10TH - TAMIL - 1ST REVISION QUESTION PAPER - 2020 - PDF

 

 

முதல் திருப்புதல் தேர்வு  வினாத்தாள் 2020

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                                    மதிப்பெண் : 100

அறிவுரைகள் : 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக்  கண்காணிப்பாளரிடம்   உடனடியாகத் தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்     பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

            ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

i)              அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

II )         கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.                                                                               15×1=15

1.’ எந்தமிழ்நா’ என்பதனைப் பிரித்தால் இவ்வாறு வரும்_______

அ) எந் + தமிழ் + நா        ஆ)  எந்த + தமிழ் + நா   இ) எம் +தமிழ் + நா          ஈ) எந்தம் + தமிழ் + நா

2. “ உனக்கு பாட்டுகள் பாடுகிறோம்

    உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம் “ -பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

அ) உருவகம்,எதுகை     ஆ) மோனை,எதுகை     இ) முரண்,இயைபு        ஈ) உவமை,எதுகை

3.’ படுகர் ‘ என்பதன் பொருள் _________

அ) இளைப்பாறி             ஆ) பள்ளம்         இ) தங்கி           ஈ) மேடு

4. ‘ கேட்ட பாடல் ‘ _____________

அ) வினைமுற்றுத் தொடர்           ஆ) வினையெச்சத் தொடர்          இ) வேற்றுமைத் தொடர் ஈ) பெயரெச்சத் தொடர்

5. ‘ நன்மொழி ‘ என்பதன் இலக்கணக் குறிப்பு __________

அ) வினைத் தொகை      ஆ) அன்மொழித் தொகை            இ) பண்புத்தொகை        ஈ) உவமைத் தொகை

6. உனதருளே பார்ப்பன் அடியேனே – யாரிடம் யார் கூறியது?.

அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்         ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

இ) மருத்துவரிடம் நோயாளி                    ஈ) நோயாளிடம் மருத்துவர்

7.பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

அ) துலா ஆ) சீலா            இ) குலா            ஈ) இலா

8. எட்டுத்தொகை,பத்துப்பாட்டு – என்பதில் எட்டு, பத்து என்பதன் தமிழ் எண்ணுரு

அ) அ, ௧ ௦          ஆ) ௭ ௧           இ) ௬ ,௧ ௦        ஈ) ௧ ௦ ,௭        

9. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ___________  இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் ______

அ) அமைச்சர்,மன்னன்    ஆ) அமைச்சர், இறைவன்           இ) இறைவன், மன்னன்   ஈ)  மன்னன்,இறைவன்

10. கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர் – இத்தொடருக்கான வினா எது?

அ) கரகாட்டம் என்றால் என்ன?              

ஆ) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?       

இ) கரகாட்டத்தின் வேறு வேறு வடிவங்கள் யாவை?                  

ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

11. உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர்__________

அ) திருமூலர்       ஆ) அகத்தியர்    இ) வள்ளுவர்  ஈ) தொல்காப்பியர்

12) கெழீஇ – இச்சொல்லில் உள்ள அளபெடை

அ) உயிரளபெடை          ஆ) ஒற்றளபெடை           இ) செய்யுளிசை அளபெடை        ஈ) சொல்லிசை அளபெடை

13) ‘ ஏறுகோட்பறை ‘ – இந்த திணைக்குரிய பறையாகும்.

அ) குறிஞ்சி                    ஆ) முல்லை                  இ)  மருதம்                    ஈ) நெய்தல்

14) தமிழினத்தை ஒன்றுப்படுத்தும் இலக்கியமாக ம.பொ.சி கருதியது ____

அ) திருக்குறள்               ஆ) புறநானூறு              இ) சிலப்பதிகாரம்           ஈ) கம்பராமாயணம்

15) “ மதிலை காத்தல் “ ________ திணையாகும்.

அ) வெட்சி                      ஆ) உழிஞை                 இ) நொச்சி                     ஈ) வஞ்சி

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                               4×2=8

21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

16. வசன கவிதை குறிப்பு வரைக

17. ஞானப்பிரகாசம் எவ்வாறு சிவஞானம் ஆனார்?.

18. தாவரங்களின் நுனிப்பகுதியைக் குறிக்கும் சொற்கள் யாவை?

19. கெடுப்பார் இலானுங் கெடுபவர் யார்? ஏன்?

20. உறங்குகின்ற கும்பகன்ன எழுந்திராய் எழுந்திராய்

 காலதூதர் கையிலே உறங்குவாய் உறங்குவாய் – கும்பகன்னனை என்னச் சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

21.  “ உலகு “ – என முடியும் திருக்குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                                   5×2=10

22. எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?

அ) தேமா புளிமா காசு                 ஆ) கூவிளம் புளிமா நாள்

இ) தேமா புளிமா காசு                 ஈ) புளிமா தேமா பிறப்பு

23. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக

அ) உழவர்கள் மலையில் உழுதனர்        ஆ) முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறு பரதவர் கடலுக்குச் சென்றனர்.

24. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும்.

      துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது – இத்தொடர்களை ஒரேத் தொடராக இணைத்து எழுதுக.

25. கலைச்சொல் தருக:- அ) INTELLECTUAL                   ஆ)  DOCUMENT

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளிகளுக்கான மாற்று வினா

தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க:- மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்

26. இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின் விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?

இதோ…………இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா, இல்லையா? மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

27. அமர்ந்தான் – பகுபத உறுப்பிலக்கணம் தருக.

28. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.

இயற்கை – செயற்கை

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                        2×3=6

29. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்து சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.

30. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

31. காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக.

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                         2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக,அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.

33. “ பகர்வனர் திரிதரு நகரவீதியும்;

      பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

     கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;

    தூசும்,துகிரும் ஆரமும் அகிலும்”

அ) இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

ஆ) பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.

இ) காருகர் – பொருள் தருக.

34.  அடிபிறழாமல் எழுதுக.

“ வெய்யோன் ஒளி“ எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடல்

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                                   2×3=6

35. . அருளொடும்  அன்பொடும் வாராப் பொருளாக்கம்

      புல்லார் புரள விடல் – இக்குறட்பாவிற்கு அலகிட்டு வாய்பாடு தருக.

36. தன்மை அணியினை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

37. முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

      இன்மை புகுத்தி விடும் – இக்குறளில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                                          5×5=25

38. அ) இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக

( அல்லது )

ஆ) பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள மெய்க்கீர்த்தி பாடலின் நயத்தை எழுதுக..

39. அ) ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை,வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான சுவரொட்டியை வடிவமைத்து அளிக்கவும்.                                               ( அல்லது )

 ஆ. நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கையாக எழுதுக.

மகளிர் நாள் விழா

இடம்பள்ளிக் கலையரங்கம்                                        நாள் -24.01.2020

கலையரங்கத்தில் ஆசிரியர்கள்,மாணவர்கள் கூடுதல்தலைமையாசிரியரின் வரவேற்புஇதழாளர் கலையரசியின் சிறப்புரைஆசிரியர்களின் வாழ்த்துரைமாணவத் தலைவரின் நன்றியுரை.

40. நயம் பாராட்டுக:-

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

நேர்ப்பட வைத்தாங்கே

    குலாவும் அமுதக் குழம்பைக் குடிதொரு

கோல வெறிபடைத்தோம்;

    உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்

ஓட்டி மகிழ்ந்திடுவோம்;

   பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு

பாடுவதும் வியப்போ?                 - பாரதியார்

41.விண்ணப்பப் படிவத்தை நிரப்புக:- மேல்நிலை வகுப்பு சேர்க்கை விண்ணப்பம்.

42.அ) மொழிபெயர்க்க.

            Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had  the most fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight,seasonal rains and the fertility of the soil.Among these elements of nature,sunlight was considered indispensible by the ancient

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல   காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத்  தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக ( வெள்ளத்தில் மூழ்குதல் ) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.

1. பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.

2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?

3. பெய்த மழைஇத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?

5. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                                              3×8=24

43. அ) அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளி பயணம் “ – என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக

( அல்லது )

ஆ) மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம்,அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க

44. அ) தம்மை ஓர் இலக்கியவாதியாக அடையாளப்படுத்திக் கொண்ட பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்.விடுதலை போராட்ட போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் குறித்தச் செய்திகளை கட்டுரையாக எழுதுக.                                                                   ( அல்லது )

ஆ) அழகிரி சாமியின் ‘ ஒருவன் இருக்கிறான் ‘ என்னும் சிறுகதையில் மனத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து எழுதுக

45. அ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

முன்னுரை – அமுதமொழி – சங்கத் தமிழ் – தமிழ் வளர்த்த சான்றோர் – தமிழ் இலக்கிய வரலாறு - முடிவுரை

( அல்லது )

ஆ) முன்னுரை – இளமையும் கல்வியும் – முதல் விண்வெளிப் பயணம் – இறுதிப் பயணம் -  விருதுகளும் அங்கீகாரங்களும் – முடிவுரை – குறிப்புகளைக் கொண்டு

 “ விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் “ எனும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

WAIT FOR 10 SECONDS

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post