7TH - TAMIL - 1ST TERM EXAM - SALEM - ANSWER KEY - PDF

    

ஏழாம் வகுப்பு

தமிழ்

முதல் பருவத் தேர்வு - 2022

சேலம் மாவட்டம் - வினாத்தாள் -விடைக்குறிப்பு

சேலம் – முதல் பருவத் தேர்வு / செப்டம்பர் - 2022-2023

ஏழாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  2..00 மணி                                                    மதிப்பெண் : 60

பகுதி – 1 / மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

அ. வழி

1

2.

இ. முண்டந்துறை

1

3.

ஆ. ஒளகாரக் குறுக்கம்

1

4.

ஈ. இரண்டு + அல்ல

1

5.

ஆ. தன்னெஞ்சு

1

6.

பெண்

1

7.

மேகம்

1

8.

ஈன்றது

1

9.

தெலுங்கு

1

10.

தீமை தராத சொற்களைப் பேசுதல்

1

11.

செல்வம்

1

12.

அழகு

1

13.

பெரும் பரப்பு

1

14.

கடைப்போலி

1

15.

பேச்சு, எழுத்து

2

16.

யானையின் வழித்தடங்களில் குறுக்கிடும் போது தான் மனிதர்களைத் தாக்குகின்றன.

2

17.

ஒருவர் தன் நெஞ்சறிய பொய் சொல்லக்கூடாது. அவ்வா று கூறினால் அவர் நெஞ்சமே அவனை வருத்தும்

2

18.

பொருள் பெற யாரையும் புகழ மாட்டார்கள். தம்மை போற்றாதவரையும் இகழமாட்டார்

2

19

கவிஞர் காட்டுப் பூக்களுக்கு கார்த்திகை விளக்குகளை உவமையாகக் கூறுகிறார்.

2

20

வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகளை உண்டாக்கியவர். உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர். சுத்தத் தியாகி – என்று முத்தராமலிங்கத் தேவரை பெரியார் பாராட்டியுள்ளார்.

2

21

புலி தங்கிச் சென்ற குகை

2

22

 அருள்நெறி அறிவைத் தரலாகும்

அதுவே தமிழன் குரலாகும்

பொருள்பெற யாரையும் புகழாது

போற்றா தாரையும் இகழாது

கொல்லா விரதம் குறியாகக்

கொள்கை பொய்யா நெறியாக

 எல்லா மனிதரும் இன்புறவே

என்றும் இசைந்திடும் அன்ப றமே

அன்பும் அறமும் ஊக்கிவிடும்

அச்சம் என்பதைப் போக்கிவிடும்

இன்பம் பொழிகிற வானொலியாம்

எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்*

( நான்கு வரிகளுக்கு மேல் எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் )

4

23

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்

2

24

, வெள என ஔகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது

2

25

இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி

2

26

Ø  தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவு ஒலிக்கும் இகரம்

2

27

o    மகர மெய் அரை மாத்திரை அளவிலிருந்து கால் மாத்திரை அளவு ஒலிக்கும்

o    மருண்ம், போனம், தரும் வளவன், பெரும் வள்ளல்

2

28

Ø  முதற் போலி

Ø  இடைப் போலி

Ø  கடைப்போலி

2

29.

Ø  தமிழ் மொழி அருள் நெறிகள் நிறைந்தது.

Ø  பொருள் பெற யாரையும் புகழாது, தம்மைப் போற்றாதவரையும் இகழாது தமிழ்

Ø  கொல்லாமை குறிக்கோளாகவும், பொய்யாமை கொள்கையாகவும் விளங்குவது தமிழ் மொழி.

3

30.

பேச்சுமொழி

எழுத்து மொழி

1. சொற்கள் குறுகி ஒலிக்கும்

1. சொற்கள் முழுமையாக ஒலிக்கும்

2. உணர்ச்சிக் கூறுகள் அதிகம்

2. உணர்ச்சிக் கூறுகள் குறைவு

3. குரல், ஏற்றத்தாழ்வு உண்டு

3. குரல் ஏற்றத் தாழ்வுக்கு இடமில்லை

4. நினைத்தவாறே பேச முடியும்

4. நினைத்தவாறு எழுதுவது கடினம்

3

31..

Ø  குரங்குகள் மரக்கிளைகளில் உள்ள கனிகளைப் பறித்து உண்ணும்.

Ø  பன்றிகள் காட்டில் உள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும்.

Ø  இந்தச் செயலைக் கண்டு நச்சுத் தன்மை உடைய பாம்புகள் அச்சத்தால் கலக்கம் அடையும்.

Ø  நரிகள் ஊளையிடும்.

Ø  மிகுந்த சுவையான தழையை யானைகள் தின்றபடி புதிய நடைபோடும்.

Ø  இயற்கையான காட்டில் வாழும் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்கினங்கள் மனம் போன போக்கில் அலைந்து திரியும்

3

32

·         அவன் எங்குள்ளான் என்பது தெரியாது.

·         ஆயினும் புலி தங்கிச் சென்ற குகைப் போன்று அவனை பெற்றெடுத்த வயிறு என்னிடம் உள்ளது.

·         அவன் போர்க்களத்தில் இருக்கக் கூடும்

3

33   

பொம்மலாட்டம் ஒரு கலை, கதை ஒன்றைத் தேர்ந்தெடுத்து பின்னணியில் கதை மாந்தர்களை பேச விட்டு கதை சொல்லத் தொடங்குவர். கதை விறுவிறுப்பாக சென்று ஒரு கட்டத்தில் சட்டென்று முடியும். இக்காட்சியைப் பார்த்து சிறுவர் முதல் பெரியவர் வரை பார்த்து மகிழ்வர். இதோ மெல்லிய ஒடிசலான தேகம் கொண்ட நடுத்தர வயதுக்காரர் பொம்மலாட்டம் மூலம் கதையொன்றை சொல்லி அசத்துகிறார். அந்தக் கதையை நாமும் கேட்போமே!

பொம்மலாட்டம் பார்க்க வந்தவர்களை இரு கரம் கூப்பி வணங்கி கதை நாயகனை அறிமுகம் செய்கிறார் கதை சொல்லி.

பள்ளிக்கூடம் போகாமலே பாடங்களை படிக்காமலே ஊரைச் சுற்றுகிறான் பையன். அவங்க அம்மா எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கல.

அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது. இப்ப நீ சரியா படிக்கலன்னா வாழ்க்கையிலே முன்னேற முடியாது. ஒழுங்காப் பள்ளிக்கூடம் போயி படிக்கிற வேலையைப் பாரு” என்கிறார் அப்பா. “படிக்கிறதெல்லாம் எனக்குப் பிடிக்காது” முகத்தில் அறைந்தாற் போல் பேசுகிறான் நம் கதைநாயகன். அப்பா சத்தம் போடுகிறார், சத்தம் கேட்டு அம்மா வெளியே வராங்க, “ராசா, உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ளே விலைபோகும். நீ ன்னா ஊர்ல யாரும் மதிக்கமாட்டங்க. அதனால நீ பள்ளிக்கூடம் போயி நல்லாப் படிச்சுக்க – இது அம்மாவின் உபதேசம்.

வேறு வழியில்லாம பையன் பள்ளிக்கூடம் போகிறான். அவனுக்கு படிப்பதில் நாட்டமில்லை, விளையாட யாராவது கிடைப்பாங்களான்னு பார்க்குறான். அங்கே எறும்பு ஒன்ணு போய்கிட்டு இருக்கு , “எறும்பே! எறும்பே! என் கூட விளையாட வர்றியா?” – என்றான் பையன். ”குடல் கூழுக்கு அழுவுதாம் கொண்டை பூவுக்கு அழுவுதாம் எனக்கு நெறைய வேலை கிடக்கு. நான் கிளம்புறேன். நீ அதோ பறக்குதே அந்தத் தேனீகூடப் போய் விளையாடு.

தேனீ! தேனீ! நீ என் கூட விளையாட வர்றியா? என்றான் பையன்” “உனக்குத்தான் வேலை இல்லை, எனக்குமா வேலை இல்லை. போபோ நான் தேன் எடுக்கனும்” பறந்து போனது தேனீ. பையன் கொஞ்சம் தூரம் நடக்கிறான். பொதிமாடு ஒன்றைப் பார்க்கிறான்.

மாடே! மாடே! சும்மாதானே இருக்கே! என் கூட விளையாட வர்றியா?” என்றான் பையன்.
எனக்கு வேலை இருக்கு அந்த ஆமையை போய்பாரு என்றது பொதிமாடு”. “ஆமையே! ஆமையே! என் கூட விளையாட வர்றியா? எனக் கேட்டான் பையன்.

முயலோட போட்டி வச்சிருக்கேன். எனக்கு உன்கூட விளையாட நேரமில்லே நீ அந்த முயலைப் போய் பாரு” என்றது ஆமை.
முயலை விளையாட அழைத்தான். முயலும் விளையாட மறுத்தது.


கடைசியில் குட்டிச்சுவரில் எகிறி குதித்தான் பையன். குட்டிச் சுவரில் இருந்து எறும்பு, பூச்சி எல்லாம் கோபத்தோடு அவன் கையில் கால்ல ஏறி நறுக்கு நறுக்கென்று கடித்தன. அள்ளுறவன் பக்கத்துல இருந்தாலும் கிள்ளுறவன் பக்கத்துல இருக்கக் கூடாதுன்னு அந்தப் பையன் வலி பொறுக்க முடியாமல் கத்திக் கொண்டே ஓடுறான்.

அம்மாவைப் பார்த்து “இந்த உலகத்திலே எல்லாரும் அவங்க அவங்க வேலையைப் பாக்குறாங்க ஈ, எறும்பு கூடச் சும்மா இல்லாம வேலை செய்யுதுக. எனக்கு இப்பத்தான் புத்தி வந்தது என்றான் பையன்.
அம்மா ஆனந்தக் கண்ணீர் சிந்தினாள் மகனின் மன மாற்றத்திற்காக.

5

33

முன்னுரை :
சிதம்பரனாரின் பிரசங்கத்தைக் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும், புரட்சி ஓங்கும் அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்’ என்ற கூற்றின் படி பேச்சாற்றல் மிக்க வ.உ. சிதம்பரனாரின் வாழ்வியல் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பிறப்பு மற்றும் பெற்றோர் :
சிதம்பரனார் 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் வண்டானம் ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் பிறந்தார். பெற்றோர் உலகநாத பிள்ளை , பரமாயி அம்மாள் ஆவர்.

வழக்கறிஞர் பணி :
கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் தன் தந்தையைப் போன்று வழக்கறிஞரானார். வ.உ.சி. ஏழைகளுக்காக வாதாடினார். சில சமயங்களில் கட்டணம் பெறாமலும் வாதாடினார். சிறந்த வழக்கறிஞர் என்று போற்றப்பட்டார்.

வெள்ளோட்டம் :
இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். வெள்ளையர்களின் கப்பலில் கூலி வேலை செய்யும் நம் நாட்டு மக்களின் அடிமைத்தனத்தை ஒழிக்க முனைந்தார். அம்முனைப்பால் ‘சுதேசக் கப்பல் கம்பெனி’ உருவாயிற்று. தலைவராகப் பாண்டித்துரை தேவர் பொறுப்பேற்றார். அவர்கள் வாங்கிய சுதேசக் கப்பல் வெள்ளோட்டத்திற்காகக் கொழும்புத் துறைமுகத்திற்குப் புறப்பட்டபோது அளவிலா மகிழ்ச்சியடைந்தார்.

வெள்ளையர்களின் வீழ்ச்சி :

சுதேசக் கப்பலின் வருகையால் வெள்ளையர்களின் கப்பல் வாணிகம் தளர்ந்தது. வெள்ளையர்கள் பல சூழ்ச்சிகளைச் செய்தனர். வ.உ.சிதம்பரனாருக்குக் கையடக்கம் தருவதாகவும் கூறினர். பலரைப் பயமுறுத்தினர். இறுதியில் அடக்குமுறையைக் கையாண்டனர்.

சுதந்தர நாதம் எழுந்தது :

பரங்கியரை அசைக்க இயலாது என எண்ணி அடிமைப்பட்டனர் மக்கள். எதிர்த்துப் பேசாமல் சலாமிட்டும், தாளம் போட்டும், அரசாங்கப் பதுமைகளாய் ஆடியும், அரசு வாழ்க என்று பாடியும் தன்னிலையறியாமல் இருந்தனர். இச்சூழலில் சுதந்தர நாதம் எழுந்தது.

வந்தே மாதரம் :

சுதந்தரம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கிய வடநாட்டு வீரரான பாலகங்காதர திலகரும். தென்னாட்டில் நாவீறுடைய பாரதியாரும் தென்னாட்டுத் திலகர் எனப் போற்றப்பட்ட வ.உ.சிதம்பரனாரும் வந்தே மாதரம்’ என்று முழங்கி மக்களிடம் ஆர்வத்தைத் தட்டி எழுப்பினர். பொதுக் கூட்டங்களிலும் தொழிலாளர் கூட்டங்களிலும் வ.உ.சி. ‘வந்தே மாதரத்தை அழுத்தமாகச் சொல்லுவார். அதைக் கேட்டு மக்கள் ஊக்கமுற்றனர்.

சிறைத்தண்டனை :

எரிவுற்ற அரசாங்கம் வ.உ.சி. யை எதிரியாகக் கருதியது. அதனால் வ.உ.சி.க்கு ‘இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை’ விதித்தது. ஆறாண்டுகள் கோவைச் சிறையிலும் கண்ணனூர்ச் சிறையிலும் கொடும்பணி ஆற்றினார். சிறைச்சாலையை தவச்சாலையாக எண்ணினார். அவர் விடுதலைக்காகப் புரிந்த அருந்தவச்செயல்கள் எண்ணிலடங்காதவை.

சிறைச்சாலையில் வ.உ.சி. :

சிறைச்சாலையில் அவரைப் பலரும் கண்காணித்தனர். கடும்பணி இட்டனர் பலர். ஆனால் அவர் எவரையும் வெறுத்ததில்லை . முறைதவறி நடந்தவர்களை எதிர்த்தார். வரைதவறிப் பேசியவர்களை வாயால் அடக்கினார். ஒரு முறை உடல் நலிந்து, உள்ளம் தளர்ந்து சிறைக்கூடத்தில் உட்கார்ந்திருந்த போது ஒரு ஜெயிலர், வ.உ.சி.க்குப் புத்திமதிகள் கூறினார். வெகுண்டெழுந்த வ.உ.சி. அடே மடையா! நீயா எனக்குப் புத்திமதி சொல்பவன்? மூடு வாயை ! உனக்கும் உன் அப்பனுக்கும் புத்தி சொல்வேன் நான். உன்னுடைய கவர்னருக்கும் மன்னருக்கும் புத்தி சொல்வேன் நான்’ என்று வேகமுறப் பேசினார். மானமிழந்து வாயிலிலிருந்து மறைந்தான் ஜெயிலர்.

சிறையில் தமிழ்ப்பணி :

சிறைச்சாலையில் செக்கிழுத்த துயரத்தையும், கடும்பணிபுரிந்தபோது வந்த கண்ணீரையும் தமிழ் நூல்களைப் படித்து மாற்றிக்கொண்டார். தொல்காப்பியம்,

இன்னிலை ஆகிய நூல்களைப் படித்தார். ஆலன் என்பவர் இயற்றிய ஆங்கில மொழி
நூலை மனம் போல் வாழ்வு’ என்று தமிழில் மொழிபெயர்த்தார். மெய்யறிவு, மெய்யறம் என்ற நூல்களை இயற்றினார்.

முடிவுரை :

வ. உ. சிதம்பரனார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் துறைமுகத்தை வந்து பார்த்தார். சுதேசக் கப்பலைக் காணாமல் துயருற்றார். பட்ட பாடெல்லாம் பயனற்றுப் போயிற்றே என்று பரிதவித்தார்.

·         பாயக்காண்பது சுதந்திரவெள்ளம்
பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம் என்று நாம் அனைவரும் பாடும் நாள் வரவேண்டும் என எண்ணினார். ஆனால் அந்நாள் வந்தபோது அவர் இவ்வுலகில் இல்லை . விடுதலைக்காகப் போராடி நாட்டு மக்களின் துயர் துடைத்த வ.உ.சி. அவர்கள் 1936 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாள் இயற்கை எய்தினார்

5

34.

          காமராசர்

முன்னுரை: 

      கர்மவீரர், கறுப்பு காந்தி என்று அழைக்கப்படும் காமராசர் .வளமான தமிழகத்துக்கு அடித்தளம் அமைத்தவர் ஆவார். அவரால் ஏழை மாணவர்கள் கல்விக்கண் திறந்தனர். பெருந்தலைவர் என்றழைக்கப்பெற்ற காமராசரை அறிவது மாணவர் கடமைகளுள் ஒன்றாகும். 

இளமைக்காலம்: 

      காமராசர் விருதுநகரில் 15.07.1903 ஆம் ஆண்டு குமாரசாமிக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.அவரது இயற்பெயர் காமாட்சி என்பதாகும். தனது பள்ளிப் படிப்பைசத்ரிய வித்யாசாலா பள்ளியில் தொடங்கினார். வறுமை காரணமாக ஆறாம் வகுப்பு வரையே கல்வியைக் கற்க முடிந்தது. 

அரசியல் :

      தேசத் தலைவர்களின் பேச்சால் கவரப்பட்டு அரசியலிலும், சுதந்திரப் போராட்டங்களிலும் கலந்துகொண்டார்.  பின்னர் காங்கிரசில் இணைந்தார் 1954 ஆம் ஆண்டு தமிழக முதல்வரானார் 

கல்விப்பணி: 

     பள்ளிகளில் ஏற்றத் தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத்திட்டத்தை அறிமுகம் செய்தார். மதிய உணவுத் திட்டத்தினைத் தொடங்கினார். பல கிராமங்களில் பள்ளிகளை துவங்கினார்.

நிறைவேற்றிய பிற திட்டங்கள்:

·         நீர்ப்பாசனத்திட்டங்களை நிறைவேற்றினார்.

·         கிண்டி அம்பத்தூர், இராணிப்பேட்டை போன்ற இடங்களில் தொழிற்சாலைகளை அமைத்தார்.நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலை, சர்க்கரை ஆலை, சிமெண்ட் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலைகளை நிறுவினார்.

முடிவுரை:

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 

தெய்வத்துள் வைக்கப் படும்"

               என்ற குறளுக்கேற்ப தனது பன்னிரண்டாம் வயது முதல் 02.10.1975 ஆம் ஆண்டு மறையும் வரை உண்மையாய் உழைத்தார். தனக்கென எதையும் சேர்க்காமல் மறைந்த காமராசரைப் போற்றுவோம்; நற்பணி ஆற்றுவோம்.

.

7

34.

சுற்றுலா குறித்து நண்பனுக்குக் கடிதம்

12,முகில் நகர்,

திருநெல்வேலி-1,

20-06-2022.

அன்புள்ள நண்பா,

       நலம் நலமறிய ஆவல்.சென்ற வாரம் நான் சென்று வந்த ஏற்காடு மலை சுற்றுலாவில் நான் பெற்ற மகிழ்ச்சியான அனுபவங்களை உன்னுடன் பகிர்ந்துகொள்ள இக்கடிதத்தை எழுதுகிறேன்.

            ஏற்காடு மலைகளின் அரசி உங்களை அன்போடு வரவேற்கிறது என்னும் அறிவிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. ஏற்காட்டில் லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வாரயன் மலை, பூங்கா, படகு இல்லம், சுற்றுச்சூழல் பூங்கா என அனைத்து இடங்களும் மகிழ்ச்சியாகவும், குளிர்ச்சியாகவும் இருந்தது, நீயும் நேரம் கிடைத்தால் சென்று வரவும்

                                                                                                   இப்படிக்கு,

உனது அன்பு நண்பன்

                                                                                              த.இளமாறன்.

உறைமேல் முகவரி:

      சு.கவியரசு,

     4,கம்பர் தெரு,

      ஈரோடு

7

 CLICK HERE TO DOWNLOAD BUTTON TO GET THIS ANSWER KEY - PDF

நீங்கள் 20 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

விடைக்குறிப்பு தயாரிப்பு

இளந்தமிழ் – வழிகாட்டி

தமிழ் விதை மற்றும் கல்வி விதைகள் வலைதளம்

தமிழ்ப்பொழில் வலைதளம்

 

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post