ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
இயல் வாரியான வினாத்தாள் தொகுப்பு
ஒன்பதாம் வகுப்பு - தமிழ் பாடம் – வினாத்தொகுப்பு
சிறப்பு வழிகாட்டி
இயல் – 3 உள்ளத்தின் சீர்
ஒன்பதாம் வகுப்பு – தமிழ்
அ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-
1. பொருந்தாத இணை எது?
அ) ஏறுகோள் – எருதுகட்டி ஆ) திருவாரூர்
– கரிக்கையூர்
இ) ஆதிச்ச நல்லூர் – அரிக்க மேடு
ஈ) பட்டிமன்றம் – பட்டிமண்டபம்
2 முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக
அ) தமிழர்களின்
வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்
ஆ) தமிழர்களின்
வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான
இ) தொன்மையான வீரவிளையாட்டு
தமிழர்களின் ஏறுதழுவுதல்
ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்
3. பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் கூற்று
அ) அரிக்கமேடு அகழாய்வில்
ரோமானிய நாணயங்கள் கிடைத்தன.
ஆ) புறப்பொருள்
வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.
இ) எட்டு,பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின்
பின் வல்லினம் மிகாது
ஈ) பட்டிமண்டபம் பற்றிய குறிப்பு மணிமேகலையில்
காணப்படுகிறது.
4. ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்
அ) திசைச்சொற்கள்
ஆ) வடசொற்கள்
இ) உரிச்சொற்கள்
ஈ) தொகைச்சொற்கள்
5.. சொற்றொடர்களை முறைப்படுத்துக.
அ) ஏறுதழுவுதல்
என்பதை ஆ) தமிழ்
அகராதி இ) தழுவிப்
பிடித்தல் என்கிறது
i) ஆ- அ - இ ii) ஆ-இ-அ iii) இ – ஆ – அ iv) இ – அ – ஆ
ஆ) குறுவினா
1. நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?
2. தொல்லியல் சான்றுகள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்ய
வேண்டும். ஏன்?
3. ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறுபெயர்களைக் குறிப்பிடுக.
4. பழமணல் மாற்றுமின் ; புதுமணல் பரப்புமின் – இடஞ்சுட்டி
பொருள் விளக்குக.
5. பட்டிமண்டபம், பட்டிமன்றம் – இரண்டும் ஒன்றா? விளக்கம்
தருக.
6. ஏறுதழுதல் குறித்துத் தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடங்களைப்
பட்டியலிடுக.
சிறுவினா
1. வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக.
2. ஏறுதழுவுதல், திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?
3. வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில் அகழாய்வின் தேவை குறித்த உங்களது
கருத்துகளைத் தொகுத்துரைக்க.
4 உங்கள் ஊரில் நடைபெறுகின்ற
விழா முன்னேற்பாடுகளை இந்திர விழா நிகழ்களுடன் ஒப்பிடுக.
நெடுவினா
1. ஏறுதழுவுதல்
தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.
2. பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப்பாதுகாக்க நாம் செய்ய
வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக:-.
மொழியை ஆள்வோம்
அ) பொன்மொழிகளை மொழிபெயர்க்க.
1. A nations’s culture resides
in the hearts and in the soul of its people – Mahatma Gandhi
2. The art of people is a true mirror to
their minds – Jawaharlal Nehru
3. The biggest problem is the
lack of love and charity – Mother Teresa
4. You have to dream before
your dreams can come true – A.P.J.Abdul Kalam
5. Winners don’t do different; they do things
differently – Shiv Khera
ஆ) வடிவம் மாற்றுக:-
பின்வரும்
கருத்துகளை உள்வாங்கிக் கண்டு, வரிசைப் படுத்தி முறையான பத்தியாக்குக.
1. உலகின் மிகப்பெரிய கல்மரப்
படிமமும் இங்கே தான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
2. டைனோசர்கள் உலாவித் திரிந்த
தமிழ்மண் என்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள
ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.
3. இங்குக் கல்லாகிப் போன டைனோசர்
முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப்
படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன.
4. தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும்
தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன.
இ) மரபு
இணைச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. மேடும் பள்ளமும்
2. நகமும் சதையும்
3. முதலும் முடிவும்
4. கேளிக்கையும்
வேடிக்கையும்
5.
கண்ணும் கருத்தும்.
6. மேலும் கீழும்
ஈ) தொகுப்புரை எழுதுக.
பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்ற விழா நிக ந் ழ்ச்சிகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக.
ஈ ) பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
. தென்னிந்தியாவின்
அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன. தமிழக மாட்டினங்களின்
தாய் இனம் என்று 'காங்கேயம்' கருதப்படுகிறது.
பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் காங்கேயம் மாடுகள், ஆறு மாதம் வளர்ந்த பிறகு சாம்பல் நிறத்துக்கு மாறிவிடுகின்றன. பசுக்கள்
சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கின்றன. மிடுக்கான தோற்றத்துக்குப்
பெயர்பெற்ற காங்கேயம் இனக் காளைகள் ஏறுதழுவுதல் நிகழ்விற்கும் பெயர் பெற்றுள்ளன.
அத்துடன், ஏர் உழுவதற்கும் வண்டி இழுப்பதற் கும் அதிகம்
பயன்படுத்தப்படுகின்றன. கடுமையாக உழைக்கக்கூடிய காங்கேயம் மாடுகள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலத்தவரால் விரும்பி
வாங்கிச் செல்லப்படுகின்றன. இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி
செய்யப்படுகின்றன. கரூர் அமராவதி ஆற்றுத் துறையில் காங்கேய மாடுகளின் உருவம்
பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
1.
பின்வரும் நான்கு வினாக்களுக்கும் பொருந்தும் ஒரு விடையைத் தருக.
அ)
மிடுக்குத் தோற்றத்திற்கும் ஏறுதழுவுதலுக்கும் பெயர் பெற்றவை எவை ?
ஆ)
தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று கருதப்ப டுவது யாது?
இ)
பிற மாநிலத்தவர் விரும்பி வாங்கிச் செல்கின்ற காளை இனம் எது?
ஈ)
மேற்கண்ட பத்தி எதைக் குறிப்பிடுகிறது?
விடை
: காங்கேயம்
காளைகள்
2
) பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
அ)
கர்நாடகம் ஆ) கேரளா இ) இலங்கை ஈ) ஆந்திரா
3)
பிரித்து எழுதுக: கண்டெடுக்கப்பட்டுள்ளன
அ)
கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
ஆ)
கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன
இ)
கண்டெடுக்க + பட்டு + உள்ளன
ஈ)
கண் + டெடுக்க + பட்டு + உள்ளன.
4)
தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் காளைகள் மாடுகள் போற்றப்படுகின்றன
– இது எவ்வகைத் தொடர்?
அ)
வினாத் தொடர் ஆ) கட்டளைத் தொடர்
இ)
செய்தித் தொடர் ஈ) உணர்ச்சித் தொடர்
மொழியோடு
விளையாடு
அ) பொருள் எழுதி தொடரமைக்க:-
கரை;கறை குளவி;குழவி வாளை; வாழை பரவை;
பறவை
மரை. மறை
ஆ) அகராதியில்
காண்க.
இயவை , சந்தப்பேழை
, சிட்டம் , தகழ்வு , பெளரி
இ) பொருள் தரும்
வகையில் சொற்றொடர் உருவாக்குக.
கொடுக்கப்பட்டுள்ள
சொற்களைக் கொண்டு பொருள்தரும் வகையில் ஒரு சொல் லில் தொடரைத் தொடங்குக. அத்துடன்
அடுத்தடுத்துச் சொற்களைச் சேர்த்து, புதிய புதிய சொற்றொடர்களை
உருவாக்குக. இறுதியாக அத்தொடர் அனைத்துச் சொற்களையும் சேர்த்ததாக அமைய வேண்டும்.
காலங்களில்
தெருவில் வைக்காதீர்கள் காப்புக் கம்பிகள் கவனக் குறைவுடன் ஆகியவற்றின்
மீது காலை அறுந்த மழை மின்கம்பிகள்
ü வைக்காதீர்கள்
ü காலை வைக்காதீர்கள்
ஈ) குறுக்கெழுத்துப்
புதிர்
இடமிருந்து வலம்
2. விழாவறை காதை குறிப்பிடும் -
3. சரி
என்பதற்கான எதிர்ச்சொல் தரும் எழுத்துகள் இடம் மாறியுள்ளன –
7 பொங்கல்
விழாவையொட்டி நடத்தப்படும் சீறுவர்களுக்கான போட்டிகளில் ஒன்று
10. ஊழ்
என்பதற்குத் தற்காலப் பயன்பாட்டில் உள்ள சொல் –
13. மா+அடி
இதன் புணர்ந்த வடிவம் –
19. கொள்ளுதல்
என்பதன் முதல் நிலை திரிந்த சொல் –
வலமிருந்து
இடம்
9. தூய்மையற்ற குருதியை
எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் –
11. ஆராய்ச்சி என்பதன்
சொற்சுருக்கம் –
12. மணிமேகலைக் காப்பியத்தின்
ஆசிரியர் –
16. சல்லிக்கட்டு விளையாட்டுக்கு
உரிய விலங்கு –
18. தனி + ஆள் – சேர்த்து
எழுதுக –
மேலிருந்து கீழ்
1. தமிழர்களின் வீர
விளையாட்டு –
2.இவள் + ஐ – சேர்த்தால்
கிடைப்பது –
3. மரத்தில் காய்கள்
----- ஆக காய்த்திருந்தன –
4. ஆடிப்பட்டம் தேடி
–
5 உரிச்சொற்களுள்
ஒன்று –
6. ____ சிறந்தது –
8. நேரத்தைக் குறிப்பிடும்
வானியல் சொல் –
12. அகழாய்வில் கிடைத்த
கொள்கலன்களுள் ஒருவகை –
15. காய் பழுத்தால்
–
கீழிருந்து மேல்
14. ஒருவர் பற்றி ஒருவர்
பிறரிடம் இதை வைக்கக் கூடாது –
17. யா முதல் வரும் வினாப் பெயர் –
18. தகவிலர் என்பதற்கு
எதிர்ச்சொல்லாகத் திருவள்ளுவர் குறிப்பிடுவது -
ஊ ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
எ) நிற்க அதற்குத் தக
நான்
பாராட்டுப் பெற்ற சூழல்கள்
அ)
கூடுதலாக மீதம் கொடுத்த கடைக்காரரிடம் அந்தப் பணத்தை மீண்டும் அளித்த போது.
ஆ)
கட்டுரை ஏடுகளைக் கீழே தவறவிட்ட என் ஆசிரியருக்கு அதை எடுத்துத் தந்தபோது.
CLICK HERE TO GET PDF
வெ.ராமகிருஷ்ணன்,
தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்
பள்ளி, கோரணம்பட்டி,
சேலம்.
8667426866,8695617154