ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
இயல் வாரியான வினாத்தாள் தொகுப்பு
ஒன்பதாம் வகுப்பு - தமிழ் – வினாத்தொகுப்பு
சிறப்பு வழிகாட்டி
இயல் – 4 எட்டுத்திக்கும் சென்றிடுவீர்
ஒன்பதாம் வகுப்பு – தமிழ்
அ) பலவுள்
தெரிக.
1. கீழ்க்காணும்
மூன்று தொடர்களுள் –
அ) இருந்த இடத்திலிருந்தே
பயணச்சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப் பெரிய இந்திய நிறுவனம் இந்தியத் தொடர்வண்டி
உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் ஆகும்.
ஆ) வங்கி
அட்டை இல்லை என்றால் அலைபேசி எண், வங்கிக் கணக்கு
எண் ஆகியவற்றைக் கொண்டு பணம் செலுத்துதல் இயலாது.
இ) திறன்
அட்டைகள் என்பவை குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டனவாகும்.
i) அ, ஆ
ஆகியன சரி; இ தவறு ii)
அ, இ ஆகியன சரி; ஆ தவறு
iii) அ தவறு; ஆ, இ ஆகியன சரி iv) மூன்றும் சரி
2. தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?
அ) தேசியத்
திறனறித் தேர்வு ஆ) ஊரகத் திறனறித்
தேர்வு
இ) தேசியத் திறனறி, கல்வி உதவித் தொகைத் தேர்வு ஈ)
மூன்றும் சரி
3. ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே இவ்வடிகளில் அதனொடு
என்பது எதைக் குறிக்கிறது?
அ) நுகர்தல் ஆ) தொடு உணர்வு இ) கேட்டல் ஈ)
காணல்
4. பின்வரும் தொடர்களைப் படித்து ‘நான்’ யார் என்று கண்டுபிடிக்க .
அறிவியல்
வாகனத்தில் நிறுத்தப்படுவேன் எல்லாக்
கோளிலும் ஏற்றப்படுவேன் இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர்
அ) இணையம் ஆ) தமிழ் இ)
கணினி ஈ) ஏவுகணை
5. விடை வரிசையைத் தேர்க .
அ) இது
செயற்கைக் கோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும்.
ஆ) இது
கடல்பயணத்துக்காக உருவாக்கப்பட்ட செயலி.
௧) நேவிக், சித்தாரா ௨) நேவிக்,
வானூர்தி
௩) வானூர்தி, சித்தாரா ௪) சித்தாரா, நேவிக்
குறுவினா
1. கூட்டுப் புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துகளை எழுதுக. .
2. இணையவழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள் எவையேனும் ஐந்தினைக்
குறிப்பிடுக.
3. மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே நான்க றிவதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறிவதுவே
அவற்றொடு செவியே இவ்வடிகளில் தொல்காப்பியர் குறிப்பிடும், மூவறிவு,
நான்கறிவு, ஐந்தறிவு உயிர்கள் யாவை?
4. செயற்கைக்கோள் ஏவு ஊர்தியில் பொருத்தும் செயலியைப் பற்றி திரு.சிவன்
கூறுவது யாது?
சிறுவினா
1. 'என் சம காலத் தோழர்களே' கவிதையில் கவிஞர்
விடுக்கும் வேண்டுகோள் யாது?
2. அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்புபடுத்துகிறார்?
3. பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் இணையவழிச் சேவைகளை எழுதுக.
4. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில் செயற்கைக் கோளின் பங்கு யாது?
5. வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவதன் இன்றியமையாமையை
எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
நெடுவினா
1. அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் இரண்டு இணையவழிச் சேவைகள் பற்றி
விரிவாகத் தொகுத்து எழுதுக.
2. இந்திய விண்வெளித் துறை பற்றிய செய்திகளை விவரிக்க
மொழியை
ஆள்வோம்
மொழிபெயர்க்க:-
Bottle xylophone: Make music with
bottles You will need: 6 glass bottles, Wooden spoon, Water, Food coloring.
1. Fill one bottle with water, then fill
each other bottle with slightly less than the bottle next to it.
2. Add some food coloring to help you to
see the different levels of water.
3. Tap the bottles with the end of a
wooden spoon. Can you play a tune?
Water music
Hitting the bottles with the spoon makes them
vibrate and produce a sound. The more the bottle vibrates, the higher the note
will be. The more water in a bottle, the less it vibrates, so less water means
higher notes.
பின்வரும் பத்தியில் இடம்பெற்றுள்ள
பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை எழுதுக.
நாக்குதான்
ஐம்புலன்களிலேயே ரொம்ப வீக்கு! அதற்கு நான்கு ஆதார ருசிகள்தாம் தெரியும். எலுமிச்சையின்
புளிப்பு, சர்க்கரையின் தித்திப்பு,
காபியின் கசப்பு, உப்பு. இவை தவிர ஸேவரி என்று
சொல்கிற டேஸ்ட் எல்லாம் இந்த நான்கு ஆதார ருசிகளின் கலப்புதான். இந்த ருசிகளைத்
தொட்டு அறிய நாக்கில் வெவ்வேறு இடங்கள் உண்டு. தித்திப்பு – நுனி நாக்கு, உப்பு – பரவலாக, குறிப்பா க நுனியில். கசப்பு –
உள்நாக்கு. புளிப்பு, ஸேவரி – நாக்கின் வலது – இடது
புறங்கள்! ஒரு சராசரி மனிதனுடைய நாக்கில் 9,000 சுவை
அரும்புகள் உண்டு. அலட்டல் வேண்டாம். குழந்தையின் நாக்குடன் ஒப்பிடும்போது இது
ஒன்றுமே இல்லை. ஏதாவது மருந்தை நாக்கில் தொட்டால் குழந்தைகள் என்னமாக எக்ஸ்பிரஷன்
காட்டுகின்றன! சுவைக்கு வாசனையும் சேரவேண்டும். இரண்டும் ஒத்துழைத்தால்தான் பாதாம்
அல்வா, ஐஸ்க்ரீம் போன்றவற்றை ரசிக்க முடியும். மூக்கைப்
பிடித்துக் கொ ண்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டுப் பாருங்கள். ஜில்லென்று இருக்கும்.
அவ்வளவே. கூடவே சூடும், உணவின் தோற்றமும் முக்கியம்.
மூக்குக்கு மொத்தம் ஏழு வாசனை கள். கற்பூர வாசனை, பெப்பர்மிண்ட்
வாசனை, மலர்களின் வாசனை, மஸ்க் என்னும்
அரபுசேக் செண்ட் வாசனை, ஈத்தர் அல்லது பெட்ரோல் வாசனை,
அழுகிய முட்டை வாசனை, காட்டமான அமில வாசனை.
இந்த ஏழு வாசனைகளின் கலப்புகளால் நம்மால் ஆயிரக்கணக்கான வாசனைகளை உணர முடிகிறது.
( ஏன்? எதற்கு? எப்படி?
– சுஜாதா)
கதையைப்
படித்து உரையாடலாக மாற்றுக.
ஒரு சிப்பி, இன்னொரு சிப்பியிடம் சொன்னது – ‘ஐயோ,
என்னால் வலி தாங்கமுடியவில்லையே '. ‘ஏன்?
என்னாச்சு? ’ என்று விசாரித்தது இரண்டாவது
சிப்பி. ‘எனக்குள் ஏதோ ஒரு கனமான உருண்டை, பந்து உருள்வதுபோல் இருக்கிறது. ரொம்ப வலி. ’ இதைக் கேட்டதும் இரண்டாவது
சிப்பிக்கு மிகுந்த மகிழ்ச்சி. பெருமையுடன் நெஞ்சு நிமிர்த்தி, 'ஆகா! நான் எந்த வலியும் இல்லாமல், நலமாக இருக்கிறேன்'
என்றது உற்சாகமாக. இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு நண்டு,
இரண்டாவது சிப்பியிடம் சொன்னது– ‘உனக்கு எந்த
வலியும் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம். வலியைத் தாங்க விரும்பாத நீ, எப்பொழுதும் இப்படியே வெறுமையாகக் கிடக்க வேண்டியதுதான். ஆனால், இப்போது சிரமப்படுத்தும் அந்த வலி, இன்னும் சில
நாள்களில், ஓர் அழகான முத்தாக உருவெடுக்கும். அது பெருமை
தேடித்தரும்.
’
நயம் பாராட்டுக:-
பொங்கியும்
பொலிந்தும் நீண்ட புதுப்பிடர் மயிர்சி லிர்க்கும்
சிங்கமே! வான
வீதி திகுதிகு எனஎ ரிக்கும்
மங்காத தணற்பி
ழம்பே ! மாணிக்கக் குன்றே ! தீர்ந்த
தங்கத்தின்
தட்டே! வானத் தகளியிற் பெருவி ளக்கே!
கடலிலே கோடி
கோடிக் கதிர்க்கைகள் ஊன்று கின்றாய்
நெடுவானில்
கோடி கோடி நிறைசுடர்க் கைகள் நீட்டி
இடைப்படு
மலையோ காடோ இல்லமோ பொய்கை ஆறோ
அடங்கநின்
ஒளிஅ ளாவ அமைந்தனை ! பரிதி வாழி! – பாரதிதாசன்
மொழியோடு விளையாடு
அகராதியில் காண்க.
இமிழ்தல் – ஒலித்தல், கக்குதல்
இசைவு
– உடன்பாடு
துவனம் – நெருப்பு
சபலை
– மின்னல்
துகலம் – பங்கு
ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக.
விலங்கு,
எழுதி, அகல், கால்,
அலை
அ)
எண்ணெய் ஊற்றி _____விளக்கு
ஏற்றியவுடன், இடத்தைவிட்டு ____
ஆ) எனக்கு____ பங்கு பிரித்துக் கொடுக்க
வா! கீழே ஈரம்: பார்த்து உன் ____ ஐ வை.
இ) கைப்பொருளைக் கடல் ______யில் தொலைத்துவிட்டு, கரையில் தேடி _____ந்தால்
கிடைக்குமா?
ஈ) வீட்டு_______ ஆன நாயுடன் விளையாடுவது
மகிழ்ச்சி தரும்; வெளியில் அதனைக் கழுத்து _______ உடன் மட்டுமே பிடித்துச் செல்ல
வேண்டும்.
உ)
எழுத்தாணிகொண்டு ______ தமிழை,
ஏவுகணையில் _____ எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.
ஒரு தொடரில் இருவினைகளை அமைத்து எழுதுக.
குவிந்து – குவித்து; சேர்ந்து
– சேர்த்து; பணிந்து – பணித்து; பொருந்து
– பொருத்து; மாறு – மாற்று.
(எ.கா) விரிந்தது – விரித்தது
அ) மழைக்காற்று வீசியதால், பூவின்
இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது.
குவிந்து – குவித்து
சேர்ந்து – சேர்த்து
பணிந்து – பணித்து
பொருந்து – பொருத்து.
மாறு – மாற்று
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

நிற்க அதற்குத்தக….
என் பெற்றோர் மகிழுமாறு நான் செய்ய வேண்டியது
1.
என் வீட்டின் நிலையறிந்து, தேவையறிந்து
பொருள்கள் வாங்குவது.
2. அலைபேசிப் பயன்பாட்டினைப் பத்து நிமிடங்களுக்கு மேல்
நீட்டிக்காமல் இருப்பது.
கலைச்சொல் அறிவோம்
Launch Vehicle
Download
Missile
PNR
(Passenger Name Record)
Nautical
Mile
Electronic
devices
Video
Conference
CLICK HERE TO GET PDF
ஆக்கம் :
வெ.ராமகிருஷ்ணன்,
தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்
பள்ளி, கோரணம்பட்டி,
சேலம்.
8667426866,8695617154