் – சிறப்பும் பழமையும் – இத்தகைய மக்கள் கலைகள் அருகிவருவதற்கான காரணங்கள் – அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன – இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம் எழுதுக.

3. ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை, வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க

4. நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு – குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் ‘ மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும் ‘ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

துணைப்பாடம்

1. அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினை கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க. ( R ) ( R )

2. புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள  வருணனைகளும், அடுக்க்குத் தொடர்களும், ஒலிக்குறிப்பு சொற்களும் புயலில் தோணி படும் பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?

3. மங்கையராய் பிறப்பதற்கே என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள சாதனைப் பெண்மணிகள் இருவரைப் பற்றி எழுதுக.

4. கற்கை நன்றே கற்கை நன்றே

   பிச்சை புகினும் கற்கை நன்றே என்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க. ( R ) ( R )

5. அழகிரி சாமியின் ஒருவன் இருக்கிறான் சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து எழுதுக. ( R )

6.குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.

மாணவன் – கொக்கைப்ப்போல, கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க வேண்டும். கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக் கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணர முடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் மகிழ்ச்சி.

பொதுக்கட்டுரை

1. கட்டுரை எழுதுக : விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் ( R ) ( R )

2..மதிப்புரை எழுதுக:- நூலின் தலைப்பு – நூலின் மையப் பொருள் – மொழி நடை – வெளிப்படுத்தும் கருத்து – நூலின் நயம் – நூல் கட்டமைப்பு – சிறப்புக் கூறு – நூல் ஆசிரியர். ( R )

3.உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக. ( R ) ( R )

4. குறிப்புரைகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

முன்னுரை – சாலைப் பாதுகாப்பு உயிர்ப்பாதுகாப்பு – சாலை விதிகள் – ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள் – விபத்துகளைத் தவிர்ப்போம் – விழிப்புணர்வு தருவோம் – முடிவுரை.

5.முன்னுரை – உலகை மிரட்டும் கொடிய நோய்கள் – கொரோனா – பாதுகாக்கும் வழிமுறைகள் – தடுப்பூசியின் இன்றியமையாமை – முன்களப் பணியாளர்கள் – அரசின் சாதனைகள் – மீண்டும் வராமல் தடுக்கும் வழிவகை – நம் கடமை நம் உயிர் – முடிவுரை.

6. குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

முன்னுரை – இயற்கையோடு இயைந்து வாழ்வோம் – வானத்து மழை நீரைப் பூமியில் காப்போம் – மழைக்கு ஆதாரமான மரங்களை வளர்ப்போம் – முடிவுரை.

  CLICK HERE TO GET PDF

வெ.ராமகிருஷ்ணன்,

தமிழாசிரியர்

அ.உ.நி.பள்ளி, கோரணம்பட்டி,

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post