10TH - TAMIL - MODEL UNIT TEST -4 - QUESTION - PDF

  

பத்தாம் வகுப்பு - தமிழ்

மாதிரி அலகுத் தேர்வு - 3

இயல் 8 மற்றும் 9

மாதிரி அலகுத் தேர்வு – 4

வகுப்பு : 10                                                                                                      இயல் : 8,9

பாடம் : தமிழ்                                                                                                       மதிப்பெண் : 50

பகுதி -1

அ. சரியான விடையைத் தேர்தெடு         :-                                                                                     1×7=7

1. ‘ வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் ‘ இவ்வடி குறிப்பது______________

) காலம் மாறுவதை     ) வீட்டைத் துடைப்பதை  இ. இடையறாது அறப்பணி செய்தலை ஈ. வண்ணம் பூசுவதை

2. இஸ்மத் சன்னியாசி என்பது ___________ சொல்

அ) வடமொழி                  ஆ) உருது                      இ) பாரசீகம்        ஈ) அரேபியம்

3. காலக்கணிதம் கவிதையில் இடம் பெற்ற தொடர் ___________

அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது     ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது   

இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்    ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்                                                     

4. தந்தையை இழந்த தன் மகளை தாய் மிகவும் பாதுகாப்பாக வளர்த்து வந்தாள் – இத்தொடருக்குப் பொருத்தமான உவமையைக் காண்க

) தாமரை இலை நீர் போல                    ) மழை முகம் காணாப் பயிர் போல

இ. கண்ணினைக் காக்கும் இமை போல   ஈ.) சிலை மேல் எழுத்து போல

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி

“ பூக்கையைக் குவித்துப் பூவே

புரிவோடு காக்கென்று அம்பூஞ்

சேக்கையைப் பரப்பி இங்கண்

திருத்திய அறத்தை யாவும்“

5. இப்பாடலின் ஆசிரியர்

அ. இளங்கோவடிகள்       ஆ. கண்ணதாசன்           இ. வீரமாமுனிவர்

ஈ. அதிவீரராம பாண்டியன்

6. இப்பாடல் இடம்பெற்ற நூல்-------

அ. காலக்கணிதம்            ஆ. தேம்பாவணி இ. சிலப்பதிகாரம்   ஈ. இரட்டுறமொழிதல்

7. இப்பாடலில் உள்ள எதுகைச் சொற்கள் _________

அ. பூக்கை - பூவை                     ஆ. குவித்து - காக்கென்று           

இ. ஆக்கை - அழுங்கணீர்           ஈ. பூக்கை - சேக்கை

பகுதி – 2/பிரிவு -1

ஆ. எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடையளி:-                                                                        4×2=8

8. விடைக்கேற்ற வினா அமைக்க:-

அ. சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர் ஜெயகாந்தன்.

ஆ.வீரமாமுனிவர் இரண்டே மாதங்களில் உருது மொழியைக் கற்றுக் கொண்டார்.

9 “ காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தென் காய்ந்தேன் “ – உவமை உணர்த்தும் கருத்து யாது?

10. போர் அறம் குறித்து எழுதுக

11. கலைச்சொல் தருக:- அ. HUMANISM       ஆ. PHILOSOPHER

12. ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள் இரண்டு எழுதுக.

13. மரபுத்தொடரின் பொருளறிந்து தொடரில் அமைக்க.

அ) கண்ணும் கருத்தும்                            ஆ) ஆறப்போடுதல்


பிரிவு – 2


இ. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி:-வினா எண் : 16 கட்டாயமாக விடையளிக்க.              3×3=9

14. “ சித்தாளின் மனச்சுமைகள்

      செங்கற்கள் அறியாது “ – இடஞ்சுட்டிப் பொருள் தருக.

15. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

16.” நவமணி வடக்கயில் “ எனத் தொடங்கும் தேம்பாவணிப் பாடலை எழுதுக.

17. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

18. தீவக அணியை விளக்கி வகைகளை எழுதுக.

ஈ. அலகிட்டு வாய்பாடு தருக:-                                                                                           1×3=3

19. கரப்பிடும்பை இல்லாரைக் காணிக் நிரப்பிடும்பை

    எல்லாம் ஒருங்கு கெடும் – அலகிட்டு வாய்பாடு காண்க

பகுதி – 3 / பிரிவு – 1

உ. அனைத்து  வினாக்களுக்கும் விடையளி:-.                                                                                  2×5=10

20. அ) கருணையனின் தாய் மறைவுக்கு,வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.( அல்லது )

ஆ) பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

21. அ) உங்கள் தெருவில் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்கு கடிதம் எழுதுக.  ( அல்லது )

ஆ) அழகிரிசாமியின்ஒருவன் இருக்கிறான்சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து எழுதுக

பிரிவு – 2

22. படிவம் நிரப்புக:-                                                                                                                              1×5=5

தென்காசி மாவட்டம்,வ.உ.சி.நகர், காந்தித் தெரு,கதவிலக்க எண்50 இல் வசிக்கும்  இளமாறன் மகள் யாழினி மாநில அளவில் குத்துச்சண்டைப் போட்டியில் பங்கு பெற விரும்புகிறார். தேர்வர் தம்மை யாழினியாக நினைத்து உரிய படிவம் நிரப்புக.

பகுதி – 4

ஈ) பின்வரும் வினாக்களுக்கு விடையளி :-                                                                                      2×4=8

23.அ) மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடுக          

( அல்லது )

ஆ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

 



25. மொழிபெயர்க்க :-

1. Education is what remains after one has forgotten what one has learned in school – Albert Einstein

2. Tomorrow is often the busiest day of the week – Spanish proverb

3. It is during our darkest moment that we must focus to see the light – Aristotle

4. Success is not final,failure is not fatal.It is the courage to continue that counts – Winston Churchill     

 ( அல்லது )

ஆ) உங்கள் பள்ளியில் நடைபெறும் நாட்டு நலப்பணித்திட்ட முகாமின் தொடக்க விழாவில் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க உரை ஒன்றை உருவாக்கித் தருக.

 

 KINDLY WAIT FOR 10 SECONDS AFTER ENABLE DOWNLOAD ICON , 

CLICK TO DOWNLOAD ICON TO GET PDF THIS QUESTION

 

 

நீங்கள் 15 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post