8TH - TAMIL - QURTLY - ONE MARKS - WORK BOOK - PDF

 

வினா – வங்கி / எட்டாம் - தமிழ்

காலாண்டுத் தேர்வு சிறப்பு பயிற்சிப் புத்தகம்

புத்தக வினாக்கள்  / ஒரு மதிப்பெண் – வினாக்கள்

இயல் – 1

தமிழ்மொழி வாழ்த்து

) சரியான விடையைத் தேர்ந்தெடு:-

1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்__________

அ) வைப்பு         ஆ) கடல்           இ) பரவை        ஈ) ஆழி                        

2. ‘ என்றென்றும் ‘ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_____

) என் + றென்றும்        ) என்று + என்றும்       ) என்றும் + என்றும்    ) என் + என்றும்

3. ‘ வானமளந்தது ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது____________

) வான + மளந்தது        ) வான் + அளந்தது                  ) வானம் + அளந்தது    ) வான் + அளந்தது

4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________________

) அறிந்ததுஅனைத்தும்  ) அறிந்தனைத்தும்      ) அறிந்ததனைத்தும் ) அறிந்துனைத்தும்

5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்________

) வானம்அறிந்து           ) வான்அறிந்த             ) வானமறிந்த              ) வான்மறிந்த

6. தமிழ் மொழி வாழ்த்து – இப்பாடலில் உள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.

தமிழ்மொழி மரபு

7. பறவைகள் ________ பறந்து செல்கின்றன.

) நிலத்தில்      ) விசும்பில்     ) மரத்தில்       ) நீரில்

8. இயற்கையைப் போற்றுதல் தமிழர் _________

அ) மரபு             ஆ) பொழுது       இ) வரவு           ஈ) தகவு

9. ‘ இருதிணை ‘  என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________

அ) இரண்டு + திணை   ஆ) இரு + திணை         இ) இருவர் + திணை    ஈ) இருந்து + திணை

10.. ‘ ஐம்பால் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________

) ஐம் + பால்                ) ஐந்து + பால்             ) ஐம்பது + பால்             ) ஐ + பால்

தமிழ் வரிவடிவ வளர்ச்சி

11. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற ________ காரணமாக அமைந்தது.

அ) ஓவியக்கலை           ஆ) இசைக்கலை           இ) அச்சுக்கலை             ஈ) நுண்கலை

12. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ______ என அழைக்கப்படுகிறது.

அ) கோட்டெழுத்து           ஆ) வட்டெழுத்து             இ) சித்திர எழுத்து          ஈ) ஓவிய எழுத்து

13. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்_________

அ) பாரதிதாசன்              ஆ) தந்தை பெரியார்       இ) வ.உ.சிதம்பரனார்     ஈ) பெருஞ்சித்திரனார்

கோடிட்ட இடத்தை நிரப்புக:-

14. கடைச் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் ________ என அழைக்கப்பட்டன.

15. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்

எழுத்துகளின் பிறப்பு

16. இதழ்களை குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் ________

அ) இ,ஈ             ஆ) உ,ஊ          இ) எ,ஏ              ஈ) அ,ஆ

17. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ________

அ) மார்பு            ஆ) கழுத்து        இ) தலை          ஈ) மூக்கு

18. வல்லின எழுத்து பிறக்கும் இடம் __________

அ) தலை           ஆ) மார்பு           இ) மூக்கு          ஈ) கழுத்து

19. நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் ________

அ) க்,ங்             ஆ) ச்.ஞ்             இ) ட்,ண்           ஈ) ப்.ம்

பொருத்துக:-

20. க்,ங்            -          நாவின் இடை, அண்ணத்தின் இடை

21.  ச், ஞ்           -          நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி

22. ட்,ண்          -          நாவின் முதல், அண்ணத்தின் அடி

23. த்,ந்             -          நாவின் நுனி, அண்ணத்தின் நுனி

இயல் – 2

ஓடை

1.. பள்ளிக்குச் சென்று கல்வி __________ சிறப்பு.

) பயிலுதல்      ) பார்த்தல்      ) கேட்டல்       ) பாடுதல்

2.. செஞ்சொல் மாதரின் வள்ளைப் பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது _________

அ) கடல்                        ஆ) ஓடை                      இ) குளம்                       ஈ) கிணறு

3.. ‘ நன்செய் ‘ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

) நன் + செய்               ) நன்று + செய்                      ) நன்மை + செய்                     ) நல் + செய்

4.. ‘ நீளுழைப்பு ‘ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

அ) நீளு + உழைப்பு       ஆ) நீண் + உழைப்பு      இ) நீள் + உழைப்பு        ஈ) நீள் + உழைப்பு

5.. சீருக்கு + ஏற்ப – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் -------

அ) சீருக்குஏற்ப               ஆ) சீருக்கேற்ப               இ) சீர்க்கேற்ப                ஈ) சீருகேற்ப

29. ஓடை + ஆட – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______

அ) ஓடை ஆட                ஆ) ஓடையாட               இ) ஓடையோட             ஈ) ஓடைவாட

கோணக்காத்துப் பாட்டு

6.. வானில் கரு ______ தோன்றினால் மழை பொழியும் என்பர்.

அ) முகில்                       ஆ) துகில்                      இ) வெயில்                    ஈ) கயல்

7.. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் ________ யும் ஓட்டிவிடும்.

அ) பாலனை                  ஆ) காலனை                 இ) ஆற்றலை                ஈ) நலத்தை

8. ‘ விழுந்ததங்கே ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

அ) விழுந்த + அங்கே      ஆ) விழுந்த + ஆங்கே     இ) விழுந்தது + அங்கே   ஈ) விழுந்தது + ஆங்கே

9.. ‘ செத்திறந்த ‘ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

அ) செ + திறந்த              ஆ) செத்து + திறந்த         இ) செ + இறந்த              ஈ) செத்து + இறந்த

10.. பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் __________

அ) பருத்திஎல்லாம்          ஆ) பருத்தியெல்லாம்      இ) பருத்தெல்லாம்          ஈ) பருத்திதெல்லாம்

நிலம் பொது

11. செவ்விந்தியர்கள் நிலத்தை _________ மதிக்கின்றனர்

அ) தாயாக                     ஆ) தந்தையாக              இ) தெய்வமாக               ஈ) தூய்மையாக

12.. ‘ இன்னோசை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________

அ) இன் + ஓசை             ஆ) இனி + ஓசை           இ) இனிமை + ஓசை     ஈ) இன் + னோசை

13.. பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் __________

அ) பால்ஊறும்                ஆ) பாலூறும்                 இ) பால்லூறும்               ஈ) பாஊறும்

தொடரில் அமைத்து எழுதுக:-    1. வேடிக்கை             2. உடன்பிறந்தார்

வினைமுற்று

14..  மாடு வயலில் புல்லை மேய்ந்தது – இத்தொடரிலுள்ள வினைமுற்று ________

அ) மாடு             ஆ) வயல்          இ) புல்              ஈ) மேய்ந்தது

15..  பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று _________

அ) படித்தான்      ஆ) நடக்கிறான்              இ) உண்பான்               ஈ) ஓடாது

16.. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல்________

அ) செல்க          ஆ) ஓடு             இ) வாழ்க                      ஈ) வாழிய

திருக்குறள்

17.. புகழாலும் பழியாலும் அறியப்படுவது _________

அ) அடக்கமுடைமை       ஆ) நாணுடைமை         இ) நடுவுநிலைமை        ஈ) பொருளுடைமை

18.. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் ________

அ) வலிமையற்றவர்       ஆ) கல்லாதவர்               இ) ஒழுக்கமற்றவர்         ஈ) அன்பில்லாதவர்

19.. ‘ வல்லுருவம் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

அ) வல் + உருவம்          ஆ) வன்மை + உருவம்  இ) வல்ல + உருவம்       ஈ) வல்லு + உருவம்

20.. நெடுமை + தேர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________

அ) நெடுதேர்                  ஆ) நெடுத்தேர்               இ) நெடுந்தேர்                ஈ) நெடுமைதேர்

21.. ‘ வருமுன்னர் ‘ எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி_________

அ) எடுத்துக்காட்டு உவமை அணி           ஆ) தற்குறிப்பேற்ற அணி            இ) உவமை அணி         ஈ) உருவக அணி

கோடிட்ட இடத்தை நிரப்புக.

22.. வலியில் நிலைமையான் வல்லுருவம் ________

      புலியின் தோல் _________ மேய்ந் தற்று

23.. விலங்கொடு __________ அணையர் ________

     கற்றாரோடு ஏனை யவர்

இயல் – 3

நோயும் மருந்தும்

1. உடல் நலம் என்பது ___________ இல்லாமல் வாழ்தல் ஆகும்.

அ) அணி           ஆ) பணி           இ) பிணி           ஈ) மணி

2. நீலகேசி கூறும் நோயின் வகைகள் __________

அ) இரண்டு       ஆ) மூன்று        இ) நான்கு         ஈ) ஐந்து

3. ‘ இவையுண்டார் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது__________

அ) இ + யுண்டார்                        ஆ) இவ் + உண்டார்      இ) இவை + உண்டார்   ஈ) இவை + யுண்டார்

4. தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________

அ) தாம்இனி      ஆ) தாம்மினி      இ) தாமினி        ஈ) தாமனி

வருமுன் காப்போம்

5. காந்தியடிகள் ________ போற்ற வாழ்ந்தார்

அ) நிலம்            ஆ) வையம்       இ) களம்            ஈ ) வானம்

6. ‘ நலமெல்லாம் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

அ) நலம் + எல்லாம்         ஆ) நலன் + எல்லாம்       இ) நலம் + எலாம்           ஈ) நலன் + எலாம்

7. இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுத கிடைக்கும் சொல் _______

அ) இடவெங்கும்             ஆ) இடம்எங்கும்             இ) இடமெங்கும்             ஈ) இடம்மெங்கும்

8. வருமுன் காப்போம் – இப்பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை, மோனை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

தமிழர் மருத்துவம்

9. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு ____________ பயன்படுத்தினர்.

அ) தாவரங்களை                       ஆ) விலங்குகளை          இ) உலோகங்களை       ஈ) மருந்துகளை

10. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது ______ நீட்சியாகவே உள்ளது.

அ) மருந்தின்                  ஆ) உடற்பயிற்சியின்      இ) உணவின்               ஈ) வாழ்வின்

11. உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று _________

அ) தலைவலி                 ஆ) காய்ச்சல்                  இ) புற்று நோய்              ஈ) இரத்தக் கொதிப்பு

12. சமையலறையில் செலவிடும் நேரம் _________ செலவிடும் நேரமாகும்.

அ) சுவைக்காக              ஆ) சிக்கனத்திற்காக       இ) நல்வாழ்வுக்காக        ஈ) உணவுக்காக

எச்சம்

13. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் _________________ எனப்படும்.

அ) முற்று           ஆ) எச்சம்           இ) முற்றெச்சம்   ஈ) வினையெச்சம்

14. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் _____________

அ) படித்து          ஆ) எழுதி          இ) வந்து           ஈ) பார்த்த

15. குறிப்பு வினையெச்சம் ________ வெளிப்படையாகக் காட்டாது.

பொருத்துக:-

16. நடந்து                                  -          முற்றெச்சம்

17. பேசிய                                  -          குறிப்புப் பெயரெச்சம்

18. எடுத்தனன் உண்டான்         -          பெயரெச்சம்

19. பெரிய                                  -          வினையெச்சம்

 

இயல் – 4

கல்வி அழகே அழகு

1. கற்றவருக்கு அழகு தருவது ______

அ) தங்கம்                      ஆ) வெள்ளி                   இ) வைரம்                    ஈ) கல்வி

2. ‘ கலனல்லால் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________

அ) கலன் + லல்லால்      ஆ) கலம் + அல்லால்       இ) கலன் + அல்லால்      ஈ) கலன் + னல்லால்

தொடரில் அமைத்து எழுதுக:-

3. அழகு          4. கற்றவர்                5. அணிகலன்

புத்தியைத் தீட்டு

6. என் நண்பர் பெரும் புலவராக இருந்த போதும் ________ இன்றி வாழ்ந்தார்.

அ) சோம்பல்       ஆ) அகம்பாவம்               இ) வருத்தம்                  ஈ) வெகுளி

7. ‘ கோயிலப்பா ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________

அ) கோ + அப்பா ஆ) கோயில் + லப்பா       இ) கோயில் + அப்பா       ஈ) கோ + இல்லப்பா

8. பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________

அ) பகைவென்றாலும்     ஆ) பகைவனென்றாலும்             இ) பகைவன்வென்றாலும்          ஈ) பகைவனின்றாலும்

பல்துறைக் கல்வி

9. அறியாமை நீக்கி அறிவை விளக்குவது ________

அ) விளக்கு        ஆ) கல்வி          இ) விளையாட்டு                        ஈ) பாட்டு

10. கல்விப் பயிற்சிக்குரிய பருவம் __________

அ) இளமை       ஆ) முதுமை       இ) நேர்மை                   ஈ) வாய்மை

11. இன்றைய கல்வி _______ நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

அ) வீட்டில்         ஆ) நாட்டில்        இ) பள்ளியில்                 ஈ) தொழிலில்

கோடிட்ட இடத்தை நிரப்புக :-

12. கலப்பில் _____________ உண்டென்பது இயற்கை நுட்பம்

13. புற உலக ஆராய்ச்சிக்கு ___________ கொழுகொம்பு போன்றது.

14. வாழ்விற்குரிய இன்பத் துறைகளில் தலையாயது __________ இன்பம் ஆகும்.

பொருத்துக:-

15. இயற்கை ஓவியம்                 -          சிந்தாமணி

16. இயற்கை தவம்                     -          பெரிய புராணம்

17. இயற்கைப் பரிணாமம்                       -          பத்துப்பாட்டு

18. இயற்கை அன்பு                    -          கம்பராமாயணம்

வேற்றுமை

19. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது _____________

அ) எழுவாய்                   ஆ) செயப்படுபொருள்                 இ) பயனிலை               ஈ) வேற்றுமை

20. எட்டாம் வேற்றுமை ____________ வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.

அ) எழுவாய்                   ஆ) செயபடுபொருள்                   இ) விளி                                    ஈ) பயனிலை

21. உடனிகழ்ச்சிப் பொருளில் ________ வேற்றுமை வரும்

அ) மூன்றாம்                  ஆ) நான்காம்                             இ) ஐந்தாம்                     ஈ) ஆறாம்

22. ‘ அறத்தான் வருவதே இன்பம் ‘  - இத்தொடரில் __________ வேற்றுமை பயின்று வந்துள்ளது.

அ) இரண்டாம்               ஆ) மூன்றாம்                             இ) ஆறாம்                     ஈ) ஏழாம்

23. ‘ மலர் பானையை வனைந்தாள் ‘ – இத்தொடர் ____________ பொருளைக் குறிக்கிறது.

அ) ஆக்கல்                     ஆ) அழித்தல்                              இ) கொடை                   ஈ) அடைதல்

பொருத்துக:-

24. மூன்றாம் வேற்றுமை                                   -          இராமனுக்குத் தம்பி இலக்குவன்

25. நான்காம் வேற்றுமை                                   -          பாரியினது தேர்

26. ஐந்தாம் வேற்றுமை                          -          மண்ணால் குதிரை செய்தான்

27. ஆறாம் வேற்றுமை                           -          ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்

 

 விரைவில் இணைய வழித் தேர்வுக்கான இணைப்பு வழங்கப்படும்.

CLICK HERE TO DOWNLOAD PDF

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

வடிவமைப்பு :

 திரு. வெ.ராமகிருஷ்ணன்,

அரசு உயர்நிலைப் பள்ளி, கோரணம்பட்டி,

சேலம்.



தொடர்புக்கு :- 8667426866, 8695617154

நமது வலைதளங்கள் :   WWW.TAMILVITHAI.COM                          WWW.KALVIVITHAIGAL.COM 

குழுக்களில் சேர :

    WHATSAPP :                                        


                                                        

 

 

TELEGRAM :


 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post