10TH - TAMIL - UNIT TEST - 3 - ANSWER KEY - SALEM DT

 

 சேலம் -அலகுத் தேர்வு – 3 – வினாத்தாள் ( இயல் 6,7)

ஜனவரி - 2023

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  1.30 மணி                                                                              மதிப்பெண் : 50

பகுதி – 1 / மதிப்பெண்கள் - 8

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஆ. தளரப்பிணைத்தால்

1

2.

ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

1

3.

இ) உழவு, ஏர், மண், மாடு

1

4.

ஆ) 2

1

5.

அ) கு.ப.ராஜகோபாலன்

1

6.

கம்பராமாயணம்

1

7

கம்பர்

1

8

கும்பகர்ணன்

1

பகுதி – 2/ பிரிவு - 1

9

அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைத்து நிற்க கல்லிலும் செப்பேட்டிலும் மெய்கீர்த்தி எழுதினார்கள்

2

10

·         பழைய புத்தக கடையில் புத்தகம் வாங்குதல்

·         உணவுக்கான பணத்தில் புத்தகம் வாங்குதல்

2

11

சீர்

அசை

வாய்பாடு

தஞ்/ சம்

நேர்நேர்

தேமா

எளி/ யர்

நிரைநேர்

புளிமா

பகைக்/ கு

நிரைபு

பிறப்பு

2

12

முதற்பொருள்:

Ø    நிலம்                      காட்டில்

Ø    பெரும் பொழுது           - மழைக்காலம்

Ø    சிறுபொழுது              - மாலை

கருப்பொருள்:

Ø  உணவு - வரகு

2

13.

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள்

2

14.

அ) ஆவணம்                        ஆ) தொன்மம்

2

15

அ. திருச்சி                             ஆ) நாகை

2

பகுதி – 2/ பிரிவு - 2

16.

·                     அவன் திருவடிகளில் அணிந்த பொன்னாலாகிய கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடுகின்றன .

·                     இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரைவடங்கள் ஆடுகின்றன

·                     நெற்றியில் சுட்டி பதிந்தாடுகின்றன.

·                     காதுகளில் குண்டலமும்,குழையும் அசைந்தாடுகின்றன

3

17.

இடம்: மாநகர தந்தை செங்கல்வராயன் தலைமைமாநகராட்சி சிறப்புக் கூட்டம்

பொருள் : மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகர் சென்னை இருக்க வேண்டும் என்ற நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து முழங்கிய முழக்கம் இது.

3

18.

முன்னர் வந்த சொல் லும் பொருளும் பின்னர்ப் பல இடங்களிலும் வருவது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.

(எ.கா.) எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.

இக்குறட்பாவில் ’விளக்கு’ என்னும் சொல் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.

( ஏற்புடைய வேறு எடுத்துகாட்டு இருப்பினும் மதிப்பெண் வழங்கலாம் )

3

19

உங்களிடம் ஏழு தங்கக்கட்டி உள்ளது.அதில் ஒன்று மட்டும் எடை குறைவானது. உங்களிடம் உள்ள ஒரு தராசை இரு முறைகள் மட்டும் பயன்படுத்தி எடை குறைந்த தங்கக்கட்டியைக் கண்டுப்பிடிக்கவும்.

3

20

வ.எண்

சீர்

அசை

வாய்பாடு

1

முயற்-சி

நிரை - நேர்

புளிமா

2

திரு-வினை

நிரை – நிரை

கருவிளம்

3

ஆக் – கும்

நேர் – நேர்

தேமா

4

முயற்-றின்-மை

நிரை – நேர் - நேர்

புளிமாங்காய்

5

இன் – மை

நேர் – நேர்

தேமா

6

புகுத் – தி

நிரை – நேர்

புளிமா

7

விடும்

நிரை

மலர்

இக்குறளின் இறுதி சீர் “ மலர் “ என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது

3

பகுதி – 3

21

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத       

என்னை எழுது என்று சொன்னது

இந்தக் காட்சி  

கலை என் சிறப்பைப் பற்றி எழுது என்றது

கலைஞர் என் கலையைப் பற்றி எழுது என்றார்

நான் எழுதுகிறேன் கலையே உயிர் என்று

4

21

தொகைச்சொற்கள்

பிரித்து எழுதுக

தமிழ் எண்ணுரு

மூவேந்தர்

மூன்று + வேந்தர்

நாற்றிசை

நான்கு + திசை

முத்தமிழ்

மூன்று + தமிழ்

இருதிணை

இரண்டு + திணை

4

20

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத       

 என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி திறன்பேசி என் ஆளுமையைப் பற்றிஎழுது என்றது

மனிதன் என் அடிமைத்தனத்தை பற்றி எழுது என்றான்

 நான் எழுதுகிறேன் திறன்பேசிக்கு

 அடிமையாகாதே என்று

4

22

சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது.

4

 

22.

1.காலை ஒளியினில் மலரிதழ் அவிழும்

 சோலைப் பூவினில் வண்டினம் கவிழும்

2. மலைமுகட்டில் மேகம் தங்கும் அதைப்

 பார்க்கும் மனங்கள் செல்லத் தயங்கும்

3. வாழ்க்கையில் தோற்பவை  மீண்டும் வெல்லும்இதைத்

 தத்துவமாய்த் தோற்பாவை கூத்து சொல்லும்.

4. தெருக் கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே விருது அதில்

 வரும் காசு குறைந்தாலும் அதுவேயவர் விருந்து.

4

பகுதி - 4

23

v  இரண்டாம் இராச இராச சோழனின் நாட்டின் வளம்,ஆட்சிச் சிறப்பைச் சொல்கிறது.

v  யானைகள் மட்டும் பிணிக்கப்படுகிறது.மக்கள் பிணிக்கப்படவில்லை.

v  சிலம்புகள் புலம்புகின்றன. மக்கள் புலம்புவதில்லை.

v  ஓடைகள் கலக்கமடைகின்றன.மக்கள் கலக்கமடைவதில்லை.

v  நீர் அடைக்கப்படிகிறது. மக்கள் அடைக்கப்படுவதில்லை.

v  மாங்காய்கள் வடுபடுகிறது. மக்கள் வடுபடுவதில்லை.

v   நெற்போர் மட்டுமே இருக்கிறது.மற்ற போர்கள் இல்லை.

5

23

 

மருவூர்ப்பாக்க வணிக வீதி

இக்கால வணிக வளாகங்கள்

தானியக் கடைத் தெருக்கள்

தனித்தனி அங்காடிகள்

நேரடி வணிகம்

இடைத் தரகர்கள் அதிகம்

இலாப நோக்கமற்றது

இலாபம் மட்டுமே முக்கியம்

கலப்படம் இல்லாதது

கலப்படம் கலந்துள்ளது

தரம் உண்டு.விலை குறைவு

விலை அதிகம்

5

24.

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

பொருட்காட்சி

நுழைவுச் சீட்டு

பல்துறை அரங்கம்

அங்காடிகள்

பொழுதுபோக்கு

முடிவுரை

முன்னுரை :

எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

பொருட்காட்சி :

        மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது.

நுழைவுச் சீட்டு:

        பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது.

பல்துறை அரங்கம் :

        அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன.

அங்காடிகள்:

        வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன.

பொழுதுபோக்கு :

        சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன.

முடிவுரை:

        எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம்.        

5

24

அனுப்புநர்

                   அ அ அ அ அ,

                   100,பாரதி தெரு,

                   சக்தி நகர்,

                   சேலம் – 636006.

பெறுநர்

                   ஆசிரியர் அவர்கள்,

                   தமிழ்விதை நாளிதழ்,

                   சேலம் – 636001.

ஐயா,

பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல்சார்பு

          வணக்கம். நான்  தங்கள் நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில் உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்  எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன்.தாங்கள் அந்த கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இணைப்பு:                                                     இப்படிக்கு,

          1. கட்டுரை                                                          தங்கள்உண்மையுள்ள,

இடம் : சேலம்                                                  அ அ அ அ அ.

நாள் : 04-03-2021

 

உறை மேல் முகவரி:

பெறுநர்

          ஆசிரியர் அவர்கள்,

          தமிழ்விதை நாளிதழ்,

,         சேலம் – 636001.

5

25

எழுத்தர் பணி வேண்டி விண்ணப்பம்

சரியாக அனைத்து படிகளும் நிரப்பி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

 WAIT FOR 10 SECONDS

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,

தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி

 

www.tamilvithai.com

www.kalvivithaigal.com

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post