10TH - TAMIL - UNIT TEST - 4 - ANSWER KEY - SALEM DT

  

 சேலம் -அலகுத் தேர்வு – 4 – வினாத்தாள் ( இயல் 8,9)

ஜனவரி - 2023

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  1.30 மணி                                                                              மதிப்பெண் : 50

பகுதி – 1 / மதிப்பெண்கள் - 8

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

அ. கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

1

2.

ஆ. அதியன்;பெருஞ்சாத்தன்

1

3.

அ. கருணையன் எலிசபெத்துக்காக

1

4.

இ. உருவகம்

1

5.

அ) அகவற்பா

1

6.

பாடு எனக் கூறியவுடன் பாடுபவர்

1

7

இனிய ஓசை நலம் சிறக்கப் பாடுபவர்

1

8

சொல்லணி அமைத்து பாடுபவர்

1

பகுதி – 2/ பிரிவு - 1

9

Ø  அறம் கூறும் மன்றங்கள்

Ø  துலாக்கோல் போல் நடுநிலையானது

Ø  மதுரையில் மதுரைக்காஞ்சி அவையம்.

2

10

அடிஎதுகை:    கொள்வோர்ள்வாய்

இலக்கணக் குறிப்பு: கொள்க,குரைக்கவியங்கோள் வினைமுற்று

2

11

நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதல் உண்டு. நான் எழுதுவதற்கு காரணம் உண்டு.

2

12

அமர்ந்தான் – அமர் + த்(ந்)+த்+ ஆன்

அமர் – பகுதி

த்(ந்) – சந்தி

ந் – ஆனது விகாரம்

த் – இறந்த கால இடைநிலை

ஆன் – ஆண்பால் வினை முற்று விகுதி

2

13.

அணி: நிரல் நிறை அணி. சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்வது.

.கா: அன்புக்கு அறன், பண்புக்கு பயன்

2

14.

முதல் நிலைத் தீவகம், இடைநிலைத் தீவகம், கடைநிலைத் தீவகம்

2

15

கம்பன், உமறுபுலவர்

2

16

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு

2

பகுதி – 2/ பிரிவு - 2

17.

·           வணிக நோக்கமின்றி அறம் செய்ய வேண்டும். அதை விளம்பரப்படுத்தக்கூடாது.

·            நீர்நிலை பெருக்கி,நிலவளம்கண்டு,உணவுப் பெருக்கம் காணவேண்டும் என்று கூறுவது இன்றைய அரசியல் தலைவர்களுக்கு பொருந்தும்

3

18.

இடம் : சித்தாளு எனும் நாகூர் ரூமியின் கவிதை

பொருள் : சித்தாளு வேலை செய்யும் பெண்ணின் மனச்சுமைகள் மனிதர்கள் மட்டுமன்றி செங்கற்களும் அறியாது.

3

19.

வ.எண்

சீர்

அசை

வாய்பாடு

1

கரு-வியும்

நிரை - நிரை

கருவிளம்

2

கா-லமும்

நேர் – நிரை

கூவிளம்

3

செய்-கை-யும்

நேர்-நேர் – நேர்

தேமாங்காய்

4

செய்-யும்

 நேர் - நேர்

தேமா

5

அரு-வினை-யும்

நிரை-நிரை – நேர்

கருவிளங்காய்

6

மாண்-ட

நேர் – நேர்

தேமா

7

தமைச்-சு

நிரைபு

பிறப்பு

இக்குறளின் இறுதி சீர் “பிறப்பு “ என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது

3

20

1. ஓட்டுநர் உரிமம்

2. வாகனப் புகைச் சான்று

3. வாகனப் பதிவுச் சான்று

( பொருத்தமான வேறு பதில் இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் )

3

21

இலக்கணம்: இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக்கூறுதல்.

.கா:

தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்

..................................................................................

................... கூவினவே கோழிக் குலம்.

விளக்கம்:

அதிகாலை விடிந்து கோழிகளும் இயல்பாக கூவும்.ஆனால் புலவர் தமயந்தியின் துயர் கண்டே கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாகக் கூறுகிறார்.

3

22

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;

தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!

கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;

நானே தொடக்கம்; நானே முடிவு;

நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!.

                                                - கண்ணதாசன்

3

பகுதி – 3

23

மேல் நிலை சேர்க்கை விண்ணப்பப் படிவம்.

அனைத்து படிநிலைகளும் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

5

பகுதி - 4

24

( ஐந்து நயங்கள் இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் )

திரண்ட கருத்து:

          கோடையில் இளைப்பாறா உதவும் மரமாகவும்,அதன் நிழலாகவும்,கனியாகவும் இருப்பவனே! ஓடையில் ஓடும் சுவைதரும் நீராகவும், மலர்ந்த மணமலராகவும், என் பாமாலையை ஏற்று அருள் புரிவாயாக என வள்ளலார் இறைவனை வணங்குகிறார்.

மையக் கருத்து :

          எல்லாமுமாகத் திகழும் இறைவனை வாழ்த்தி வணங்குவதே இப்பாடலின் மையக் கருத்து.

சொல்  நயம் :

          குளிர்தருவே,தருநிழலே,சுகந்த மணமலரே ,மெல்லிய பூங்காற்றே ஆகிய அழகான சொற்கள் பாடலுக்கு நயம் கூட்டுகின்றன.

பொருள் நயம் :

          “ சுகந்த மணமலரே. மென் காற்றில் விளைசுகமே, சுகத்தில் உறும் பயனே, ஆடையிலே எனை மணந்த மணவாளா “ ஆகிய சொற்கள் ஆழமான பொருளை உடையன.

சந்த நயம் :

          இப்பாடல் பாடுவதற்கு ஏற்ற சந்த நயத்துடன் அமையப் பெற்றுள்ளது.

மோனை நயம் :

          முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.

            கோடை                         -          கொள்ளும் வகை

            மேடையிலே                            மென்காற்றிலே

எதுகை நயம் :

          முதலெழுத்து அளவொத்து இருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.

            கோடையிலே     -          டையிலே

            ந்த              -          சுந்த

முரண் நயம் :

          முரண்பட்ட சொற்களால் அமைவது முரண் நயம்.

            கோடையிலே     X          குளிர்தருவே

இயையு நயம் :

          பாடலில் இறுதி எழுத்தோ. அசையோ, சீரோ, இயைந்து வருவது இயைபு நயம்.

          கனியே             -          மலரே

காற்றே              -          பயனே

அணிநயம் :

          இபாடலில் இறைவனை மரமாகவும், நிழலாகவும்,கனியாகவும், தண்ணீராகவும், மணமலராகவும், பூங்காற்றாகவும்,சுகமாகவும் உருவகம் செய்து பாடியுள்ளமையால், இப்பாடலில் உருவக அணி பயின்று வந்துள்ளது.

பா வகை :

          எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப்பா பா வகையைச் சார்ந்துள்ளது.

v   

4

24 

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத       

என்னை எழுது என்று சொன்னது

இந்தக் காட்சி  

கொடுப்பவன் என் கொடையைப் பற்றி எழுது என்றான்

பெறுபவன் என் வறுமையைப் பற்றி எழுது என்றான்

நான் எழுதுகிறேன் கொடையை தடுக்காதே என்று

4

25.

1. Education is what remains after one has forgotten what one has learned in school – Albert Einstein

பள்ளியில் கற்றபின் எது நமது நினைவில் நிற்கின்றதோ அதுவே கல்வி – ஆல்பிரட் ஐன்ஸ்டீன்

2. Tomorrow is often the busiest day of the week – Spanish proverb

நாளையே இந்த வாரத்தின் மிகப் பரபரப்பான நாள் – ஸ்பானிஷ் பழமொழி

3. It is during our darkest moment that we must focus to see the light – Aristotle

நம் வாழ்வில் மிகவும் இருண்ட காலத்தில் தான் நாம் அகவொளியைக் காண முற்பட வேண்டும் - அரிஸ்டாட்டில்

4

25

“ நீங்கள் கூறிய இடத்தில் தான் அண்ணே! எதிர்ப்புறம் உள்ள ஒரு தேநீர் கடையில் இருக்கிறது.

“ அங்கே தேநீர் அருந்திவிட்டு, செய்தித்தாள் படிச்சிக்கிட்டு இரு. நான் விரைவாக வந்துடுவேன்”

“ அண்ணா! சண்முகத்தையும் அழைத்துக் கொண்டு வாருங்கள் அண்ணா ! அவனைப் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது”

4

பகுதி – 5

26.

Ø  அ. பூமித்தாயே என் அன்னையின் உடலைக் காப்பாயாக.

Ø  கருணையன் அன்னை உடல் மீது மலரையும்,கண்ணீரையும் பொலிந்தான்

Ø  கருணையன் மனம் பறிக்கப்பட்ட மலர்ப் போல உள்ளது.

Ø  அம்பினால் உண்டான வலிப் போல் உள்ளது.

Ø  கருணையனை தவிக்க விட்டுச் சென்றார்.

Ø  பசிக்கான வழித் தெரியாது.

Ø  இவனது இரங்கல் கண்டு இயற்கை கண்ணீர் சிந்துகிறது.

 

5

26.

ஆ.

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

குப்புசாமி

பக்கத்து வீட்டுக்காரர்

முடிவுரை

முன்னுரை:

        கல்மனதையும் கரைய வைக்கும் கதை இந்த ஒருவன இருக்கிறான். இதை இக்கட்டுரையில் காண்போம்.

குப்புசாமி:

Ø  குப்புசாமி 25 வயது வாலிபன்.வயிற்று வலிக்காரன்

Ø  உறவினர்கள் இவனை அனாதைப் போல நடத்தினார்கள்.

Ø  காரணமில்லாமல் பக்கத்து வீட்டுக்காரரால் வெறுக்கப்பட்டான் குப்புசாமி.

Ø  வயிற்றுவலிக்கு மருத்துவம் பார்க்க சென்னை வந்தவன் இந்த குப்புசாமி.

பக்கத்து வீட்டுக்காரர்:

Ø  பக்கத்து வீட்டுக்காரர் காரணமில்லாமல் வெறுப்பை அவன் மீது காட்டியவர். அவரின் மனைவி கருணையோடு இருந்தவர்.

Ø  குப்புசாமிக்கு ஆறுமுகம் மூலம் கடிதம் வந்தது. ஆறுமுகமும் தன் பங்காக இரு சாத்துகுடியும்,ஒரு ரூபாய் பணமும் கொடுத்தார்.

Ø  பக்கத்து வீட்டுக்காரர் குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதை வீரப்பனின் கடிதம் மூலம் அறிந்தார். கடன் வாங்கி கொடுத்த அந்த மூன்று ரூபாயும் அவரின் மனதை மாற்றியது.

Ø  மனைவியை உடன் அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல சாத்துக்குடி வாங்க சென்றார்.

முடிவுரை:

        எல்லோருக்கும் ஒருவன் இருக்கிறான் யாரும் அனாதை இல்லை என்பதை இக்கட்டுரையின் மூலம் காணும் போது மனிதம் துளிர்க்கிறது எனபதனை அறிய முடிகிறது. .

 

5

27.

அ. சேலம்

03-03-2021

அன்புள்ள மாமாவுக்கு,

          நான் நலம். நீங்கள் நலமா? என அறிய ஆவல். சென்ற வாரம் எங்கள் பள்ளித் திடலில் பை ஒன்று கிடந்தது. அதனை திறந்த போது அதில நிறைய பணம் இருந்தது. உடனடியாக நான் தலைமை ஆசிரியரிடம் விபரம் கூறி ஒப்படைத்தேன்.மறுநாள் காலை இறைவணக்கக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரி இருவரும் பாராட்டி ஒரு நற்சான்றிதழையும் வழங்கினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேர்மைக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரமாக இதை கருதுகிறேன். வீட்டில் அனைவரிடமும் இதை கூறவும்.

                             நன்றி,வணக்கம்.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

பெறுதல்

          திரு.இரா.இளங்கோ,

          100,பாரதி தெரு,,நாமக்கல்.

5

27.

v  ஆ) பசுமைப் பாதுகாப்புப் படை அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக செயல்படுகிறது.இதன் மூலம் பள்ளிகள் பசுமையாக உள்ளது.

v  மரங்கள் நம் வாழ்வில் முக்கிய அங்கம். அதனை உணர்ந்து அனைவரும் மரங்களை வளர்க்க வேண்டும்.

v  மரம் நடும் விழாவிற்கு வருகைப்புரிந்த சிறப்பு விருந்தினர் மரங்களின் அவசியம்,மாணவர்கள் மற்றும் சமூகத்தின் கடமை ஆகியவற்றை எடுத்துரைத்து நமக்கு சிறப்பாக வழிகாட்டினார்.

v  இவ்விழாவினை ஏற்பாடு செய்த தலைமை ஆசிரியருக்கும் மற்றும் பள்ளியின் பசுமைப் பாதுகாப்புப் படைக்கும், சிறப்பான கருத்துகளை கூறிய சிறப்பு விருந்தினருக்கும்,பெற்றோருக்கும் பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

5

15 விநாடிகள் காத்திருக்கவும்

நீங்கள் 15 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,

தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி

 

www.tamilvithai.com

www.kalvivithaigal.com

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post