வினா – வங்கி / எட்டாம் - தமிழ்
காலாண்டுத் தேர்வு சிறப்பு பயிற்சிப் புத்தகம்
புத்தக வினாக்கள் / குறு வினாக்கள்
இயல் – 1
தமிழ்மொழி
மரபு
1.
தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?
2.
தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?
3.
உலகம் எவற்றால் ஆனது?
4.
செய்யுளில் மரபுகளை ஏன் மாற்றக் கூடாது?
5.
ஓவிய எழுத்து என்றால் என்ன?
6.
ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?
7.
ஓலைச் சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம்
என்ன?
8.
வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டினை எழுதுக.
இயல் – 2
1. ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன்
கூறுகிறார்?
2. ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை
உவமையாக வாணிதாசன் குறிப்பிடுகிறார்?
3. கப்பல் கவிந்ததற்குக் காரணமாகக்
கோணக்காத்துப் பாட்டு கூறுவது யாது?
4. புயல் காற்றினால் தொண்டைமான்
நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?
5. கொல்லிமலை பற்றிப் பாடல்
கூறும் செய்தி யாது?
6. விலை கொடுத்து வாங்க இயலாதவை
எனச் சியாட்டல் கூறுவன யாவை?
7. நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும்
உள்ள உறவு யாது?
8. எதனைத் தம்மால் ஏற்றுக்கொள்ள
முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்?
திருக்குறள்
1. சான்றோருக்கு அழகாவது எது?
2. பழியின்றி வாழும் வழியாகத்
திருக்குறள் கூறுவது யாது?
3. ‘ புலித்தோல் போர்த்திய
பசு ‘ என்னும் உவமையால் திருக்குறள் விளக்கும் கருத்து யாது?
4. திருக்குறளைச் சீர் பிரித்து
எழுதுக:-
அ) தக்கார் தகவிலரெ ன்பது அவரவர்
எச்சத்தால் காணப்படும்
ஆ) தொடங்கற்க எவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின் அல்லது.
5. சீர்களை முறைப்படுத்தி எழுதுக.
யாழ்கோடு அன்ன கொளல் கணைகொடிது
வினைபடு பாலால் செவ்விது ஆங்கு
இயல் – 3
1.
நோயின் மூன்று வகைகள் யாவை?
2.
நீலகேசியில் பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன யாவை?
3.
நம்மை நோய் அணுகாமல் காப்பவை எவை?
4.
அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமைகளாகக் கவிமணி குறிப்பிடுவன யாவை?
5.
மருத்துவம் எப்போது தொடங்கியது?
6.
நல் வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?
7.
தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?
8.
கீழ்க்காணும் சொற்களைப் பெயரெச்சம், வினையெச்சம் என வகைப்படுத்துக.
நல்ல,
படுத்து, பாய்ந்து, எறிந்த, கடந்து, வீழ்ந்த, மாட்டிய, பிடித்து, அழைத்த, பார்த்து
இயல் – 4
1. யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள்
தேவையில்லை?
2. யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில்
போன்றது?
3. பகைவர்களிடம் நாம் நடந்துகொள்ள
வேண்டிய முறை யாது?
4. இன்றைய கல்வியின் நிலை பற்றித்
திரு.வி.க. கூறுவன யாவை?
5. தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு
பிறக்கிறது?
6. திரு.வி.க சங்கப் புலவர்களாக
குறிப்பிடுபவர்களின் பெயர்களை எழுதுக.
___________________________________________________________________________
வடிவமைப்பு
:
திரு. வெ.ராமகிருஷ்ணன்,
அரசு
உயர்நிலைப் பள்ளி, கோரணம்பட்டி,
சேலம்.
தொடர்புக்கு
:- 8667426866, 8695617154