6TH - TAMIL - TERM 1 - UNIT 1 - QUESTION BANK - PDF

  

வினா – வங்கி / ஆறாம் வகுப்பு - தமிழ்

முதல் பருவத் தேர்வு - சிறப்பு பயிற்சிப் புத்தகம்

புத்தக வினாக்கள்  

இயல் - 1

இளந்தமிழ்

ஆறாம் வகுப்பு

தமிழ் – வினாத் தொகுப்பு

பருவம் : 1                                                                 இயல் : 1

தமிழ்த்தேன்                                                                                இன்பத்தமிழ்

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                         

1. ஏற்றத் தாழ்வற்ற ------ அமைய வேண்டும்

அ) சமூகம்          ஆ) நாடு   இ) வீடு   ஈ) தெரு

2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ------ ஆக இருக்கும்

அ) மகிழ்ச்சி         ஆ) கோபம்         இ) வருத்தம்       ஈ) அசதி

 3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------

அ) நிலயென்று     ஆ) நிலவென்று            இ) நிலவன்று     ஈ) நிலவுஎன்று

4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------

அ) தமிழங்கள்     ஆ) தமிழெங்கள் இ) தமிழுங்கள்  ஈ) தமிழ்எங்கள்

 5. ’அமுதென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -------

அ) அமுது + தென்று  ஆ) அமுது + என்றுஇ) அமுது + ஒன்று ஈ) அமு + தென்று

 6. 'செம்பயிர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ---------

அ) செம்மை + பயிர்   ஆ) செம் + பயிர்  இ) செமை + பயிர்       ஈ) செம்பு + பயிர்

ஆ) இன்பத்தமிழ் - பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.          

 1. விளைவுக்கு – பால்

 2. அறிவுக்கு - வேல்

3. இளமைக்கு - நீர்

4. புலவர்க்கு - தோள்

இ) ஒத்த ஓசையில் முடியும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக.      

(எ.கா.) பேர் - நேர்

ஈ) குறுவினா                                                                             .         

1. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?

2. நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?

உ) சிறுவினா                                                                              

 1. இன்பத் தமிழ் - பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டனை எழுதுக.

2. சமூக வளர்ச்சிக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?

 ஊ) சிந்தனை வினா                                                                         

 வேல் என்பது ஓர் ஆயுதம். தமிழ் ஏன் வேலுடன் ஒப்பிடப்படுகிறது ?

தமிழ்க்கும்மி

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                            

 1. தாய் மொழியில் படித்தால் ------ அடையலாம்

 அ) பன்மை  ஆ) மேன்மை  இ) பொறுமை  ஈ) சிறுமை

 2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ------ சுருங்கிவிட்டது

 அ) மேதினி  ஆ) நிலா  இ) வானம்  ஈ) காற்று

 3. ’செந்தமிழ்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______

அ) செந் + தமிழ்  ஆ) செம் + தமிழ்இ) சென்மை + தமிழ்  ஈ) செம்மை + தமிழ்

 4. ’பொய்யகற்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______

அ) பொய் + அகற்றும் ஆ) பொய் + கற்றும் இ) பொய்ய + கற்றும்

ஈ) பொய் + யகற்றும்

5. பாட்டு+ இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------

 அ) பாட்டிருக்கும்  ஆ) பாட்டுருக்கும்  இ) பாடிருக்கும்  ஈ) பாடியிருக்கும்

 6. எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------

அ) எட்டுத்திசை  ஆ) எட்டிதிசை  இ) எட்டுதிசை  ஈ) எட்டிஇசை

ஆ) நயம் உணர்ந்து எழுதுக.                                                              

1. பாடல் அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களை எடுத்து எழுதுக.

2. பாடல் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களை எடுத்து எழுதுக.

3. பாடல் அடிகளில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக.

இ) குறுவினா                                                                        .          

1. தமிழ் மொழியின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?

2. செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?

ஈ) சிறுவினா                                                                                    

 1. கால வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞர் கூறுவதன் காரணம் என்ன?

2. தமிழ்க் கும்மி பாடலின்வழி நீங்கள் அறிந்து கொண்டவற்றை உம் சொந்த நடையில் எழுதுக.

உ) சிந்தனை வினா                                                                          

1. தமிழ் மொழி அறியாமையை எவ்வாறு அகற்றும்?

வளர்தமிழ்

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.     

1. ‘ தொன்மை ‘ – என்னும் சொல்லின் பொருள்________

அ) புதுமை         ஆ) பழமை         இ) பெருமை       ஈ) சீர்மை

2. ‘ இடப்புறம் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

அ) இடன் + புறம்   ஆ) இடை + புறம்          இ) இடம் + புறம்  ஈ) இடப் + புறம்

3. ‘ சீரிளமை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

அ) சீர் + இளமை  ஆ) சீர்மை + இளமை      இ) சீரி + இளமை  ஈ) சீற் + இளமை

4. சிலம்பு + அதிகாரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்____

அ) சிலம்பதிகாரம் ஆ) சிலப்பதிகாரம்  இ) சிலம்புதிகாரம் ஈ) சில பதிகாரம்

5. கணினி + தமிழ் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______

அ) கணினிதமிழ்  ஆ) கணினித்தமிழ்         இ) கணிணிதமிழ்  ஈ) கனினிதமிழ்

6. “ தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர்___

அ) கண்ணதாசன்            ஆ) பாரதியார்     இ) பாரதிதாசன்     ஈ) வாணிதாசன்

7. “ மா “ என்னும் சொல்லின் பொருள்_____

அ) மாடம்            ஆ) வானம்         இ) விலங்கு        ஈ) அம்மா

ஆ) கோடிட்ட இடத்தை நிரப்புக:-

1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது _______

2. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் _______

3. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டுமெனில் அது _____ அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

இ) சொற்களைச் சொந்தத் தொடரில் அமைத்து எழுதுக.

1. தனிச்சிறப்பு                 2. நாள்தோறும்

ஈ) குறுவினா:-

1. தமிழ் ஏன் மூத்தமொழி என்று அழைக்கப்படுகிறது?

2. நீங்கள் அறிந்த தமிழ்க் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

உ) சிறுவினா:-

1. அஃறிணை, பாகற்காய் ஆகிய சொற்களின் பொருள் சிறப்பு யாது?

2. தமிழ் இனிய மொழி என்பதற்கான காரணம் தருக.

3. தமிழ்மொழியின் சிறப்பைக் குறித்து ஐந்து வரிகளில் எழுதுக.

ஊ) சிந்தனை வினா:-

1. தமிழ் மொழி படிக்கவும், எழுதவும் எளியது என்பது பற்றி உங்கள் கருத்து யாது?

2. தமிழ் மொழி வளர்மொழி என்பதை உணர்கிறீர்களா? காரணம் தருக.

 

 

தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்

அ) கொடுக்கப்பட்டுள்ள மாத்திரை அளவுக்கேற்பச் சொற்களை எழுதுக:-

1. உயிரெழுத்தில் தொடங்கும் இரண்டு மாத்திரை அளவுள்ள சொல் _______

2. இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச் சொல் _____

3. ஆய்த எழுத்து இடம்பெறும் இரண்டரை மாத்திரை அளவுள்ள சொல் _____

ஆ) குறு வினா:-

1. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

2. மெய்யெழுத்துகளை மூவகை இனங்களாக வகைப்படுத்தி எழுதுக.

3. தமிழ் எழுத்துகளுக்குரிய மாத்திரை அளவுகளைக் குறிப்பிடுக.

மொழியை ஆள்வோம்

கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

விரிவான கருத்தைச் சுருக்கிச் சொல்வதே பழமொழியின் சிறப்பு. சான்றாக, சுத்தம் சோறு போடும் என்னும் பழமொழி தரும் பல பொருளைக் காண்போம். சுத்தம் நோயற்ற வாழ்வைத் தரும். உடல் நலமே உழைப்புக்கு அடிப்படை. உழைத்துத் தேடிய பொருளால் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகிறோம். இவை அனைத்திற்கும் சுத்தமே அடிப்படை. இவ்விரிந்த கருத்து சிறு அடிக்குள் அடங்கியுள்ளது.

 1. பழமொழியின் சிறப்பு சொல்வது

அ) விரிவாகச் ஆ) சுருங்கச்  இ) பழைமையைச்  ஈ) பல மொழிகளில்

2. நோயற்ற வாழ்வைத் தருவது  ______

3. உடல்நலமே ________  அடிப்படை

4. உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை?

5. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக:-

பிறமொழிக் கலப்பின்றிப் பேசுக.

1. எங்க ஸ்கூல்லே சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.

2. பெற்றோரிடம் பர்மிசன் லெட்டர் வாங்கி வரச் சொன்னாங்க.

ஆய்ந்தறிக.

பெயரில் தலைப்பெழுத்தைப் பலவகையாக எழுதுகின்றோம்.

 S. இனியன், எஸ். இனியன், ச. இனியன் - இவற்றுள் சரியானது எது? ஏன்?

கடிதம் எழுதுக.

விடுப்பு விண்ணப்பம்.

மொழியோடு விளையாடு

திரட்டுக

.மை’ என்னும் எழுத்தில் முடியும் சொற்களின் பட்டியல் தயாரிக்க

1. கீழ்க்காணும் சொற்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக.

(எ.கா) கரும்புகரு, கம்பு

கவிதை

 பதிற்றுப்பத்து -

 பரிபாடல்

2. இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

(எ.கா.) விண்மீன்

எழுதுகோல், நீதி மணி, கண்மணி, நீதி நூல், தமிழ் மாலை, நூல் வெளி, தமிழ்மணி

பொருத்தமான சொற்களைக் கொண்டு தொடர்களை நிரப்புக.

அழகு, ஏற்றம், இன்பம், ஊக்கம், இனிமை, ஆற்றல், ஈடு, இசை, உணர்வு, ஏடுகள், உரிமை, என்றும், எளிதாய், உவகை, , அன்பு

 (எ.கா.)

அ - அன்பு தருவது தமிழ்

ஆ -  ­­­­­­______தருவது தமிழ்

இ -  ______ தருவது தமிழ்

ஈ -  ______ இல்லாதது தமிழ்

உ -  _______ தருவது தமிழ்

ஊ - _______தருவது தமிழ்

எ -  ______ வேண்டும் தமிழ்

ஏ -  _____ தருவது தமிழ்

கட்டங்களில் மறைந்துள்ள பெயர்களைக் கண்டுபிடிக்

 

 



 

 

 

கலைச் சொல் அறிவோம்

Clock wise

Anti Clock wise

Internet

Voice Search

Search engine

Touch Screen

Facebook

App

Whatsapp

E-mail

 CLICK HERE TO GET PDF

ஆக்கம் :

தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்

இந்த வினாத்தாளின் விடைக்குறிப்புகளை கீழ்க்கண்ட வலைதளத்தில் காணலாம்

www.tamilvithai.com



www.kalvivithaigal.com


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post