காலாண்டுத்தேர்வு மாதிரி வினாத்தாள்
(2022-2023)
எட்டாம்
வகுப்பு
பாடம்- தமிழ்
நேரம்:2.30 மணி மதிப்பெண்கள்: 100
அ) சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
16X1=16
1. பறவைகள் ________ பறந்து செல்கின்றன.
அ) நிலத்தில் ஆ) விசும்பில் இ) மரத்தில் ஈ) நீரில்
2. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்_________
அ) பாரதிதாசன் ஆ)
தந்தை பெரியார் இ) வ.உ.சிதம்பரனார்
ஈ) பெருஞ்சித்திரனார்
3. கல்விப்
பயிற்சிக்குரிய பருவம் ______.
அ) இளமை ஆ) முதுமை இ) நேர்மை
ஈ) வாய்மை
4. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும்
________ யும் ஓட்டிவிடும்.
அ) பாலனை ஆ)
காலனை இ) ஆற்றலை ஈ) நலத்தை
5. பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல் __________
அ) பால்ஊறும் ஆ)
பாலூறும் இ) பால்லூறும் ஈ) பாஊறும்
6. மாடு வயலில் புல்லை மேய்ந்தது – இத்தொடரிலுள்ள
வினைமுற்று ________
அ) மாடு ஆ)
வயல் இ) புல் ஈ) மேய்ந்தது
7. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்
________
அ) வலிமையற்றவர் ஆ)
கல்லாதவர் இ) ஒழுக்கமற்றவர் ஈ) அன்பில்லாதவர்
8.
நீலகேசி கூறும் நோயின் வகைகள் __________
அ)
இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஐந்து
9. ‘ நலமெல்லாம் ‘ என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது _______
அ) நலம் + எல்லாம் ஆ)
நலன் + எல்லாம் இ) நலம் + எலாம் ஈ) நலன் + எலாம்
10. சமையலறையில் செலவிடும் நேரம்
_________ செலவிடும் நேரமாகும்.
அ) சுவைக்காக ஆ)
சிக்கனத்திற்காக இ) நல்வாழ்வுக்காக ஈ) உணவுக்காக
11. குறிப்பு வினையெச்சம் ________ வெளிப்படையாகக் காட்டாது.
அ) காலத்தை ஆ)
வினையை இ) பண்பினை ஈ) பெயரை
12. என் நண்பர் பெரும் புலவராக இருந்த போதும் ________ இன்றி
வாழ்ந்தார்.
அ) சோம்பல் ஆ)
அகம்பாவம் இ) வருத்தம் ஈ) வெகுளி
13. இன்றைய கல்வி _______ நுழைவதற்குக் கருவியாகக்
கொள்ளப்பட்டு வருகிறது.
அ) வீட்டில் ஆ)
நாட்டில் இ) பள்ளியில் ஈ) தொழிலில்
14.உள்ளங்கை நெல்லிக்கனி போல-எனும் உவமைத்தொடர் குறிக்கும் பொருள்
அ)ஒற்றுமையின்மை ஆ)வெளிப்படைத்தன்மை இ)பயனற்ற செயல் ஈ)எதிர்பாரா நிகழ்வு
16.சேரர்களின்
தலைநகரம் _____.
அ) காஞ்சி ஆ) வஞ்சி இ) தொண்டி ஈ)
முசிறி
ஆ)பொருத்துக:
4X1=4
17 க்,ங் - நாவின்
இடை, அண்ணத்தின் இடை
18 ச், ஞ் - நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி
19. ட்,ண் - நாவின்
முதல், அண்ணத்தின் அடி
20 த்,ந் - நாவின் நுனி, அண்ணத்தின் நுனி
இ)அடிமாறாமல்
எழுதுக 3+3+2+2=10
21.வாழ்க
நிரந்தரம் எனும் பாடலை அடிமாறாமல் எழுதுக
22.”கற்றோருக்கு” எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.
23.”தக்கார்”
எனத்தொடங்கும் குறளை அடிமாறாமல் எழுதுக.
24.”யவர்” என
முடியும் குறளை அடிமாறாமல் எழுதுக
ஈ)எவையேனும்
ஒன்பது வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க : 9X2=18
25.ஓடை
எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக வாணிதாசன் குறிப்பிடுகிறார்?
26. ஒலி எழுத்து நிலை என்றால்
என்ன?
27.பழியின்றி வாழும் வழியாகத்
திருக்குறள் கூறுவது யாது?
28.தாய்நாடு
எனும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?
29.தமிழர்
மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுபவை யாவை?
30.புயல் காற்றினால் தொண்டைமான்
நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?
31.நம்மை நோய் அணுகாமல் காப்பவை
எவை?
32.வினைமுற்று
என்றால் என்ன?
33. பகைவர்களிடம் நாம் நடந்து
கொள்ள வேண்டிய முறை யாது?
34.பொருத்தமான
நிறுத்தற்குறியிடுக :
அ.மூவேந்தர் சேரர் சோழர்
பாண்டியர் ஆ.பாம்பு பாம்பு
35.கலைச்சொல்
தருக : அ.ORNAMENT ஆ.BUD
36.சரியான
மரபுச்சொல்லால் நிரப்புக:
அ. கூயில் --- ஆ. இலை -----
உ..எவையேனும்
நான்கனுக்கு விடையளி
4X4=16
37. தமிழ்மொழியை வாழ்த்தி
பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.
38.ழகர,லகர,ளகர மெய்களின் முயற்சிப்
பிறப்பு பற்றி எழுதுக
39. பள்ளி குழந்தைகளுக்கு
மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?
40. முற்றெச்சத்தை சான்றுடன்
விளக்குக.
41.தமிழ்
எழுத்துகளில் ஏற்பட்ட உருவமாற்றங்களை விளக்குக
42.தமிழ்வழிக் கல்வி பற்றி திரு.வி.க.
கூறுவனவற்றை எழுதுக.
43.உடனிகழ்ச்சி பொருள் என்றால்
என்ன?
ஊ.எவையேனும்
மூன்றனுக்கு மட்டும் விரிவான விடையளி
3X7=21
44.காப்பியக்கல்வி
குறித்து திரு.வி.க கூறும் செய்திகளைத் தொகுத்து
எழுதுக.
45.வெட்டுக்கிளியும்
சருகுமானும் கதையைச் சுருக்கி எழுதுக.
46. மூளையின் வலது, இடது பாகங்களின்
செயல்பாடுகள் பற்றித் தொகுத்து எழுதுக.
47.தமிழர்
மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறுவனவற்றைச் சுருக்கமாக
எழுதுக.
48.எழுத்துகளின்
தோற்றம் குறித்து எழுதுக.
எ) கட்டுரை
வடிவில் விடையளிக்க:
1X8=8
49.அ. நான் விரும்பும் கவிஞர் என்ற தலைப்பில் கட்டுரை
எழுதுக.
(அல்லது)
ஆ.விளையாட்டுப்போட்டியில்
வெற்றி பெற்ற உன் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக
ஏ) பின்வரும்
சிந்தனை வினாவிற்கு நன்கு சிந்தித்து விடை எழுதுக
1X7=7
36.அ. நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளாக நீங்கள் கருதுவன யாவை?
(அல்லது)
ஆ.நில வளத்தினைக் காப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்களாக நீங்கள் கருதுவன
யாவை?
வினாத்தாள் வடிவமைப்பு:-
Suryaprakash
ReplyDelete