ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
இயல் வாரியான வினாத்தாள் தொகுப்பு
ஒன்பதாம் வகுப்பு - தமிழ் – வினாத்தொகுப்பு
சிறப்பு வழிகாட்டி
இயல் – 3 திருக்குறள்
ஒன்பதாம் வகுப்பு – தமிழ்
அ) படத்திற்கேற்ற
குறளைத் தேர்வு செய்க.
அ) நாணாமை
நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
ஆ)
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.
இ)
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாந் தலை.
2. பாடலின்
பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.
பாடல்
ஆண்டில்
இளையவனென்று அந்தோ அகந்தையினால்
ஈண்டிங்கு
இகழ்ந்தென்னை ஏளனம்செய் – மாண்பற்ற
காரிருள்போல்
உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப்
பயல்.
குறள்
அ) செவியிற்
சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
ஆ) மிகுதியான்
மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.
இ)
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி
மிக்க கொளல்
3. பொருளுக்கேற்ற
அடியைக் கண்டுபிடித்துப் பொருத்துக.
1) பசுமண்
கலத்துநீர் பெய்திரீஇ யற்று - அ) ஒருவனின்
செயல்பாடுகளே உரசி அறியும் உரைகல்
2) தத்தம்
கருமமே கட்டளைக்கல் – ஆ) அவ்வளவிற்குப் பெருமை உண்டாக்கும்
3) அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும் - இ) சுடாத மண்கலத்தில்
நீரூற்றி வைப்பதைப் போல
4. தீரா
இடும்பை தருவது எது?
அ. ஆராயாமை,
ஐயப்படுதல் ஆ.
குணம்,
குற்றம்
இ. பெருமை,
சிறுமை ஈ.
நாடாமை, பேணாமை
5. சொல்லுக்கான
பொருளைத் தொடரில் அமைத்து எழுதுக.
அ. நுணங்கிய
கேள்வியர் - நுட்பமான கேள்வியறிவு உடையவர்
ஆ. பேணாமை –
பாதுகாக்காமை
இ. செவிச்
செல்வம் – கேட்பதால் பெறும் அறிவு
ஈ. அறனல்ல
செய்யாமை – அறம் அல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல்
குறுவினா
1. நிலம்
போல யாரிடம் பொறுமை காக்க வேண்டும்?
2. தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும்
அஞ்சப் படும். இக்குறட்பாவின் கருத்தை விளக்குக.
3. ஒற்றொற்றித்
தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல். இக்குறட்பாவில்
அமைந்துள்ள நயங்களை எழுதுக.
4. கனவிலும்
இனிக்காதது எவர் நட்பு?
கதைக்குப்
பொருத்தமான குறளைத் தேர்வு செய்து காரணத்தை எழுதுக.
மெளனவிரதம் என்னும் தலைப்பில்
நான்கு நண்பர்கள் ஒரு சொ ற்பொழிவைக் கேட்டனர். தாங்களும் ஒரு வாரத்துக்கு மெளனவிரதம் இருப்பதாகத் தீர்மானம் செய்தனர். மெளனவிரதம்
ஆரம்பமாகி விட்டது! கொஞ்ச நேரம் போனதும் ஒருவன் சொன்னான், “எங்கள்
வீட்டு அடுப்பை அணைத்து விட்டேனா தெரியவில்லையே!“ பக்கத்திலிருந்தவன் “அடப்பா வி!
பேசிட்டியே!“ என்றான். உடனே மூன்றாவது ஆள், “நீ மட்டும் என்ன?
நீயும்தான் பேசிவிட்டா ய்!“ என்றான். நான்காவது ஆள், “நல்லவேளை ! நான் மட்டும் பேச வில்லை!“ என்றான். இப்படியாக அவர்களின் மெளனவிரதம் முடிந்துபோனது.
1. மறந்தும்
பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்த வன் கேடு.
2. திறனல்ல
தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
3. ஓதி
உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல
கலைச்சொல்
அறிவோம்
Excavation
Epigraphy
Hero
Stone
Cultural
Symbol
Embossed
sculpture
Inscription
CLICK HERE TO GET PDF
ஆக்கம் :
வெ.ராமகிருஷ்ணன்,
தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்
பள்ளி, கோரணம்பட்டி,
சேலம்.
8667426866,8695617154