ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
இயல் வாரியான வினாத்தாள் தொகுப்பு
ஒன்பதாம் வகுப்பு – தமிழ்
அ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-
1. “ மிசை “ என்பதன் எதிர்சொல் என்ன?
அ) கீழே ஆ) மேலே இ)
இசை ஈ) வசை
2 நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
அ) அகழி ஆ) ஆறு இ) இலஞ்சி ஈ)
புலரி
3. பொருத்தமான விடையைத் தேர்க.
அ) நீரின்று அமையாது
உலகு - திருவள்ளுவர்
ஆ) நீரின்று அமையாது
யாக்கை - ஓளவையார்
இ) மாமழை போற்றுதும் - இளங்கோவடிகள்
க) அ,இ ௨) ஆ,இ ௩)
அ,ஆ ௪) அ,ஆ,இ
4. பொருத்தமான வினையை எடுத்து எழுதுக.
கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக ______
அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் _______
அ) வந்தான், வருகிறான் ஆ) வந்துவிட்டான், வரவில்லை
இ) வந்தான், வருவான்
ஈ) வருவான், வரமாட்டான்
5.. மல்லல் மூதூர் வயவேந்தே – கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
அ) மறுமை ஆ) பூவரசு
மரம் இ) வளம்
ஈ) பெரிய
ஆ) குறுவினா
1. “ கூவல் “ என்று அழைக்கப்படுவது எது?
2. உங்கள் பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
3. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – குறிப்புத் தருக
4. நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரிய
புராணம் எதனை ஒப்பிடுகிறது?
5. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது
அரண் – இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?
சிறுவினா
1. அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை – அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.
2. நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?
3. சோழர்காலக் குமிழித்தாம்பு எதற்காகப்
பயன்படுத்தப்பட்டது?
4 பட்ட மரத்தின்
வருத்தங்கள் யாவை?
நெடுவினா
1. நீரின்றி அமையாது
உலகு – என்னும் வள்ளுவரின் அடி உணர்த்தும் பொருள் ஆழத்தை எடுத்துக்காட்டுடன் விவரி
2. பெரியபுராணம் காட்டும்
திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.
3. 'தண்ணீர்’ கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக
மொழியை ஆள்வோம்
அ) அறிஞர்களின்
பொன்மொழிகளைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுக.
1. Every
flower is a soul blossoming in nature – Gerard De Nerval
2.
Sunset is still my favourite colour, and rainbow is second - Mattie Stepanek
3. An early
morning walk is a blessing for the whole day – Henry David Thoreau
4. Just
living is not enough… One must have sunshine, freedom, and a little flower –
Hans Christian Anderson
ஆ) பிழை
நீக்கி எழுதுக.
1. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின்
கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.
2. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர
வைத்தாள்.
3. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன. .
4. நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறோம்.
5. சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால்
தப்பிப்பான்
இ) பழமொழிகளைப்
பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.
1. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப்
பாய்வது போல.
2. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
3. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்.
4. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது
இ) வடிவம் மாற்றுக.
நீர்ச்
சுழற்சி குறித்த கருத்து விளக்கப்ப டத்தின் உட்பொருளைப் புரிந்துணர்ந்து பத்தியாக
மாற்றி அமைக்க..
ஈ ) வரவேற்பு மடல் எழுதுக.
சுற்றுச்
சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள்
பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்துகொள்ளும்
மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக.
உ) நயம் பாராட்டுக.
கல்லும்
மலையும் குதித்துவந்தேன் – பெருங்
காடும்
செடியும் கடந்துவந்தேன்;
எல்லை விரிந்த
சமவெளி – எங்கும்நான்
இறங்கித்
தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்.
ஏறாத மேடுகள்
ஏறிவந்தேன்-பல
ஏரி
குளங்கள் நிரப்பிவந்தேன்;
ஊறாத
ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல்
ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன். – கவிமணி
மொழியோடு
விளையாடு
அ) சொல்லுக்குள் சொல் தேடுக.
எ.கா. ஆற்றங்கரையோரம்
– ஆறு,
கரை, ஓரம்
கடையெழுவள்ளல்கள்,
எடுப்பார்கைப்பிள்ளை , தமிழ்விடுதூது
,பாய்மரக்கப்பல்
எட்டுக்கால்
பூச்சி
ஆ) அகராதியில் காண்க.
கந்தி , நெடில்
, பாலி , மகி , கம்புள் , கைச்சாத்து
இ ) சொற்களை இணைத்துத் தொடர்களை விரிவுபடுத்துக.
(எ.கா.) அரிசி போடுகிறேன்.
விடை: புறாவுக்கு
அரிசி போடுகிறேன்.
காலையில்
புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
நாள்தோறும்
காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன். நான் நாள்தோறும் காலையில் புறாவுக்கு அரிசி
போடுகிறேன்.
நான்
நாள்தோறும் காலையில் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
நான் நாள்தோறும் காலையில்
ஒருபோதும் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
1. மழை பெய்தது. 2. வானவில்லைப் பார்த்தேன். 3. குழந்தை சிரித்தது.
4. எறும்புகள் போகின்றன. 5. படம் வரைந்தான்.
ஈ ) வேறு பட்ட வினையெச்சங்களைப் பயன்படுத்தி,
முதல்
வினைகளைத் துணைவினைகளாக மாற்றுக.
முதல்வினைகள்
பார்த்தேன், கொடுத்தார், நடந்தான், சேர்ந்தார், அமைத்தோம்.
(எ.கா.) பார்த்தேன்
எழுதிப்
பார்த்தேன்
கொடுத்தார், நடந்தான்,
சேர்ந்தார், அமைத்தோம்
உ) வினையடிகளை முதல்வினையாகவும் துணைவினையாகவும் அமைத்துத் தொடர்களை உருவாக்குக.
வினையடி – வா, போ , செய், மாற்று, இரு, கொடு, கொள், எழுது, விடு, போடு.
எ) நிற்க அதற்குத் தக
என்
பொறுப்புகள்…
அ)
தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.
ஆ)
வகுப்பறையில் நண்பர்கள் வைத்திருக்கும் புதிய அழகிய பொருள்களைப் பார்த்தால் ஆசை வரும்.
அவர்களைப் போல நானும் முயன்று உழைத்து அவற்றை என்னுடைய பணத்தில் வாங்குவேன்.
இ)
அறையை விட்டு வெளியே செல்லும்போது மின்விசிறி, மின்விளக்குகளை நிறுத்திவிட்டுச்
செல்வேன்
வெ.ராமகிருஷ்ணன்,
தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்
பள்ளி, கோரணம்பட்டி,
சேலம்.
8667426866,8695617154