அன்பிற்கினிய ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் இனிய வணக்கம். ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் வரும் வாரம் முதல் காலாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த காலாண்டு மாநில அளவில் இல்லாமல் அந்ததந்த மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரித்து தேர்வு வைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு தேதிகளில் நடைபெற உள்ளது. இது அந்ததந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம் மாவட்டத்திற்கு வரும் 23-09-22 முதல் காலாண்டுத் தேர்வு மற்றும் முதல் பருவத் தேர்வு நடைபெற உள்ளது. மேலும் பல மாவட்டங்களில் இந்த வாரம் முதல் தேர்வு இருக்கும் எனவே அந்த காலாண்டுத் தேர்வு தமிழ்ப் பாடத்திற்கு வினாத்தாள் அமைப்பு எப்படி இருக்கும் என்பதுக் குறித்த நேரலை வகுப்பு நமது தமிழ்விதை வலைதளம் மூலம் மாலை 6.20 மணிக்கு ஒளிபரப்பாகும். ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தவறாது பங்கேற்று காலாண்டுத் தேர்வில் நாம் எவ்வாறு தயார் ஆக வேண்டும் என்பதனை வரையறுத்துக் கொள்ள ஏதுவாக இருக்கும். மேலும் இது போன்று வகுப்பு இனி வரும் காலங்களில் உங்களுக்கு கிடைக்கும். இதில் பங்கேற்று உங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். உங்களுக்கு தமிழ் பாடம் சார்ந்து எந்த சந்தேகங்களையும் கேளுங்கள். உங்களின் ஐயங்களுக்கு நேரலை வகுப்பு மூலமாகவோ, வலைதளம் மூலமாகவோ தீர்த்து வைக்கப்படும். சரி மாணவர்களே!, எதிர் வரும் காலாண்டுத் தேர்வு தமிழ்ப் பாடத்தில் அதிக பட்ச மதிப்பெண் பெறுவது எப்படி? வினாத்தாள் அமைப்பு எப்படி இருக்கும் ? மாதிரி வினாத்தாள் என அனைத்தும் இன்றைய நேரலை ( 18-09-2022 ) வகுப்பில் கிடைக்கும். தொடர்ந்து காணுங்கள், அதிகபட்ச மதிப்பெண் பெறுங்கள்.
நன்றி , வணக்கம்
Kathiresan
ReplyDeleteYes
ReplyDelete