7TH - TAMIL - TERM 1 - UNIT 2 - QUESTION BANK - PDF

  

ஏழாம் வகுப்பு

தமிழ்

முதல் பருவம்

வினாத் தொகுப்பு

இயல் - 2

இளந்தமிழ்

ஏழாம் வகுப்பு

தமிழ் – வினா – விடைத் தொகுப்பு

பருவம் : 1                                                                 இயல் : 2

அணிநிழல் காடு                                                                           காடு                                             

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                         

1. வாழை, கன்றை ________.

அ) ஈன்றது         ஆ) வழங்கியது   இ) கொடுத்தது    ஈ) தந்தது

2. ‘காடெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

அ) காடு + டெல்லாம் ஆ) காடு + எல்லாம் இ) கா + டெல்லா ம் ஈ) கான் + எல்லாம்

3. ‘கிழங்கு + எடுக்கும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________.

அ) கிழங்குஎடுக்கும் ஆ) கிழங்கெடுக்கும் இ) கிழங்குடுக்கும் ஈ) கிழங்கொடுக்கும

ஆ) நயம் அறிக

பாடலிலுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக..

இ ) குறுவினா                                                                           .         

1. காட்டுப்பூக்களுக்கு எதனை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?

2. காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை?

ஈ ) சிறுவினா                                                                               

 1. ‘‘காடு’ பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவனவற்றை எழுதுக.

) சிந்தனை வினா                                                                           

 1. காட்டை இயற்கை விடுதி என்று கவிஞர் கூறக் காரணம் என்ன?

அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                            

1. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது _____.

அ) பச்சை இலை             ஆ) கோலிக்குண்டு          இ) பச்சைக்காய் ஈ) செங்காய்

2. ‘சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்படுபவை _____.

அ) ஒட்டிய பழங்கள்         ஆ) சூடா ன பழங்கள்   இ) வேகவைத்த பழங்கள்

ஈ) சுடப்பட்ட பழங்கள்

 3. ‘பெயரறியா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) பெயர + றியா ஆ) பெயர் + ரறியா இ) பெயர் + அறியா ஈ) பெயர + அறியா

 4. ‘மனமில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) மன + மில்லை ஆ) மனமி + இல்லை இ) மனம் + மில்லை ஈ) மனம் + இல்லை

5. நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) நேற்றுஇரவு                   ஆ) நேற்றிரவு     இ) நேற்றுரவு    ஈ) நேற்இரவு

இ) குறுவினா

1. நாவல் மரம் எத்தனை தலை முறைகளாக அங்கு நின்றிருந்தது?

 2. சிறுவர்களுக்கு நாவற்பழம் கிடைக்க உதவியோர் யாவர்?

ஈ) சிறுவினா                                                                                    

1. நாவல் மரம் பற்றிய நினைவுகளாகக் கவிஞர் கூறுவன யாவை?

உ) சிந்தனை வினா                                                                          

1. பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தைக் கவிஞர் ஏன் பார்க்க விரும்பவில்லை?

விலங்குகள் உலகம்

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.     

1. ஆசிய யானைகளில் ஆண் - பெண் யானைகளை வேறுபடுத்துவது ____.

அ) காது             ஆ) தந்தம்           இ) கண்             ஈ) கால்நகம்

2. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் _______.

அ) வேடந்தாங்கல் ஆ) கோடியக்கரை இ) முண்டந்துறை ஈ) கூந்தன்குளம்

3. ‘காட்டாறு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

அ) காடு + ஆறு   ஆ) காட்டு + ஆறு             இ) காட் + ஆறு    ஈ) காட் + டாறு

4. ‘அனைத்துண்ணி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) அனைத்து + துண்ணி ஆ) அனை + உண்ணி இ) அனைத் + துண்ணி

ஈ) அனைத்து + உண்ணி

 5. ‘நேரம் + ஆகி’ என்பதனை ச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

அ) நேரமாகி       ஆ) நேராகி         இ) நேரம்ஆகி     ஈ) நேர்ஆகி

6. ‘வேட்டை + ஆடிய’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

அ) வேட்டைஆடிய           ஆ) வேட்டையாடிய         இ) வேட்டா டிய ஈ) வேடாடிய

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. ‘காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு’ - என்று அழைக்கப்படும் விலங்கு _____

2. யானைக் கூட்டத்திற்கு ஒரு _____ யானைதான் தலைமை தாங்கும்.

3. கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் ______.

 இ) குறுவினா:-

1. காடு – வரையறுக்க .

2. யானைகள் மனிதர்களை ஏன் தாக்குகின்றன?

3. கரடி ‘அனைத்துண்ணி’ என அழைக்கப்படுவது ஏன்?

4. மானின் வகைகள் சிலவற்றின் பெயர்களை எழுதுக.

ஈ) சிறுவினா:-

1. புலிகள் குறித்து நீங்கள் அறிந்துகொண்ட செய்திகளைத் தொகுத்து எழுதுக.

உ) சிந்தனை வினா:-

1. காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பட்டியலிடுக

நால்வகை குறுக்கங்கள்

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

1. 'வேட்கை' என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்க ம் பெறும் மாத்திரை அளவு _____

அ) அரை            ஆ) ஒன்று          இ) ஒன்றரை      ஈ) இரண்டு

 2. மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் ________.

அ) போன்ம்        ஆ) மருண்ம்       இ) பழம் விழுந்தது           ஈ) பணம் கிடைத்தது

 3. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது _______.

 அ) ஐகாரக் குறுக்கம்       ஆ) ஔகாரக் குறுக்கம்       இ) மகரக் குறுக்கம்

ஈ) ஆய்தக் குறுக்கம்

ஆ) குறு வினா:-

1. ஔகாரம் எப்பொழுது முழுமையாக ஒலிக்கும்?

2. சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு யாது?

3. மகரக்குறுக்கத்துக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

மொழியை ஆள்வோம்

அ) எதிர்ப்பாலுக்குரிய பெயர்களை எழுதுக.

1. மகளிர்               2. அரசன்             3. பெண்                4. மாணவன்

 5. சிறுவன்      6. தோழி

ஆ). படத்திற்குப் பொருத்தமான பாலை எழுதுக.


இ) பிழையைத் திருத்திச் சரியாக எழுதுக.

(எ.கா.) கண்ணகி சிலம்பு அணிந்தான் . – கண்ணகி சிலம்பு அணிந்தாள்.

1. கோவலன் சிலம்பு விற்கப் போனாள்.

2. அரசர்கள் நல்லாட்சி செய்தார்

3. பசு கன்றை ஈன்றன.

4. மேகங்கள் சூழ்ந்து கொண்டது.

5. குழலி நடனம் ஆடியது.

ஈ) கடிதம் எழுதுக.

நீங்கள் சென்று வந்த சுற்றுலா குறித்து உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.

மொழியோடு விளையாடு

அ) வட்டத்திலுள்ள எழுத்துகளைப் பயன்படுத்திச் சொற்களை அமைக்க..



                                       

 

 

 

 

 









ஆ) சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைக்க.

 

 

இ ) விடுகதைகளுக்கு விடை எழுதுக.

1. மரம் விட்டு மரம் தாவுவேன்; குரங்கு அல்ல. வளைந்த வாலுண்டு; புலி அல்ல. கொட்டைகளைக் கொறிப்பேன்; கிளி அல்ல. முதுகில் மூன்று கோடுகளை உடையவன். நான் யார்?2. என் பெயர் மூன்று எழுத்துகளைக் கொண்டது. முதலெழுத்தை நீக்கினால் மறைப்பேன். இரண்டாம் எழுத்தை நீக்கினால் குரைப்பேன். மூன்றாம் எழுத்தை நீக்கினால் குதிப்பேன். நான் யார்? _________

3. வெள்ளையாய் இருப்பேன்; பால் அல்ல. மீன் பிடிப்பேன்; தூண்டில் அல்ல தவமிருப்பேன்; முனிவரல்ல நான் யார்? ___________

ஈ) கலைச்சொல் அறிவோம்.

 Island

 Parable

Natural Resource

Jungle

Wild Animals

Forestry

Forest Conservator

Bio Diversity

CLICK HERE TO GET PDF

ஆக்கம் :

தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்

இந்த வினாத்தாளின் விடைக்குறிப்புகளை கீழ்க்கண்ட வலைதளத்தில் காணலாம்

www.tamilvithai.com

www.kalvivithaigal.com

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post