9TH - TAMIL - UNIT 1 - QUESTION BANK - PDF

 

ஒன்பதாம் வகுப்பு

தமிழ்

இயல் வாரியான வினாத்தாள் தொகுப்பு

இயல் – 1                                     அமுதென்று பேர்

ஒன்பதாம் வகுப்புதமிழ்

) சரியான விடையைத் தேர்ந்தெடு:-

1. குழுவில் விடுபட்ட வரிசையைத் தேர்ந்தெடுக்க.

குழு -1

குழு-2

குழு-3

குழு-4

நாவாய்

மரம்

துறை

தன்வினை

………………….

………………….

………………..

…………………..

அ) 1-வங்கம்,2-மானு,3-தாழிசை,4-பிறவினை

ஆ) 1.தாழிசை2-மானு,3-பிறவினை,4-வங்கம்

இ) 1-பிறவினை,2-தாழிசை,3-மானு,4-வங்கம்

ஈ) 1-மானு,2-பிறவினை,3-வங்கம்,4-தாழிசை                    

2 தமிழ்விடுதூது ____ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.

) தொடர்நிலைச் செய்யுள் ) புதுக்கவிதை ) சிற்றிலக்கியம் ஈ) தனிப்பாடல்

3. விடுபட்ட இடத்திற்கு பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக.

) _____இனம் ) ______ வண்ணம் இ) _____ குணம்

) _____ வனப்பு

௧ ) மூன்று,நூறு,பத்து,எட்டு                        ௨) எட்டு,நூறு,பத்து,மூன்று

௩) பத்து,நூறு,எட்டு,மூன்று                        ௪) நூறு,பத்து,எட்டு,மூன்று

4. காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! – எந்த

   காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!.............

இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்

) முரண்,எதுகை,இரட்டைதொடை ) இயைபு,அளபெடை,செந்தொடை

) மோனை,எதுகை,இயைபு          ஈ) மோனை,முரண்,அந்தாதி

5.. அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தா மணி அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கணக் குறிப்பு

) வேற்றுமை தொகை   ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்      

) பண்புத்தொகை          ) வினைத்தொகை

) குறுவினா                      

1. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?

2. தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

3. கண்ணி என்பதன் விளக்கம் யாது?

4. கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் ஐந்து தமிழ்ச் சொற்களைத் தருக.

5. அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை

   அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள் – இலக்கியங்களின் பாடுப்பொருளாக இவ்வடிகள் உணர்த்துவன யாவை?

இவை வாழ்வியலை விளக்கும் இலக்கணங்களாக அனைந்துள்ளன.

6. செய்வினையைச் செயபாட்டு வினையாக மாற்றும் துணைவினைகள் இரண்டினை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

7. வீணையோடு வந்தாள், கிளியே பேசு – தொடரின் வகையைச் சுட்டுக.

இ) சிறுவினா

1. சங்க இலக்கியத்தில் காணப்படும்  கடற்கலனுக்குரிய சொல் கிரேக்க மொழியில் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது?

2. திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.

3. மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?

4.காலந்த்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?

5  வளரும் செல்வம் – உரையாடலில் குறிப்பிடப்படும் பிறமொழிச் சொற்களைத் தொகுத்து அவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களைப் பட்டியலிடுக.

சைபர்பேஸ்                                -          இணைய வெளி

6. தன்வினை, பிறவினை – எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக.

7. புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய் – உங்கள் பங்கினை குறிப்பிடுக.

ஈ) நெடுவினா

1. திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்த்துணையாக இருக்கிறது என்பதனை எடுத்துக்காட்டுடன் விளக்குக.? 

2. தூது அனுப்பத் தமிழே சிறந்தது – தமிழ்விடுதூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.

மொழியை ஆள்வோம்

) :- மொழி பெயர்க்க:-

1. LINGUISTICS    -         

2. LITERATURE  -         

3. PHILOLOGIST  -                                 

4. POLYGLOT     -         

5. PHONOLOGIST -       

6. PHONETICS    -

) அடைப்புக்குள் உள்ள சொற்களைப் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட இடங்களில் எழுதுக.

1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் _______ ( திகழ் )

2. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் _________ ( கலந்துகொள் )

3. உலகில் மூவாயிரம் மொழிகள் ________.( பேசு )

4. குழந்தைகள் அனைவரும் சுற்றுலா ________ ( செல் )

5. தவறுகளைத் __________ ( திருத்து )

) வடிவம் மாற்றுக.

            பின்வரும் பத்தியைப் படித்துப் பார்த்து, அச்செய்தியை உங்கள் பள்ளி அறிவிப்புப் பலகையில் இடம் பெறும் அறிவிப்பாக மாற்றுக.

            மருதூர் அரசு மேல்நிலைப் பள்ளி இருபத்தைந்து ஆண்டுகளாகச் சிறந்த கல்விப்பணியை வழங்கி வருகிறது. இப்பள்ளி, சிறந்த கவிஞராகத் திகழும் இன்சுவை முதலான பன்முகப் படைப்பாளிகளை உருவாக்கிய பெருமை கொண்டது. ஒரு சோற்றுப் பதமாய் மருதூர்ப் பள்ளி மாணவி பூங்குழலி படைத்த “ உள்ளங்கையில் உலகம் “ என்ற நூலின் வெளியீட்டு விழா 21 ஜூன் திங்கள், பிற்பகல் 3:00 மணியளவில் நடைபெற உள்ளது. அவ்விழாவில் ( கின்னஸ் சாதனை படைத்த ) முன்னாள் மாணவர் இன்சுவை நூலை வெளியிட்டு, சிறப்புரை ஆற்றுவார். மருதூர்ப் பள்ளி விழா அரங்கத்தில் நிகழும் இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள, அனைவரையும் அழைக்கின்றோம்.

) தொடரைப் பழமொழிகொண்டு நிறைவு செய்க.

1. இளமையில் ________                      

2. சித்திரமும் கைப்பழக்கம் ­­­­­­­___________

3. கல்லாடம் படித்தவரோடு ­­­­­__________

4. கற்றோருக்குச் சென்ற _____________

உ) கடிதம் எழுதுக.

உங்கள் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனின் “ கால் முளைத்த கதைகள் “ என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.

எ) நயம் பாராட்டுக:-

விரிகின்ற நெடுவானில்,கடற்பரப்பில்

விண்ணோங்கு பெருமலையில்,பள்ளத்தாக்கில்

பொழிகின்ற புனலருவிப் பொழிலில்,காட்டில்

புல்வெளியில்,நல்வயலில்,விலங்கில்,புள்ளில்

தெரிகின்ற பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில்

தெவிட்டாத நுண்பாட்டே,தூய்மை ஊற்றே,

அழகு என்னும் பேரொழுங்கே மெய்யே,மக்கள்

அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே!

                                                       ம.இலெ. தங்கப்பா

ஏ) நிகழ்ச்சி நிரல் வடிவமைக்க.

            உங்கள் பள்ளி இலக்கிய மன்றத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் உலகத் தாய்மொழி நாள் ( பிப்ரவரி 21 ) விழாவிற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றை வடிவமைக்க

மொழியோடு விளையாடு

அ) அந்தாதிச் சொற்களை உருவாக்குக..

            அத்தி,குருவி,விருது,இனிப்பு வரிசையாக

அத்தி : அத்தி – திகைப்பு – புகழ்ச்சி – சிரிப்பு

குருவி , விருது , இனிப்பு , வரிசையாக

ஆ) அகராதியில் காண்க:-

நயவாமை , கிளத்தல், கேழ்பு, புரிசை, செம்மல்        

இ) கொடுக்கப்பட்ட வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி விடுபட்ட கட்டங்களில் காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை நிறைவு செய்க.

வா

 

இறந்த காலம்

நிகழ்காலம்

எதிர்காலம்

நான்

வந்தேன்

 

 

நாங்கள்

 

 

வருவோம்

நீ

 

வருகிறாய்

 

நீங்கள்

வந்தீர்கள்

 

 

அவன்

வந்தாள்

வருகிறாள்

வருவாள்

அவள்

 

 

 

அவர்

வந்தார்

 

 

அவர்கள்

 

 

 

அது

 

 

வரும்

அவை

 

வருகின்றன

 

ஈ) தா, காண், பெறு, நீந்து, பாடு, கொடு போன்ற வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி மேற்கண்ட கட்டத்தினைப் போன்று காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை அமைத்து எழுதுக.

உ) அடைப்புக்குள் உள்ள சொற்களைக் கொண்டு எழுவாய்,வினைஅடி, வினைக்குப் பொருத்தமான தொடர் அமைக்க.( திடலில், போட்டியில், மழையில், வேகமாக,மண்ணை )

எ.கா : நான் திடலில் ஓடினேன் ( தன்வினை )

          நான் திடலில் மிதிவண்டியை ஓட்டினேன் ( பிறவின )

எழுவாய்/பெயர்

வினையடி

தன்வினை

பிறவினை

காவியா

வரை

வரைந்தாள்

வரைவித்தாள்

கவிதை

நனை

 

 

இலை

அசை

 

 

மழை

சேர்

 

 

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக


செயல் திட்டம்

நீங்கள் வாழும் பகுதியில் மக்கள் பேசும் மொழிகளைப் பட்டியலிடுக.


நிற்க அதற்குத் தக


உங்களுடைய நாட்குறிப்பில் இடம் பெற்ற ஒரு வாரத்திற்குரிய மகிழ்ச்சியான செய்திகளைத் தொகுத்து அட்டவணைப்படுத்துக.

CLICK HERE TO GET PDF



Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post