வினா – வங்கி / ஆறாம் வகுப்பு - தமிழ்
முதல் பருவத் தேர்வு - சிறப்பு பயிற்சிப் புத்தகம்
புத்தக வினாக்கள்
இயல் - 2
அ)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
கழுத்தில் சூடுவது ------
அ)
தார் ஆ) கணையாழி இ) தண்டை ஈ) மேகலை
2.
கதிரவனின் மற்றொரு பெயர் ------
அ)
புதன் ஆ) ஞாயிறு இ) சந்திரன் ஈ) செவ்வாய்
3. 'வெண்குடை’ என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது ------
அ)
வெண் + குடை ஆ)வெண்மை + குடை
இ)
வெம் + குடை ஈ) வெம்மை + குடை
4. ’பொற்கோட்டு’ என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது ------
அ)
பொன் + கோட்டு ஆ) பொற் + கோட்டு இ) பொண் + கோட்டு ஈ) பொற்கோ + இட்டு
5. கொங்கு + அலர் என்பதனைச்
சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------
அ)
கொங்குஅலர் ஆ) கொங்அலர் இ) கொங்கலர் ஈ) கொங்குலர்
6.
அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------
அ)அவன்அளிபோல்
ஆ) அவனளிபோல் இ) அவன்வளிபோல் ஈ) அவனாளி
ஆ)
நயம் அறிக.
1.
பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக
2.
பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக
இ)
குறுவினா
1.
சிலப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?
2. இயற்கை போற்றத்தக்கது ஏன்?
ஈ)
சிந்தனைவினா
இயற்கையைப்
போற்றும் வழக்கம் ஏற்படக் காரணமாக எவற்றைக் கருதுகிறீர்கள்?
அ)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
’கிணறு’ என்பதைக் குறிக்கும் சொல்------
அ)
ஏரி ஆ) கேணி இ) குளம் ஈ) ஆறு
2.
’சித்தம்’ என்பதன் பொருள் ------
அ)
உள்ளம் ஆ) மணம் இ) குணம் ஈ) வனம்
3.
மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் ------
அ)
அடுக்குகள் ஆ) கூரை இ) சாளரம் ஈ) வாயில்
4.
நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------
அ) நன்+மாடங்கள் ஆ) நற் +மாடங்கள்
இ) நன்மை + மாடங்கள் ஈ) நல் + மாடங்கள்
5.
நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------
அ)
நிலம் + இடையே ஆ ) நிலத்தின் + இடையே இ) நிலத்து + இடையே
ஈ)
நிலத் + திடையே
6.
முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்______
அ)
முத்துசுடர் ஆ) முச்சுடர் இ) முத்துடர் ஈ) முத்துச்சுடர்
7.
நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்_______
அ)
நிலாஒளி ஆ) நிலஒளி இ) நிலாவொளி ஈ) நிலவுஒளி
ஆ)
பொருத்துக.
1.
முத்துச்சுடர்போல - மாடங்கள்
2.
தூய நிறத்தில் - தென்றல்
3.
சித்தம் மகிழ்ந்திட – நிலாஒளி
இ)
நயம் அறிக.
1. காணி நிலம் பாடலில்
இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
2.
காணி நிலம் பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
குறுவினா
1.
காணி நிலம் பாடலில் பாரதியார் வேண்டுவன யாவை?
2.
பாரதியார் இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பம் குறித்து எழுதுக.
சிந்தனைவினா
1..பாரதியார்
வீட்டின் அருகில் தென்னை மரங்கள் வேண்டும் என்கிறார். நீங்கள் எந்தெந்த மரங்களை
வளர்ப்பீர்கள் என எழுதுக.
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக.
1. ’தட்பவெப்பம்’
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
அ) தட்பம் + வெப்பம் ஆ)
தட்ப + வெப்பம் இ) தட் + வெப்பம் ஈ) தட்பு + வெப்பம்
2. ’வேதியுரங்கள்’
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
அ) வேதி + யுரங்கள் ஆ)
வேதி + உரங்கள் இ) வேத் + உரங்கள் ஈ) வேதியு + ரங்கள்
3. தரை + இறங்கும் என்பதனைச்
சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்_______.
அ) தரையிறங்கும் ஆ) தரைஇறங்கும் இ) தரையுறங்கும் ஈ) தரைய்றங்கும்
4. வழி + தடம்
என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்_______.
அ) வழிதடம் ஆ)
வழித்தடம் இ)
வழிதிடம் ஈ) வழித்திடம்
5. சிட்டுக்குருவி
வாழ முடியாத பகுதி_______.
அ) துருவப்பகுதி ஆ)
இமயமலை இ) இந்தியா ஈ) தமிழ்நாடு
ஆ) கோடிட்ட இடங்களை
நிரப்புக.
1. மிக நீண்டதொலைவு
பறக்கும் பறவை ______
2. பறவைகள் வலசை
போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர் _______
3. பறவைகள்
இடம்பெயர்வதற்கு _______
என்று பெயர்.
4. இந்தியாவின் பறவை மனிதர் ________
5. பறவைகள் வலசை போகக் காரணங்களுள்
ஒன்று _______
இ) சொற்றொடர்
அமைத்து எழுதுக.
1. வெளிநாடு 2. வாழ்நாள் 3. செயற்கை.
ஈ) பொருத்தமான
சொல்லைக் கொண்டு நிரப்புக.
1. மரங்களை
வளர்த்து ____
யைக் காப்போம் ._____
உரங்களைத் தவிர்த்து
நிலவளம் காப்போம். (செயற்கை / இயற்கை)
2. தமிழகத்தில்
வலசைப் பறவைககளின் வருகை ________
தற்போது சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை ________
(குறைந்துள்ளது / மிகுந்துள்ளது)
குறுவினா
1. பறவைகள்
எக்காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன?
2. வலசையின்போது
பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?
சிறுவினா
1. சிட்டுக்
குருவியின் வாழ்க்கை பற்றிச் சிறு குறிப்பு எழுதுக.
2. வலசைப்
பறவைகளின் பயணம் பற்றி நீங்கள் அறிந்தவை யாவை?
சிந்தனைவினா
1. பறவை இனங்கள்
அழியாமல் காப்பாற்றப்பட நாம் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக
கிழவனும்
கடலும்
‘
கிழவனும் கடலும் ‘ என்னும் படக்கதையை உங்கள் சொந்த நடையில் கதையாக எழுதுக.
முதலெழுத்தும்
சார்பெழுத்தும்
1.
முதல் எழுத்துகள் என்பவை யாவை? அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?
2.
சார்பெழுத்துகள் எத்தனை? அவையாவை?
3.
சொற்களில் ஆய்த எழுத்து எவ்வாறு இடம் பெறும்?
மொழியை
ஆள்வோம்
கீழ்க்காணும்
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
இயல்பாகவே
தோன்றி மறையும் பொருள்கள்,
அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம். பனிபடர்ந்த நீலமலைகள்,
பாடித்திரியும் பறவைகள், தன்னிச்சையாகச்
சுற்றித்திரியும் விலங்குகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரித்து வீழும் அருவிகள், நீந்தும் மீன்கள்,
அலைவீசும் அழகிய கடல், கண்சிமிட்டும்
விண்மீன்கள், தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா இவையெல்லாம்
இயற்கை நமக்குத் தந்த கொடைகள். இயற்கையின் அழகைக் கண்டு இன்புற்றால் மட்டும்
போதாது. அந்த அழகை நாம் பாதுகாக்க வேண்டும். நாம் நமது தேவைக்காக மலைகள், காடுகள், விலங்குகள், பறவைகள்
ஆகியவற்றை அழித்து வருகிறோம். மேலும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். அதனால் இயற்கைச் சமநிலை மாறி
புவி வெப்பமயமாகிறது. புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப்
பாதுகாத்தால் மட்டுமே நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
1. எதனை இயற்கை என்கிறோம்?
2.
இப்பத்தியில் உள்ள இயற்கையை வருணிக்கும் சொற்கள் யாவை?
3.
இயற்கையை ஏன் பாதுகாக்க வேண்டும்?
4.
பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக.
கீழ்க்காணும்
தலைப்பில் கட்டுரை எழுதுக
மொழியோடு
விளையாடு
திரட்டுக. ’கடல்’ என்னும் பொருள் தரும் வேறு
சொற்களைத் திரட்டுக
1.
தொடர்களைப் பிரித்து இரண்டு தொடர்களாக எழுதுக
(எ. கா.) பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின. விடை: பல நாள்களாக
மழை பெய்யவில்லை. பயிர்கள் வாடின.
1.
கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறான்.
2.
இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள்.
பொருத்தமான
சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் _____ என்று பெயர். (பறவை
/ பரவை)
2.
இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக ____ ஆற்றினார். (உரை /
உறை)
3.
முத்து தம் ____காரணமாக ஊருக்குச்
சென்றார். (பனி / பணி)
4.
கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு தோழியை _______ (அலைத்தாள் /
அழைத்தாள்)
பொருத்தமான
சொற்களால் கட்டங்களை நிரப்புக.
1. ‘புள்’ என்பதன் வேறு பெயர் –
2. பறவைகள் இடம்பெயர்தல் –
3.
சரணாலயம் என்பதன் வேறு பெயர் -
வரிசை
மாறியுள்ள சொற்களைச் சரியான வரிசையில் அமைத்து எழுதுக.
1.
இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்.
2. மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ
முடியாது.
. 3. மிகப்பெரிய
சாண்டியாகோ மீனைப் பிடித்தார்.
4.
மனிதர் இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை.
கட்டங்களில்
சில சொற்கள் மறைந்துள்ளன. குறிப்புகளைக்
கொன்டு அவற்றைக் கண்டுபிடித்து எழுதுக.
1.
இரட்டைக் காப்பியங்களில் ஒன்று_______
2.
முதலெழுத்துகளின் எண்ணிக்கை _______
3.
திங்கள் என்பதன் பொருள் _______
4.
சத்திமுத்தப் புலவரால் பாடப்பட்ட பறவை ________
5. பாரதியார் ________வேண்டும் என்று
பாடுகிறார்.
6. ஆய்த எழுத்தின் வேறு பெயர்________
ஆய்ந்தறிக.
பெருகிவரும்
மக்களின் தேவைக்காக இயற்கையை அழிப்பது சரியா? இயற்கையைச் சுரண்டாமல்,
மக்களின் தேவைகளை நிறைவேற்ற மாற்று வழிகள் உண்டா ?
கவிதை
படைக்க. கீழே காணப்படும் மழைபற்றிய கவிதையைச் சொந்தத் தொடர்களால் நிரப்புக.
வானில் இருந்து வந்திடும்
மனதில்
மகிழ்ச்சி தந்திடும்
-கலைச்
சொல் அறிவோம்
Continent
Climate
Weather
Migration
Sanctuary
Gravitational
Field
CLICK HERE TO GET PDF
ஆக்கம்
:
தமிழ்விதை
மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்
இந்த
வினாத்தாளின் விடைக்குறிப்புகளை கீழ்க்கண்ட வலைதளத்தில் காணலாம்