7TH - TAMIL - TERM 1 - UNIT 1 - QUESTION BANK - PDF

 

ஏழாம் வகுப்பு

தமிழ்

முதல் பருவம்

வினாத் தொகுப்பு

இயல் - 1

இளந்தமிழ்

ஏழாம் வகுப்பு

தமிழ் – வினாத்தொகுப்பு

பருவம் : 1                                                                 இயல் : 1

அமுத தமிழ்                                                                               எங்கள் தமிழ்

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                     

1. 'நெறி' என்னும் சொல்லின் பொருள் _________.

அ) வழி ஆ) குறிக்கோள் இ) கொள்கை ஈ) அறம்

2. ‘குரலாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

அ) குரல் + யாகும் ஆ) குரல் + ஆகும் இ) குர + லாகும் ஈ) குர + ஆகும்

3. வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

அ) வான்ஒலி ஆ) வானொலி இ) வாவொலி ஈ) வானெலி

ஆ) நயம் அறிக

1. 'எங்கள் தமிழ்' பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

 2. 'எங்கள் தமிழ்' பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோ ல் வரும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

3. 'எங்கள் தமிழ்' பாடலில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

ஈ) குறுவினா                                                                              .         

1. தமிழ்மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?

2. தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.        

உ) சிறுவினா                                                                

 1. ‘எங்கள் தமிழ்’ பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக  

 

ஊ) சிந்தனை வினா                                                              

 1.கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்?

ஒன்றல்ல இரண்டல்ல

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                            

1. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் ________.

அ) கலம்பகம்      ஆ) பரிபாடல்       இ) பரணி          ஈ) அந்தாதி

2. வானில் _____ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.

அ) அகில்            ஆ) முகில்           இ) துகில்           ஈ) துயில்

3. ‘இரண்டல்ல ’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

அ) இரண்டு + டல்ல         ஆ) இரண் + அல்ல          இ) இரண்டு + இல்ல     

ஈ) இரண்டு + அல்ல

4. ‘தந்துதவும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

அ) தந்து + உதவும்           ஆ) தா + உதவும்             இ) தந் து + தவும்            

ஈ) தந்த + உதவும்

5. ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) ஒப்புமைஇல்லாத        ஆ) ஒப்பில்லாத   இ) ஒப்புமையில்லாத      

ஈ) ஒப்புஇல்லாத

ஆ) குறுவினா

1. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?

2. ‘ஒன்றல்ல இரண்டல்ல ’ – பாடலில் இடம்பெற்றுள்ள வள்ளல்கள் குறித்த செய்திகளை எழுதுக.

ஈ) சிறுவினா                                                                      

1. தமிழுக்கு வளம் சேர் க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?

உ) சிந்தனை வினா                                                               

1. தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன?

பேச்சு மொழியும் எழுத்து மொழியும்

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.     

1. மொழியின் முதல் நிலை பேசுதல், ________ ஆகியனவாகும்.

 அ) படித்தல்        ஆ) கேட்டல்        இ) எழுதுதல்      ஈ) வரைதல்

 2. ஒலியின் வரிவடிவம் _________ ஆகும்.

 அ) பேச்சு           ஆ) எழுத்து         இ) குரல்            ஈ) பாட்டு

3. தமிழின் கிளை மொழிகளில் ஒன்று _________

அ) உருது          ஆ) இந்தி           இ) தெலுங்கு      ஈ) ஆங்கிலம்

4. பேச்சு மொழியை ________ வழக்கு என்றும் கூறுவர்

அ) இலக்கிய       ஆ) உலக          இ) நூல்             ஈ) மொழி

ஆ) சரியா தவறா என எழுதுக.

1. மொழி காலத்திற்கு ஏற்ப மாறுகிறது.

2. எழுத்து மொழி காலம் கடந்தும் நிலைத்து நிற்கிறது.

3. பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச் செயல்பாட்டிற்கு உதவுவது எழுத்து மொழி.

4. எழுத்து மொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம்.

 5. பேச்சு மொழி சிறப்பாக அமையக் குரல் ஏற்றத்தாழ்வு அவசியம்.

இ) ஊடகங்களை வகைப்படுத்துக.

வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், நூல்கள், திரைப்படம், மின்னஞ்சல்

 

 

 

 

 

 

 

 

 ஈ) குறுவினா:-

1. மொழியின் இரு வடிவங்கள் யாவை?

2. பேச்சுமொழி என்றால் என்ன?

 3. வட்டார மொழி எனப்படுவது யாது ?

உ) சிறுவினா:-

1. பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுள் நான்கனை விளக்குக.

2. கிளை மொழிகள் எவ்வாறு உருவாகின்றன?

ஊ) சிந்தனை வினா:-

1. இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் வாழ்வதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?

குற்றியலுகரம், குற்றிய லிகரம்

அ) கீழ்க்காணும் சொற்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.

ஆறு, எஃகு, கரும்பு, விறகு, உழக்கு, எட்டு, ஏடு, பந்து, காசு, கொய்து

நெடில் தொடர்

ஆய்த் தொடர்

உயிர்த் தொடர்

வன் தொடர்

மென் தொடர்

இடைத்தொடர்

 

 

 

 

 

 

பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக.

 1. பசு, விடு, ஆறு, கரு

2. பாக்கு, பஞ்சு, பா ட்டு, பத்து

 3. ஆறு, மாசு, பா கு, அத

4. அரசு, எய்து, மூழ்கு, மார்பு

 5 பண்பு, மஞ்சு, கண்டு, எஃகு

இ) குறு வினா:-

1. ’குற்றியலுகரம்’ என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.

2. குற்றியலிகரம் என்றால் என்ன?

மொழியை ஆள்வோம்

அ) கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு ஏற்பத் தொ டரில் அழுத்தம் தர வேண்டிய சொற்களை எடுத்து எழுதுக.

 கோதை கவிதையைப் படித்தாள்

வினா

அழுத்தம் தர வேண்டிய சொல்

கோதை எதைப் படித்தாள்?

 

கவிதையைப் படித்தது யார்?

 

கோதை கவிதையை என்ன செய்தாள்?

 

ஆ). படத்திற்குப் பொருத்தமான திணையை எழுதுக.






 

இ) கீழ்க்காணும் சொற்களை உயர்திணை, அஃறிணை என வகைப்படுத்துக.

வயல், முகிலன், குதிரை, கயல்விழி, தலைவி, கடல், ஆசிரியர், புத்தகம், சுரதா, மரம்

ஈ) கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக. தாய்மொழிப் பற்று

 (முன்னுரை – மொழி பற்றிய விளக்கம் – தாய்மொழி – தாய்மொழிப் பற்று - தாய்மொழிப் பற்றுக் கொண்ட சான்றோர் – சாதுவன் வரலாறு – நமது கடமை – முடிவுரை)


மொழியோடு விளையாடு

அ) தொகைச் சொற்களை விரித்து எழுதுக.

 (எ.கா.) இருதிணை : உயர்திணை , அஃறிணை

 முக்கனி, முத்தமிழ் , நாற்றிசை , ஐவகைநிலம் , அறுசுவை

 

ஆ) கட்டங்களிலுள்ள எழுத்துகளை மாற்றி, மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் எழுதினால் ஒரே சொல் வருமாறு கட்டங்களில் எழுதுக

கு

ந்

தி

ரை

கு

தி

 

இ) இரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக.

 (எ.கா.) அரசுக்குத் தவறாமல் வரி செலுத்த வேண்டும். ஏட்டில் எழுதுவது வரி வடிவம்..

1. மழலை பேசும் மொழி அழகு.

2. அன்னை தந்தையின் கைப் பிடித்துக் குழந்தை நடைபழகும்.

3. நீ அறிந்ததைப் பிறருக்குச் சொல்

4. உழவர்கள் நாற்று நட வயலுக்குச் செல்வர் .

5. நீதி மன்றத்தில் தொடுப்பது வழக்கு

ஈ) கலைச்சொல் அறிவோம்.

Media , Magazine , Linguistics, Puppetry, Phonology Orthography Journalism  Dialogue

CLICK HERE TO GET PDF

ஆக்கம் :

தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்

இந்த வினாத்தாளின் விடைக்குறிப்புகளை கீழ்க்கண்ட வலைதளத்தில் காணலாம்


www.tamilvithai.com

www.kalvivithaigal.com

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post