SALEM DT - UNIT TEST 2 - 10TH TAMIL - ANSWER KEY - PDF

 

சேலம் - மாவட்டம்

பத்தாம் வகுப்பு

தமிழ்

அலகுத் தேர்வு -1  

விடைக்குறிப்பு

 சேலம் -அலகுத் தேர்வு – 2 – வினாத்தாள்

( இயல் 4,5)

டிசம்பர் - 2022-2023

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  1.30 மணி                                                                              மதிப்பெண் : 50

பகுதி – 1

மதிப்பெண்கள் - 8

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஆ. இறைவனிடம் குலசேகராழ்வார்

1

2.

இ. கல்வி

1

3.

ஈ இலா

1

4.

இ. அறியாவினா, சுட்டு விடை

1

5.

ஈ) ஸ்டீபன் ஹாக்கிங்

1

6.

ஆ. மீளும் துயர்

1

 

இ. கொடுக்காது சிவந்த

1

 

ஈ. தொலைவில் அமர்க

1

பகுதி – 2

பிரிவு - 1

7

          மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார்.

2

8

இந்தி, தேசிய அளவிலான வேலை வாய்ப்பு பெறுவதற்கு உகந்தது. ( பொருத்தமான பதில் இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் )

2

9

அமர்ந்தான் – அமர் + த்(ந்)+த்+ ஆன்

அமர் – பகுதி

த்(ந்) – சந்தி

ந் – ஆனது விகாரம்

த் – இறந்த கால இடைநிலை

ஆன் – ஆண்பால் வினை முற்று விகுதி

2

10.

உறுதித்தன்மை நோக்கி சொல்லப்பட்டதால் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது

2

11.

காமராசர் நகர் எங்கே இருக்கிறது? – அறியா வினா

இந்த வழியாகச் செல்லுங்கள் – சுட்டு விடை

1

1

12.

அ) யாழிசை                        ஆ) பேத்தி

2

13.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

2

பகுதி – 2

பிரிவு - 2

14.

மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார். அதுபோல நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அருளையே எதிர்பார்த்து வாழ்கிறேன்.

3

15.

Ø  கல்வி நமக்கு மகிழ்ச்சியான வாழ்வைத் தரும்

Ø  சமூகத்தில் நற்பெயருடன் இருக்க கல்வி அவசியம்.

Ø  பிறருடைய உதவி நாடாமல் சுயமாக வாழ கல்வி அவசியம்

Ø  கல்வி நமக்கு உறுதியான பாதுகாப்பு தரும்

3

16.

வினா ஆறு வகைப்படும்

அறிவினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா

3

17

அ. அழகிய கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.

ஆ. நிழல் தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்

இ. உயர்கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

3

18

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ

ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே

(அல்லது )

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று.

 

3

பகுதி – 3

படிவம் நிரப்புக

19



5

20

1.குழு விளையாட்டுகள் விளையாடுதல்.

2.உலக நிகழ்வுகளைப் பற்றி  கலந்துரையாடுதல்.

3.விளையாட்டு களத்திற்குச் சென்று விளையாடுதல்.

4நூல்களைப் படித்தல்.

5..திறன்பேசியின் தீமைகளை எடுத்துரைத்தல், அதன் பயன்பாட்டை குறைக்கச் செய்தல்.

4

20

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத  

 என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி திறன்பேசி என் ஆளுமையைப் பற்றிஎழுது என்றது

மனிதன் என் அடிமைத்தனத்தை பற்றி எழுது என்றான்

 நான் எழுதுகிறேன் திறன்பேசிக்கு

 அடிமையாகாதே என்று

4

21.

மலர்: தேவி,அறையை விட்டு வெளியே வரும் போது மின்விளக்கை அணைத்துவிட்டு வா.

தேவி: ஆமாம்! நாம் மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.

மலர்: நம்முடைய தேசம் தெருவிளக்குகளுக்கு அதிக மின்சாரத்தைச் செலவிடுகிறது.

4

 

21.

1. பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.

            மீண்டும் மீண்டும்

2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?

            தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது

3. பெய்த மழைஇத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

            பெய்மழை

4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?

            நீருக்கும் ஆற்றல் உண்டு.

4

22

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மன்னனும் இடைக்காடனும்

இறைவனிடம் முறையிடல்

இறைவன் நீங்குதல்

மன்னன் முறையிடல்

புலவனுக்கு சிறப்பு செய்தல்

முடிவுரை

முன்னுரை :

          கபிலரின் நண்பர் இடைக்காடனரை மன்னன் இகழ்ந்ததன் பொருட்டு இறைவன புலவனின் குரலுக்கு செவி சாய்த்த நிகழ்வைக் இக்கட்டுரையில் காண்போம்.

மன்னனும் இடைக்காடனும்

·         மன்னன் குசேலேப் பாண்டியன் முன் இடைக்காடன் தன் கவிதையை பாடினார்

·         மன்னன் அதனை பொருட்ப்படுத்தாமல்  இகழ்ந்தார்

·         புலவன்  அங்கிருந்து வெளியேறினார்.

இறைவனிடம் முறையிடல்

·         இடைக்காடன் இறைவனிடம் முறையிடல்

·         மன்னன் தன்னை இகழவில்லை.

·         இறைவனான உன்னை இகழ்ந்தான்.

இறைவன் நீங்குதல்

·         இறைவன் இதனைக் கண்டு கடம்பவன கோயிலை விட்டு நீங்கினார்

·         வையை ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோயிலில் சென்றார்.

மன்னன் முறையிடல் :

·         மன்னன் இறைவன் நீங்கியதைக் கண்டு வருத்தம் அடைந்தான்.

·         இடைக்காடன் பாடலை இகழ்ந்தது தவறு தான் பொறுத்தருள   வேண்டினான்

புலவனுக்கு சிறப்பு செய்தல்

·         மன்னன் இடைக்காடனாரிடம் தன்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டுதல்

·         இறைவன் சொல் கேட்டு இடைக்காடனுக்கு மன்னன் சிறப்பு செய்தான்

முடிவுரை :

          மன்னனின் சொல் கேட்ட புலவர்களின் கோபம் தணிந்தது.

இடைக்கானார் புலவரின் பாடலை இகழ்ந்தன் காரணமாக இறைவன் புலவனின் குரலுக்குச் செவிச்சாய்த்தார்,

5

22

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மேரி

அவமானம்

புதிய நம்பிக்கை

கல்வி

உதவிக்கரம்

மேல்படிப்பு

முடிவுரை

முன்னுரை :

          மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மேரி :

·         சாம் – பாட்ஸி இணையருக்கு மகளாகப் பிறந்தவள் மேரி.

·         பருத்திக்காட்டில் வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள்.

அவமானம் :

·         மேரி பாட்ஸியுடன் பென்வில்ஸன் வீட்டிற்கு செல்கிறார்கள்.

·         மேரி அந்த வீட்டின் அலமாரியிலிருந்த புத்தகத்தை எடுக்கிறாள்.

·         பென்வில்ஸன் இளையமகள் அவளிடமிருந்து புத்தகத்தை பிடிங்கினாள்.

·         உனக்கு படிக்கத் தெரியாது என கூறினாள்.

·         மேரி மனம் துவண்டாள்.

புதிய நம்பிக்கை

·         மேரிக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உணடானது.

·         ஒரு நாள் மிஸ் வில்ஸன் என்பவர் “ உன் போன்ற குழந்தைகள் படிக்க வேண்டும். நீ சீக்கிரமாக மேயெஸ் வில்லிக்கு வர வேன்டும்.

·         மேரிக்கு புதிய நம்பிக்கை பிறந்தது.

கல்வி

·         மேரி ஐந்து மைல்கள் நடந்து சென்று கல்வி கற்றாள்.

·         சில வருடங்கள் கழித்து மேரிக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

·         அதில் “ இந்த பட்டம் பெறும் மாணவர் எழுதவும் படிக்கவும் கூடியவர் “ என எழுதப்பட்டிருந்தது.

 

உதவிக்கரம்

·         மிஸ்வில்சன் மூலம் மேரிக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி

·         அவளின் மேல்படிப்பு செலவுக்காக மேற்குப் பகுதியில் வாழ்கின்ற வெள்ளைக்கார பெண் மணி பணம் அனுப்பி இருக்கிறார்.

·         அவள் மேல் படிப்புக்காக டவுணுக்கு செல்கிறாள்.

மேல்படிப்பு

·         மேரியை மேல்படிப்பு படிப்பதற்காக இரயில் நிலையத்தில் அவளது கிராமமே வழியனுப்ப திரண்டு வந்தது.

·         மிஸ் வில்ஸனும் இரயில் நிலையத்தில் வந்தார்கள்.

முடிவுரை

          எப்படிப்பட்ட நிலையிலும் கல்வி நம்மை உயர்த்தும் என்பதற்கு மேரியின் வாழ்க்கையை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். மேரியிடமிருந்து பறிக்கப்பட்டப் புத்தகம் அவள் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றியது என்பதனை இக்கட்டுரை வழியாகக் கண்டோம்

5

23.

குறிப்புச் சட்டம்

முன்னுரை

பிறப்பும்,கல்வியும்

விண்வெளிப் பயணம்

இறப்பு

விருது

முடிவுரை

முன்னுரை :

          விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய பெண் வீராங்கனை கல்பனா சாவ்லா குறித்து நாம் இக்கட்டுரையில் காணலாம்.

பிறப்பும், கல்வியும் :

பிறப்பு : இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் கர்னலில் ஜூலை 1,1961 இல் பிறந்தார்.

            பெற்றோர் : பனாரஸ்லால் - சன்யோகிதா தேவி

கல்வி : கர்னலில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியல் துறையில் இளங்கலைப் பட்டம்

·         டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம்.

·         . 1986-ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக் கழகத்தில் 2-ஆவது முதுகலைப்பட்டம்.   

·         பிறகு 1988-ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

விண்வெளிப் பயணம்:

·         1995 இல் நாசா விண்வெளி வீரர் பயிற்சியில் இணைந்து கொலம்பிய விண்வெளி ஊர்தி எஸ்,டி,எஸ்-87 இல் பயணம் செய்தார்,

·         சுமார் 372 மணிநேரம் விண்வெளியில் இருந்து சாதனையுடன் பூமி திரும்பினார்.

வீர மரணம் :

·         2003இல் ஜனவரி 16 ந் தேதி அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ் 107 இல மீண்டும் பயணம் செய்தார்.

·         அந்த விண்கலம் ஆய்வை முடித்து திரும்பிய போது பிப்ரவரி -1 இல் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச் சிதறியதில் கல்பனா சாவ்லாவுடன் உடன் பயணித்த 7 வீரர்களும் மரணமடைந்தனர்

விருது:

·         நியூயார்க் நகரின் ஒரு சாலைக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

·         பிப்ரவரி 1ந் தேதி கல்பனா சால்வலா நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

·         2011 முதல் வீரதீர சாதனைப் புரிந்த பெண்களுக்கு “ கல்பனா சாவ்லா விருது “ அரசு வழங்கி வருகிறது.

முடிவுரை:

          மாணவர்களாகிய நாமும் இவரைப் போன்றவர்களை உதாரணமாகக் கொண்டு விடாமுயற்சியுடன் படித்தால் அனைத்தையும் சாதிக்கமுடியும்.

         

4

23

குறிப்புச்சட்டகம்

நூலின் தலைப்பு

நூலின் மையப் பொருள்

மொழிநடை

வெளிப்படுத்தும் கருத்து

நூலின் நயம்

நூல் கட்டமைப்பு

சிறப்புக்கூறு

  நூல் ஆசிரியர்

நூலின் தலைப்பு:

                   பரமார்த்தகுரு கதை

நூலின் மையப் பொருள்:

                      சீடர்கள் குருவிடம் கொண்டுள்ள பக்தியும்,விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது நூலின் மையப் பொருள்.

மொழிநடை:

                   நகைச்சுவையுடன் யாவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.

வெளிப்படுத்தும் கருத்து:

                   பகுத்தறிவுடன் செயலபட வேண்டும் என ஒவ்வொரு கதையிலும் வெளிப்பட்டு இருக்கிறது.

நூலின் நயம்:

                   விழிப்புணர்வுடனும் நகைச்சுவையுடனும் எழுதப்பட்டுள்ளது.

நூல் கட்டமைப்பு:

                   சிறுவர்கள் ஆர்வமுடன் படிக்கும் வகையில் நூலின் கட்டமைப்பு உள்ளது.

சிறப்புக்கூறு:

                   ஒவ்வொரு கதையும் பகுத்தறியும் திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது.

நூல் ஆசிரியர்:

                   வீரமாமுனிவர்.

 

 

 

  CLICK HERE TO GET PDF

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,

தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி

 

www.tamilvithai.com

www.kalvivithaigal.com


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post