8TH-TAMIL-ONEWORD-QUESTION BANK - PDF

 

எட்டாம் வகுப்பு

தமிழ் / பயிற்சிப்புத்தகம்

ஒரு மதிப்பெண் வினாக்கள்

இயல் – 1

தமிழ்மொழி வாழ்த்து

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் _____.

அ) வைப்பு ஆ) கடல் இ) பரவை ஈ) ஆழி

2. ‘என்றென்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

அ) என் + றென்றும் ஆ) என்று + என்றும் இ) என்றும் + என்றும் ஈ) என் + என்றும்

3. ‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

அ) வான + மளந்தது ஆ) வான் + அளந்தது இ) வானம் + அளந்தது ஈ) வான் + மளந்தது

4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ ) அறிந்ததுஅனைத்தும் ஆ) அறிந்தனைத்தும் இ) அறிந்ததனைத்தும்   ஈ) அறிந்துனைத்தும்

5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ ) வானம்அறிந்து ஆ) வான்அறிந்த இ) வானமறிந்த ஈ) வான்மறிந்த

ஆ .தமிழ்மொழி வாழ்த்து - இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.

 _____ _____ _____ _____ _____ _____ _____ _____ _____ _____ _____ _____ _____

 

தமிழ்மொழி மரபு

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பறவைகள் _________ பறந்து செல்கின்றன.

அ) நிலத்தில்             ஆ) விசும்பில்             இ) மரத்தில்              ஈ) நீரில்

2. இயற்கையைப் போற்றுதல் தமிழர் __________.

அ) மரபு                    ஆ) பொழுது              இ) வரவு                  ஈ) தகவு

3. 'இருதிணை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

அ) இரண்டு + திணை ஆ) இரு + திணை       இ) இருவர் + திணை ஈ) இருந்து + திணை

4. 'ஐம்பால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

அ) ஐம் + பால்            ஆ) ஐந்து + பால்         இ) ஐம்பது + பால்       ஈ) ஐ + பால்

தமிழ்வரிவடிவ வளர்ச்சி

அ.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற _____ காரணமாக அமைந்தது.

அ) ஓவியக்கலை                  ஆ) இசைக்கலை                 இ) அச்சுக்கலை         ஈ) நுண்கலை

2. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ______ என அழைக்கப்படுகிறது.

அ) கோட்டெழுத்து                 ஆ) வட்டெழுத்து                   இ) சித்திர எழுத்து       ஈ) ஓவிய எழுத்து

3. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் _____.

அ) பாரதிதாசன்                    ஆ) தந்தை பெரியார்              இ) வ.உ. சிதம்பரனார் ஈ) பெருஞ்சித்திரனார்

 

ஆ.கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் _ _ _ _ _ என அழைக்கப்பட்டன.

2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் ______.

எழுத்துகளின் பிறப்பு

அ.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் _____.

அ) இ,         ஆ) உ,                இ) எ,          ஈ) அ,

2. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ______.

அ) மார்பு         ஆ) கழுத்து               இ) தலை        ஈ) மூக்கு

3. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் _____.

அ) தலை        ஆ) மார்பு                  இ) மூக்கு        ஈ) கழுத்து

4. நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் _____.

அ) க், ங்          ஆ) ச், ஞ்         இ) ட், ண்        ஈ) ப், ம்

5. கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து _____.

அ) ம்             ஆ) ப்             இ) ய்             ஈ) வ்

ஆ.பொருத்துக.

க், ங் - நாவின் இடை, அண்ணத்தின் இடை

ச், ஞ் - நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி

ட், ண் - நாவின் முதல், அண்ணத்தின் அடி

த், ந் - நாவின் நுனி, அண்ணத்தின் நுனி

ஓடை

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பள்ளிக்குச் சென்று கல்வி __________ சிறப்பு.

அ) பயிலுதல்    ஆ) பார்த்தல்    இ) கேட்டல்     ஈ) பாடுதல்

2. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ________.

அ) கடல்         ஆ) ஓடை        இ) குளம்        ஈ) கிணறு

3. ‘நன்செய்’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

 அ) நன் + செய்                    ஆ) நன்று + செய்        இ) நன்மை + செய்      ஈ) நல் + செய்

4. ‘நீளுழைப்பு’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.

அ) நீளு + உழைப்பு     ஆ) நீண் + உழைப்பு   இ) நீள் + அழைப்பு      ஈ) நீள் + உழைப்பு

5. சீருக்கு + ஏற்ப – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் __________.

அ) சீருக்குஏற்ப           ஆ) சீருக்கேற்ப           இ) சீர்க்கேற்ப            ஈ) சீருகேற்ப

6. ஓடை + ஆட – என்பதனைச் சேர்த்தெ ழுதக் கிடைக்கும் சொல் _________.

அ) ஓடைஆட             ஆ) ஓடையாட            இ) ஓடையோட          ஈ) ஓடைவாட

கோணக்காத்துப் பாட்டு

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வானில் கரு _____ தோன்றினால் மழை பொழியும் என்பர்.

அ) முகில்                  ஆ) துகில்                  இ) வெயில்                ஈ) கயல்

2. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் _____யும் ஓட்டிவிடும்.

அ) பாலனை              ஆ) காலனை            இ) ஆற்றலை             ஈ) நலத்தை

3. ‘விழுந்ததங்கே ’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்ப து _____.

அ) விழுந்த + அங்கே    ஆ) விழுந்த + ஆங்கே   இ) விழுந்தது + அங்கே ஈ) விழுந்தது + ஆங்கே

 4. ‘செத்திறந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) செ + திறந்த          ஆ) செத் து + திறந்த     இ) செ + இறந்த          ஈ) செத் து + இறந்த

5. பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) பருத்திஎல்லாம்      ஆ) பருத்தியெல்லாம்   இ) பருத்தெல்லாம்       ஈ) பருத்திதெல்லாம்

நிலம் பொது

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. செவ்விந்தியர்கள் நிலத்தைத் _____ மதிக்கின்றனர்.

அ) தாயாக                ஆ) தந்தையாக                    இ) தெய்வமாக           ஈ) தூய்மையாக

2. ‘இன்னோசை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) இன் + ஓசை         ஆ) இனி + ஓசை                  இ) இனிமை + ஓசை   ஈ) இன் + னோசை

 3. பால் + ஊறும் என்பதனை ச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) பால்ஊறும்           ஆ) பாலூறும்                       இ) பால்லூறும்           ஈ) பாஊறும்

தொடரில் அமைத்து எழுதுக.

1. வேடிக்கை - ___________________________________________

2. உடன்பிறந்தார் - ___________________________________________

வினைமுற்று

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மாடு வயலில் புல்லை மேய்ந்தது. – இத்தொடரிலுள்ள வினைமுற்று _____.

அ) மாடு                   ஆ) வயல்                 இ) புல்                     ஈ) மேய்ந்தது

2. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று _____.

அ) படித்தான்             ஆ) நடக்கிறான்          இ) உண்பான்           ஈ) ஓடாது

3. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் _____.

அ) செல்க                 ஆ) ஓடு                    இ) வாழ்க                 ஈ) வாழிய

 

திருக்குறள்

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. புகழாலும் பழியாலும் அறியப்படுவது _______

அ. அடக்கமுடைமை    ஆ. நாணுடைமை                இ. நடுவுநிலைமை              ஈ. பொருளுடைமை

2. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் ______

அ. வலிமையற்றவர்    ஆ. கல்லாதவர்          இ. ஒழுக்கமற்றவர்               ஈ. அன்பில்லாதவர்

3. ‘ வல்லுருவம் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____

அ. வல் + உருவம்       ஆ. வன்மை + உருவம் இ. வல்ல + உருவம்    ஈ. வல்லு + உருவம்

4. நெடுமை + தேர் என்பதனைச் சேர்தெழுதக் கிடைக்கும் சொல் _____

அ. நெடுதேர்             ஆ. நெடுத்தேர்           இ. நெடுந்தேர்           ஈ. நெடுமை + தேர்

5. ‘ வருமுன்னர் ‘ எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி ______

அ. எடுத்துக்காட்டு உவமை அணி       ஆ. தற்குறிப்பேற்ற அணி        இ. உவமை அணி   ஈ. உருவக அணி

நோயும் மருந்தும்

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. உடல்நலம் என்பது ______ இல்லாமல் வாழ்தல் ஆகும்.

அ. அணி                  ஆ. பணி                  இ. பிணி                  ஈ. மணி

2. நீலகேசி கூறும் நோயின் வகைகள் ______

அ. இரண்டு              ஆ. மூன்று                இ. நான்கு                ஈ. ஐந்து

3. ‘ இவையுண்டார்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______

அ. இ + யுண்டார்        ஆ. இவ் + உண்டார்    இ. இவை + உண்டார் ஈ. இவை + யுண்டார்.

4. தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______

அ. தாம்இனி              ஆ. தாம்மினி              இ. தாமினி                ஈ. தாமினி

வருமுன் காப்போம்

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. காந்தியடிகள் _____ போற்ற வாழ்ந்தார்.

அ) நிலம்                  ஆ) வையம்              இ) களம்                  ஈ) வானம்

2. ’நலமெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

 அ) நலம் + எல்லாம்     ஆ) நலன் + எல்லாம்    இ) நலம் + எலாம்       ஈ) நலன் + எலாம்

3. இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்_____.

அ) இடவெங்கும்         ஆ) இடம்எங்கும்         இ) இடமெங்கும்         ஈ) இடம்மெங்கும

ஆ.வருமுன்காப்போம் - இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

 

 

தமிழர் மருத்துவம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு _____ பயன்படுத்தினர்.

அ) தாவரங்களை        ஆ) விலங்குகளை       இ) உலோகங்களை    ஈ) மருந்துகளை

2. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது _____ நீட்சியாகவே உள்ளது.

அ) மருந்தின்             ஆ) உடற்பயிற்சியின்    இ) உணவின்           ஈ) வாழ்வின்

3. உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று _____.

அ) தலை வலி            ஆ) காய்ச்சல்              இ) புற்றுநோய்           ஈ) இரத்தக் கொதிப்பு

4. சமையலறையில் செலவிடும் நேரம் _____ செலவிடும் நேரமாகும்.

அ) சுவைக்காக          ஆ) சிக்கனத்திற்காக   இ) நல்வாழ்வுக்காக    ஈ) உணவுக்காக

எச்சம்

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் _____ எனப்படும்.

அ) முற்று        ஆ) எச்சம்                 இ) முற்றெச்சம்           ஈ) வினையெச்சம்

2. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் _____.

அ) படித்து       ஆ) எழுதி                 இ) வந்து                  ஈ) பார்த்த

3. குறிப்பு வினையெச்சம் _____ வெளிப்படையாகக் காட்டாது.

அ) காலத்தை   ஆ) வினையை          இ) பண்பினை          ஈ) பெயரை

ஆ.பொருத்துக.

நடந்து - முற்றெச்சம்

பேசிய - குறிப்புப் பெயரெச்சம்

எடுத்தனன் உண்டான் - பெயரெச்சம்

பெரிய – வினையெச்சம்

இ. கீழ்க்காணும் சொற்களைப் பெயரெச்சம், வினையெச்சம் என வகைப்படுத்துக.

நல்ல, படுத்து, பாய்ந்து, எறிந்த, கடந்து, வீழ்ந்த , மாட்டிய, பிடித்து, அழைத்த, பார்த்து.

கல்வி அழகே அழகு

அ.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கற்றவருக்கு அழகு தருவது ________.

அ) தங்கம்                 ஆ) வெள்ளி               இ) வைரம்               ஈ) கல்வி

2. 'கலனல்லால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

அ) கலன் + லல்லால்    ஆ) கலம் + அல்லால்    இ) கலன் + அல்லால்   ஈ) கலன் + னல்லால

ஆ.சொற்றொடரில் அமைத்து எழுதுக.

1. அழகு                    2. கற்றவர்               3. அணிகலன்

 

புத்தியைத் தீட்டு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் ______ இன்றி வாழ்ந்தார்.

அ. சோம்பல்    ஆ. அகம்பாவம்          இ. வருத்தம்              ஈ. வெகுளி

2. ‘ கோயிலப்பா ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ. கோ + அப்பா          ஆ. கோயில் + லப்பா    இ. கோயில் + அப்பா    ஈ. கோ + இல்லப்பா

3. பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ. பகைவென்றாலும்   ஆ. பகைவனென்றாலும்        இ. பகைவன் வென்றாலும்      ஈ. பகைவனின்றாலும்

பல்துறைக் கல்வி

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது _____.

அ) விளக்கு               ஆ) கல்வி                 இ) விளையாட்டு                  ஈ) பாட்டு

2. கல்விப் பயிற்சிக்குரிய பருவம் ______.

அ) இளமை               ஆ) முதுமை              இ) நேர்மை                        ஈ) வாய்மை

3. இன்றைய கல்வி _____ நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

அ) வீட்டில்                ஆ) நாட்டில்               இ) பள்ளியில்                      ஈ) தொழிலில்

ஆ. நிரப்புக.

1. கலப்பில் _____ உண்டென்பது இயற்கை நுட்பம்.

2. புற உலக ஆராய்ச்சிக்கு _____ கொழுகொம்பு போன்றது.

3. வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையாயது _____ இன்பம் ஆகும்.

இ. பொருத்துக.

1. இயற்கை ஓவியம் - சிந்தாமணி

2. இயற்கை தவம் - பெரியபுராணம்

3. இயற்கைப் பரிணாமம் – பத்துப்பாட்டு

4. இயற்கை அன்பு – கம்பராமாயணம்

வேற்றுமை

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது _________ ஆகும்.

அ) எழுவாய்              ஆ) செயப்படுபொருள்             இ) பயனிலை            ஈ) வேற்றுமை

2. எட்டா ம் வேற்றுமை ___________ வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.

அ) எழுவாய்              ஆ) செயப்ப டுபொருள்            இ) விளி                   ஈ) பயனிலை

3. உடனிகழ்ச்சிப் பொருளில் _____________ வேற்றுமை வரும்.

அ) மூன்றாம்              ஆ) நான்காம்                      இ) ஐந்தாம்               ஈ) ஆறாம்

4. ‘அறத்தான் வருவதே இன்பம்’ - இத்தொடரில் ________ வேற்றுமை பயின்று வந்துள்ளது.

அ) இரண்டாம்           ஆ) மூன்றாம்                       இ) ஆறாம்                ஈ) ஏழாம்

5. ‘மலர் பானையை வனைந்தாள்’ – இத்தொடர் ________ பொருளைக் குறிக்கிறது.

 அ) ஆக்கல்               ஆ) அழித்தல்                       இ) கொடை               ஈ) அடைதல்

ஆ. பொருத்துக.

1. மூன்றாம் வேற்றுமை – இராமனுக்குத் தம்பி இலக்குவன்.

2. நான்காம் வேற்றுமை – பாரியினது தேர்.

3. ஐந்தாம் வேற்றுமை - மண்ணால் குதிரை செய்தான்.

4. ஆறாம் வேற்றுமை - ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்.

திருக்கேதாரம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. காட்டிலிருந்து வந்த _______ கரும்பைத் தின்றன.

அ. முகில்கள்             ஆ. முழவுகள்             இ. வேழங்கள்           ஈ. வேய்கள்

2. ‘ கனகச்சுனை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________

அ. கனகச் + சுனை     ஆ. கனக + சுனை                இ. கனகம் + சுனை    ஈ. கனம் + சுனை

3. முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______

அ.முழவுதிர              ஆ. முழவுதிரை          இ. முழவதிர             ஈ. முழவு அதிர

பாடறிந்து ஒழுகுதல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பசியால் வாடும் ______ உணவளித்தல் நமது கடமை

அ. பிரிந்தவர்க்கு                  ஆ. அலந்தவர்க்கு                 இ. சிறந்தவர்க்கு        ஈ. உயர்ந்தவருக்கு

2. நம்மை _______ப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

அ. இகழ்வாரை          ஆ. அகழ்வாரை          இ. புகழ்வாரை          ஈ. மகிழ்வாரை

3. மறைபொருளைக் காத்தல் _______ எனப்படும்.

அ. சிறை                  ஆ. அறை       இ. கறை                 ஈ. நிறை

4. ‘ பாடறிந்து ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

அ. பாட் + அறிந்து        ஆ. பா + அறிந்து          இ. பாடு + அறிந்து       ஈ. பாட்டு + அறிந்து

5. முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______

அ. முறையப்படுவது    ஆ. முறையெனப்படுவது        இ. முறைஎனப்படுவது ஈ. முறைப்படுவது

நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

அ.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை ______.

அ) கல்வெட்டுகள்        ஆ) செப்பேடுகள்         இ) பனையோலைகள்           ஈ) மண்பாண்டங்கள்

2. பானை______ ஒரு சிறந்த கலையாகும்.

அ) செய்தல்                ஆ) வனைதல்           இ) முடைதல்                      ஈ) சுடுதல்

3. ‘மட்டுமல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்ப து ______.

அ) மட்டு + மல்ல         ஆ) மட்டம் + அல்ல       இ) மட்டு + அல்ல                  ஈ) மட்டும் + அல்ல

4. கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெ ழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) கயிற்றுக்கட்டில்      ஆ) கயிர்க்கட்டில்        இ) கயிறுக்கட்டில்                 ஈ) கயிற்றுகட்டில்

ஆ.பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.

1. முழுவதும்              2. மட்டுமல்லாமல்                 3. அழகுக்காக

தொகைநிலை,தொகா நிலைத் தொடர்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது _____.

அ) வேற்றுமைத்தொகை        ஆ) உம்மைத்தொகை  இ) உவமைத்தொகை          ஈ) அன்மொழித்தொகை

2. ‘செம்மரம்’ என்னும் சொல் _____த்தொகை .

அ) வினை                         ஆ) பண்பு                 இ) அன்மொழி                     ஈ) உம்மை

3. ‘கண்ணா வா!’- என்பது______த் தொடர்.

அ) எழுவாய்                        ஆ) விளி                  இ) வினைமுற்று                 ஈ) வேற்றுமை

பொருத்துக.

1. பெயரெச்சத் தொடர்    - கார்குழலி படித்தாள்.

2. வினையெச்சத் தொடர் - புலவரே வருக.

3. வினைமுற்றுத் தொடர் - பாடி முடித்தான்.

திருக்குறள்

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அரசரை அவரது _____ காப்பாற்றும்.

அ) செங்கோல்           ஆ) வெண்கொற்றக்குடை                 இ) குற்றமற்ற ஆட்சி     ஈ) படை வலிமை

2. சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் _____ தகுதி அறிந்து பேச வேண்டும்.

அ) சொல்லின்            ஆ) அவையின்                              இ) பொருளின்           ஈ) பாடலின்

3. ‘கண்ணோடாது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

 அ) கண் + ஓடாது       ஆ) கண் + ணோடாது                     இ) க + ஓடாது            ஈ) கண்ணோ + ஆடாது

4. ‘கசடற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) கச + டற               ஆ) கசட + அற                               இ) கசடு + உற           ஈ) கசடு + அற

5. என்று + ஆய்ந்து என்பதனைச் சேர்த்தெ ழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) என்றாய்ந்து          ஆ) என்றுஆய்ந்து                           இ) என்றய்ந்து           ஈ) என்ஆய்ந்து

வளம் பெருகுக

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தோட்டத்தில் தம்பி ஊன்றிய __________ எல்லாம் முளைத்தன.

அ. சத்துகள்     ஆ. பித்துகள்    இ. முத்துகள்   ஈ. வித்துகள்

2. என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு ________ பெருகிற்று

அ. காரி          ஆ. ஓரி          இ. வாரி         ஈ. பாரி

3. ‘ அக்களத்து ‘ என்ற சொல்லைப் பிரித்த் எழுதக் கிடைப்பது _______

அ. அ + களத்து ஆ. அக் + களத்து         இ. அக்க + அளத்து      ஈ. அம் + களத்து

4. கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________

அ. கதிரென    ஆ. கதியீன              இ. கதிரீன               ஈ. கதிரின்ன

மழைச்சோறு

சரியான விடையைத் தேர்தெடுத்து எழுதுக.

1. கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் _____.

அ) பெருமழை           ஆ) சிறு மழை            இ) எடைமிகுந்த மழை           ஈ) எடை குறைந்த மழை

2. ‘வாசலெல்லாம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) வாசல் + எல்லாம்    ஆ) வாசல் + எலாம்      இ) வாசம் + எல்லாம்              ஈ) வாசு + எல்லாம்

 3. ‘பெற்றெடுத்தோம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) பெறு+ எடுத்தோம்   ஆ) பேறு + எடுத்தோம் இ) பெற்ற + எடுத்தோம்          ஈ) பெற்று + எடுத்தோம்

4. கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) கால்லிறங்கி          ஆ) காலிறங்கி           இ) கால் இறங்கி                   ஈ) கால்றங்க

கொங்கு நாட்டு வணிகம்

அ.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல் _____.

அ) தொல்காப்பியம்                ஆ) அகநானூறு                   இ) புறநானூறு          ஈ) சிலப்பதிகாரம்

 2. சேரர்களின் தலைநகரம் _____.

அ) காஞ்சி                           ஆ) வஞ்சி                           இ) தொண்டி             ஈ) முசிறி

3. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது _____.

அ) புல்                               ஆ) நெல்                            இ) உப்பு                  ஈ) மிளகு

4. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு _____.

அ) காவிரி                          ஆ) பவானி                         இ) நொய்யல்             ஈ) அமராவதி

5. வீட்டுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் _

. அ) நீலகிரி                         ஆ) கரூர்                           இ) கோயம்புத்தூர்      ஈ) திண்டுக்கல்

ஆ.கோடிட்ட இடங்களை நிரப்புக.

 1. ‘மாங்கனி நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் _____.

2. சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊர் _____.

3. சேரர்களின் நாடு _____ எனப்பட்டது.

4. பின்னலாடை நகரமாக _____ விளங்குகிறது.

புணர்ச்சி

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. விகாரப் புணர்ச்சி _____ வகைப்படும்.

அ) ஐந்து         ஆ) நான்கு      இ) மூன்று                ஈ) இரண்டு

2. ‘பாலாடை’ - இச்சொல்லுக்குரிய புணர்ச்சி _____

அ) இயல்பு      ஆ) தோன்றல் இ) திரிதல்                ஈ) கெடுதல்

ஆ. பொருத்துக.

1. மட்பாண்டம் - தோன்றல் விகாரம்

2. மரவேர் - இயல்புப் புணர்ச்சி

3. மணிமுடி - கெடுதல் விகாரம்

4. கடைத்தெரு - திரிதல் விகாரம்

படைவேழம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. சிங்கம் _____யில் வாழும்.

அ) மாயை                ஆ) ஊழி                  இ) முழை                 ஈ) அலை

2. கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு _____.

அ) வீரம்                   ஆ) அச்சம்                 இ) நாணம்               ஈ) மகிழ்ச்சி

3. ‘வெங்கரி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) வெம் + கரி            ஆ) வெம்மை + கரி      இ) வெண் + கரி         ஈ) வெங் + கரி

4. ‘என்றிருள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) என் + இருள்         ஆ) எட்டு + இருள்       இ) என்ற + இருள்       ஈ) என்று + இருள்

5. போல் + உடன்றன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

 அ) போன்றன           ஆ) போலன்றன        இ) போலுடன்றன       ஈ) போல்உடன்றன

விடுதலைத் திருநாள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வானில் முழுநிலவு அழகாகத் ___________ அளித்தது.

அ) தயவு                  ஆ) தரிசனம்                        இ) துணிவு                         ஈ) தயக்கம்

2. இந்த _________ முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.

அ) வையம்               ஆ) வானம்                         இ) ஆழி                             ஈ) கானகம்

3. ‘சீவனில்லாமல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) சீவ + நில்லாமல்     ஆ) சீவன் + நில்லாமல்           இ) சீவன் + இல்லாமல்           ஈ) சீவ + இல்லாமல்

4. ‘விலங்கொடித்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்ப து _____.

அ) விலம் + கொடித்து   ஆ) விலம் + ஒடித்து               இ) விலன் + ஒடித்து              ஈ) விலங்கு + ஒடித்து

5. காட்டை + எரித்து என்பதனை ச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) காட்டைஎரித்து       ஆ) காட்டையெரித்து             இ) காடுஎரித்து                    ஈ) காடுயெரித்து

6. இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) இதந்தரும்            ஆ) இதம்தரும்                     இ) இதத்தரும்                     ஈ) இதைத்தரும்

பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. எம்.ஜி.ஆர் _____ என்னும் ஊரில் கல்வி பயின்றார்.

அ) கண்டி                 ஆ) கும்பகோணம்                 இ) சென்னை            ஈ) மதுரை

2. எம்.ஜி.ஆர். படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் _____ .

 அ) நடிப்பு ஆர்வம்       ஆ) பள்ளி இல்லாமை            இ) குடும்ப வறுமை     ஈ)படிப்பில் ஆர்வமில்லாமை

3. இந்திய அரசு சிறந்த நடிகருக்கான _____ எனும் பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கியது.

அ) புரட்சித் தலைவர்    ஆ) பாரத்                            இ) பாரத மாமணி       ஈ) புரட்சி நடிகர்

4. ஐந்தா ம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் _____

அ) திருச்சி                ஆ) சென்னை                     இ) மதுரை                ஈ) கோவை

5. எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம் _____.

அ) மதிய உணவுத்திட்டம்                 ஆ) வீட்டு வசதித் திட்டம்        

இ) மகளிர் நலன் திட்டம்                  ஈ) இலவசக் காலணித் திட்டம்

ஒன்றே குலம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் ________க் கண்டு அஞ்சமாட்டார்

அ. புலனை               ஆ. அறனை    இ. நமனை     ஈ. பலனை

2. ஒன்றே ________ என்று கருதி வாழ்வதே மனிதப் பண்பாகும்.

அ. குலம்                  ஆ. குளம்        இ. குணம்      ஈ. குடம்

3. ‘ நமனில்லை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

அ. நம் + இல்லை       ஆ. நமது + இல்லை    இ. நமன் + நில்லை              ஈ. நமன் + இல்லை

4. நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________

அ. நம்பரங்கு             ஆ. நம்மார்க்கு           இ. நம்பர்க்கங்கு                  ஈ. நம்பங்கு

மெய்ஞ்ஞான ஒளி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக,

1. மனிதர்கள் தம் _______ தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்.

அ. ஐந்திணைகளை    ஆ. அறுசுவைகளை    இ. நாற்றிசைகளை     ஈ. ஐம்பொறிகளை

2. ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் _______

அ. பகர்ந்தனர்           ஆ. நுகர்ந்தனர்                    இ. சிறந்தனர்            ஈ. துறந்தனர்.

3. ‘ ஆனந்த வெள்ளம் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ. ஆனந்த + வெள்ளம் ஆ. ஆனந்தன் + வெள்ளம்       இ. ஆனந்தம் + வெள்ளம்  ஈ. ஆனந்தர் + வெள்ளம்.

4. உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்____

அ. உள்ளேயிருக்கும்   ஆ. உள்ளிருக்கும்                இ. உளிருக்கும்          ஈ. உளருக்கும்

அயோத்திதாசர் சிந்தனைகள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 1. அயோத்திதாசர்_____சமூகச்சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.

அ) தமிழக                 ஆ) இந்திய               இ) தென்னிந்திய                 ஈ) ஆசிய

2. அயோத்திதாசர் நடத்திய இதழ்_____.

அ) ஒருபைசாத் தமிழன் ஆ) காலணாத் தமிழன் இ) அரைப்பைசாத் தமிழன்      ஈ) அரையணாத் தமிழன்

3. கல்வியோடு _____ கற்க வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து.

அ) சிலம்பமும்            ஆ) கைத்தொழிலும்     இ) கணிப் பொறியும்              ஈ) போர்த்தொழிலும்

4. அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது

 அ) ஆழ்ந்த படிப்பு        ஆ) வெளிநாட்டுப்பயணம் இ) இதழியல் பட்டறிவு         ஈ) மொழிப்புலமை

5. மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது ________

அ) வானம்                ஆ) கடல்                  இ) மழை                           ஈ) கதிரவன்

யாப்பு இலக்கணம்

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அசை _____ வகைப்படும்.

அ) இரண்டு              ஆ) மூன்று                இ) நான்கு                ஈ) ஐந்து

2. விடும் என்பது_____ சீர்.

 அ) நேரசை              ஆ) நிரையசை          இ) மூவசை              ஈ) நாலசை

3. அடி _____ வகைப்படும்.

 அ) இரண்டு             ஆ) நான்கு                இ) எட்டு                   ஈ) ஐந்து

4. முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது _____.

அ) எதுகை                ஆ) இயைபு              இ) அந்தாதி               ஈ) மோனை

அ. பொருத்துக.

 வெண்பா - துள்ளல் ஓசை

ஆசிரியப்பா - செப்பலோசை

கலிப்பா - தூங்கலோசை

வஞ்சிப்பா – அகவலோசை

திருக்குறள்

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஆண்மையின் கூர்மை _____.

அ) வறியவருக்கு உதவுதல்               ஆ) பகைவருக்கு உதவுதல்

இ) நண்பனுக்கு உதவுதல்                ஈ) உறவினருக்கு உதவுதல்

2. வறுமை வந்த காலத்தில் _____ குறையாமல் வாழ வேண்டும்.

அ) இன்பம்                ஆ) தூக்கம்      இ) ஊக்கம்               ஈ) ஏக்கம்

3. ‘பெருஞ்செல்வம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) பெரிய + செல்வம்    ஆ) பெருஞ் + செல்வம் இ) பெரு + செல்வம்               ஈ) பெருமை + செல்வம்

4. ‘ஊராண்மை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) ஊர் + ஆண்மை     ஆ) ஊராண் + மை      இ) ஊ + ஆண்மை               ஈ) ஊரு + ஆண்மை

5. திரிந்து + அற்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

 அ) திரிந்ததுஅற்று       ஆ) திரிந்தற்று            இ) திரிந்துற்று                     ஈ) திரிவுற்று

ஆ. பொருத்துக.

1. இன்பம் தருவது - நற்பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம்

2. நட்பு என்பது - குன்றிமணியளவு தவறு

3. பெருமையை அழிப்பது - செல்வம் மிகுந்த காலம்

4. பணிவு கொள்ளும் காலம் - சிரித்து மகிழ மட்டுமன்று

5. பயனின்றி அழிவது - பண்புடையவர் நட்பு

உயிர்க்குணங்கள்

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அடுத்தவர் வாழ்வைக் கண்டு _____ கொள்ளக்கூடாது.

அ) உவகை              ஆ) நிறை                 இ) அழுக்கா று           ஈ) இன்பம்

2. நாம் நீக்கவேண்டியவற்றுள் ஒன்று _____ .

அ) பொச்சாப்பு            ஆ) துணிவு               இ) மானம்                ஈ) எளிமை

3. ‘இன்பதுன்பம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _____.

அ) இன்பம் + துன்பு     ஆ) இன்பம் + துன்பம் இ) இன்ப + அன்பம்       ஈ) இன்ப + அன்பு

 4. குணங்கள் + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) குணங்கள்எல்லாம் ஆ) குணமெல்லாம்      இ) குணங்களில்லாம் ஈ) குணங்களெல்லாம்

ஆ. பொருத்துக

1. நிறை - பொறுமை

2. பொறை - விருப்பம்

3. மதம் - மேன்மை

4. மையல் – கொள்கை

இளைய தோழனுக்கு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. உன்னுடன் நீயே _________ கொள்

அ. சேர்ந்து      ஆ. பகை                  இ. கைகுலுக்கிக்                  ஈ. நட்பு

2. கவலைகள் _______ அல்ல

அ. சுமைகள்    ஆ. சுவைகள்             இ. துன்பங்கள்                     ஈ. கைக்குழந்தைகள்

3. ‘விழித்தெழும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது______

அ. விழி + எழும் ஆ. விழித்து + எழும்     இ. விழி + தெழும்                 ஈ. விழித் + தெழும்

4. ‘போவதில்லை’என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) போ வது + இல்லை ஆ) போ + இல்லை இ) போ வது + தில்லை     ஈ) போவது + தில்ல

5. ‘படுக்கையாகிறது’என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) படுக்கை + யாகிறது ஆ) படுக்கையா + ஆகிறது இ) படுக்கையா + கிறது      ஈ) படுக்கை + ஆகிறது

6. தூக்கி + கொண்டு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) தூக்கிகொண்டு ஆ) தூக்குக் கொண்டு இ) தூக்கிக்கொண்டு                   ஈ) தூக்குகொண்டு

 7. விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

 அ) விழியெழும்          ஆ) விழித்தெழும்         இ) விழித்தழும்                     ஈ) விழித்துஎழும்

சட்டமேதை அம்பேத்கர்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ___________

அ) இராதாகிருட்டிணன்          ஆ) அம்பேத்கர்           இ) நௌரோஜி           ஈ) ஜவஹர்லால் நேரு

2. பூனா ஒப்பந்தம் __________ மாற்ற ஏற்படுத்தப்பட்டது.

அ) சொத்துரிமையை   ஆ) பேச்சுரிமையை   இ) எழுத்துரிமையை     ஈ) இரட்டைவாக்குரிமையை

3. சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் ________

அ) சமாஜ் சமாத சங்கம்                     ஆ) சமாத சமாஜ பேரவை

இ) தீண்டாமை ஒழிப்புப் பேரவை       ஈ) மக்க ள் நல இயக்கம்

4. அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு ______ விருது வழங்கியது.

அ) பத்மஸ்ரீ                ஆ) பாரத ரத்னா         இ) பத்மவிபூசண்                  ஈ) பத்மபூசன்

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. புத்த சமயம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய நூல் __________.

2. அம்பேத்கர் நிறுவிய அரசியல் கட்சியின் பெயர் ________.

3. பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேத்கர் ________ சென்றார்.

அணி இலக்கணம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பிறிதுமொழிதல்அணியில்_____ மட்டும் இடம்பெறும்.

அ) உவமை              ஆ) உவமேயம்                    இ) தொடை               ஈ) சந்தம்

 2. இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் கூறுவது _____ அணி.

அ) ஒற்றுமை             ஆ) வேற்றுமை                    இ) சிலேடை             ஈ) இரட்டுற மொழிதல்

3. ஒரே செய்யுளை இருபொருள்படும்படி பாடுவது __________ அணி.

அ) பிறிதுமொழிதல்      ஆ) இரட்டுறமொழிதல்            இ) இயல்பு நவிற்சி      ஈ) உயர்வு நவிற்சி

 4. இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் _____________ அணி. 

அ) பிறிதுமொழிதல்      ஆ) வேற்றுமை                    இ) உவமை              ஈ) சிலேடை

 

\தயாரிப்பு

www.tamilvithai.com                                                                       www.kalvivithaigal.com

 WAIT 15 SECONDS YOU GET PDF DOWNLOADING LINK

நீங்கள் 15 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி
 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post