அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். சேலம் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை மூலம் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம்,கணிதம் ஆகிய மூன்று பயிற்சிக் கட்டகம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு வாரமும் செய்ய வேண்டிய செயல்பாடுகள், வார இறுதியில் மதிப்பீடு வினாக்கள் என சிறப்பாக தயாரிக்கப் பட்டது. அதன் புத்தக வடிவம் சென்ற வாரம் அனைத்துப் பள்ளிகளுக்கும் கொடுக்கப்பட்டது. அதனைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும். இந்த பயிற்சிக் கட்டகமானது சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழு கொண்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் PDF வடிவம் நமது தமிழ்விதை வலைப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வேண்டும் ஆசிரியர்கள் இதனைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.
நன்றி, வணக்கம்
கணிதம்