10TH - TAMIL - DHARMAPURI DT - QURTLY QUESTION ANSWER KEY - PDF

  

பத்தாம் வகுப்பு

தமிழ்

காலாண்டுத் தேர்வு - 2022

தர்மபுரி மாவட்ட வினாத்தாள் - விடைக்குறிப்பு

தர்மபுரி - காலாண்டு வினாத்தாள்

செப்டம்பர் - 2022-2023

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                         மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஆ. இறைவனிடம் குலசேகராழ்வார்

1

2.

ஆ. கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

1

3.

இ. குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள்

1

4.

இ. இலா

1

5.

அ. அருமை + துணை

1

6.

இ. வேற்றுமை உருபு

1

7.

ஆ. உவமை அணி

1

8.

இ. இலா

1

9.

இ. 3,1,4,2

1

10.

அ. சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

1

11.

ஈ. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

1

12.

இ. கருவளர், உரு அறி

1

13.

இ. கீரந்தையார்

1

14.

ஈ. வானம்

1

15.

ஆ. அடுக்குத் தொடர்

1

பகுதி – 2

பிரிவு - 1

16.

அ) முல்லை நிலத்திற்குரிய முதற்பொருள்கள் யாவை?

ஆ) கொண்டல் காற்று என்பது எது?

2

17.

மாமிசத்தையும், தினைச் சோற்றையும்  உணவாகப் பெறுவீர்கள்.

2

18.

ஆறு வகைப்படும்

1.அறிவினா     2. அறியா வினா       3. ஐய வினா

4. கொளல் வினா    5. கொடை வினா   6. ஏவல் வினா

2

19

உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை.

2

20.

ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு

2

21

பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்

 கண்ணோட்டம் இல்லாத கண்

2

பகுதி – 2

பிரிவு - 2

22

v  கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம்இன்னிசை அளபெடை.

2

23

மலையிலிருந்து மாலை இறங்கினேன்

2

24

அ. வெற்பனர்கள் மலையில் உழுதனர்

ஆ. தாழைப்பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்

2

25.

வருக – வா ( வரு ) + க

வா – பகுதி

வரு – விகாரம்

க – வியங்கோள் வினைமுற்று

2

26.

அ. உரையாடல்

ஆ. விண்வெளி தொழில் நுட்பம்

1

1

27.

அ. கூத்துக் கலைஞர் பாடத்தொடங்கியதால் கூடியிருந்த மக்கள்  அமைதியாயினர்.

ஆ. ஓடிக் கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றது. அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.

1

1

28.

1.தேன் மழை     2. மணிமேகலை       3. பூ மணி

4. விளக்கு செய்   5. வான் மணி   6. தேன் மழ

 

2

பகுதி – 3 / பிரிவு - 1

29

Ø  காட்டில் பனைவடலி நடப்பட்டது

Ø  தோட்டத்தில் மாங்கன்று நடப்பட்டது.

Ø  சோளப் பைங்கூழ் வளர்ந்து வருகிறது

Ø  புளியங்கன்று சாலை ஓரத்தில் வளர்ந்து வருகிறது.

Ø  தோட்டத்தில் தென்னம்பிள்ளை வளர்த்தேன்

3

30

·         ஒரளவு மேம்படுத்துகின்றன.

·         மனிதனுக்கு தேவையான தேவைகளை மேம்படுத்தி இருக்கிறது.

·         மனிதனிடம் இரக்கம், அன்பு போன்றவை இல்லை.

·         மனிதன் இயந்திரதனமான வாழ்வை வாழ்கின்றான்

3

31.

அ. காற்று

ஆ. கதிரவனிடமிருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்களைத்  தடுக்கும் அரண்

இ. குளோரா புளோரா கார்பன்

1

1

1

பகுதி – 3 / பிரிவு - 2

32

தமிழ்

கடல்

1. முத்தமிழாக வளர்ந்தது

1. முத்தினைத் தருகிறது

2. முச்சங்களால் வளர்க்கப்பட்டு

2. மூன்று சங்குகளைத் தருகிறது

3. ஐம்பெருங்காப்பியங்கள்

3. பெரும் வணிகக் கப்பல்

4. சங்கப் புலவர்களால் காக்கப்பட்டது.

4. சங்கினைத் தடுத்து காக்கிறது

3

33.

v  மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார். அதுபோல நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அருளையே எதிர்பார்த்து வாழ்கிறேன்.

3

34.

அ) அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று.

( அல்லது )

ஆ) சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள், “ கைய

கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

இன்னே வருகுவர்,தாயார்” என்போள்

நன்னர் நன்மொழி கேட்டனம்                                          

3

பகுதி – 3

பிரிவு - 3

35

அணி        : உவமை அணி. உவமை அணியில் உவமானம்,உவமேயம்,உவம உருபு ஆகிய மூன்றும் வெளிப்படையாக வரும்.

          உவமானம் : வேலோடு நின்றான் இடுவென்றது

            உவமேயம் : கோலோடு நின்றான் இரவு

            உவமஉருபு : போலும்

            விளக்கம்   : அரசன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி வரி விதிப்பது,வேல் முதலான ஆயுதங்களைக்கொண்டு வழிப்பறி செய்வதற்கு சமம்.

3

36.

கொண்டு கூட்டுப் பொருள்கோள்

விளக்கம் : ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்க ளைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள்கொள்வது கொண்டுகூட்டுப் பொருள்கோளாகும்.

பொருத்தம்:

மேற்கண்ட பாடலில் ஆலத்து மேல் குவளை என்றும் குளத்தில் வாலின் நெடிய குரங்கு என்றும் பொருள் கொண்டா ல் பொருத்தமற்றதாகிவிடும். இதில் ஆலத்து மேல குரங்கு, குளத்துள குவளைஎன்று கருத்தைக் கொண்டு அங்குமிங்கும் கொண்டு பொருள்கோள் அமைந்திருப்பதால் இது கொண்டுகூட்டுப் பொருள்கோள் எனப்படும்.

3

37

வழு ஏழு வகைப்படும்

மல்லிகைப்பூ

இருபெயரொட்டு பண்புத்தொகை

மல்லிகையான பூ

பூங்கொடி

உவமைத் தொகை

பூப் போன்ற கொடி

ஆடுமாடு

உம்மைத் தொகை

ஆடுகளும்மாடுகளும்

தண்ணீர்த் தொட்டி

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

தண்ணீரை உடையத் தொட்டி

குடிநீர்

வினைத்தொகை

குடித்தநீர்,குடிக்கின்றநீர்,குடிக்கும் நீர்

சுவர்கடிகாரம்

ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

சுவரின் கண் கடிகாரம்

மணி பார்த்தாள்

இரண்டாம் வேற்றுமைத் தொகை

மணியைப் பார்த்தாள்

3

பகுதி – 4

38

  அ) குறிப்புச்சட்டம்

முன்னுரை

மன்னனும் இடைக்காடனும்

இறைவனிடம் முறையிடல்

இறைவன் நீங்குதல்

மன்னன் முறையிடல்

புலவனுக்கு சிறப்பு செய்தல்

முடிவுரை

முன்னுரை :

          கபிலரின் நண்பர் இடைக்காடனரை மன்னன் இகழ்ந்ததன் பொருட்டு இறைவன புலவனின் குரலுக்கு செவி சாய்த்த நிகழ்வைக் இக்கட்டுரையில் காண்போம்.

மன்னனும் இடைக்காடனும்

·         மன்னன் குசேலேப் பாண்டியன் முன் இடைக்காடன் தன் கவிதையை பாடினார்

·         மன்னன் அதனை பொருட்ப்படுத்தாமல்  இகழ்ந்தார்

·         புலவன்  அங்கிருந்து வெளியேறினார்.

இறைவனிடம் முறையிடல்

·         இடைக்காடன் இறைவனிடம் முறையிடல்

·         மன்னன் தன்னை இகழவில்லை.

·         இறைவனான உன்னை இகழ்ந்தான்.

இறைவன் நீங்குதல்

·         இறைவன் இதனைக் கண்டு கடம்பவன கோயிலை விட்டு நீங்கினார்

·         வையை ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோயிலில் சென்றார்.

மன்னன் முறையிடல் :

·         மன்னன் இறைவன் நீங்கியதைக் கண்டு வருத்தம் அடைந்தான்.

·         இடைக்காடன் பாடலை இகழ்ந்தது தவறு தான் பொறுத்தருள   வேண்டினான்

புலவனுக்கு சிறப்பு செய்தல்

·         மன்னன் இடைக்காடனாரிடம் தன்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டுதல்

·         இறைவன் சொல் கேட்டு இடைக்காடனுக்கு மன்னன் சிறப்பு செய்தான்

முடிவுரை :

          மன்னனின் சொல் கேட்ட புலவர்களின் கோபம் தணிந்தது.

·         இடைக்கானார் புலவரின் பாடலை இகழ்ந்தன் காரணமாக இறைவன் புலவனின் குரலுக்குச் செவிச்சாய்த்தார்,

5

38

ஆ.

குறிப்புச் சட்டம்

முன்னுரை

மழை மேகம்

மழைப் பொழிவு

மாலைப் பொழுது

நற்சொல் கேட்டல்

ஆற்றுப்படுத்துதல்

முன்னுரை :

            முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை நாம் கட்டுரை வடிவில் காணலாம்.

மழை மேகம் :

திருமால் மாவலி மன்னனுக்கு நீர் வார்த்து தரும் போது விண்ணுக்கும் மண்ணுக்கும் பேருருவம் எடுத்தது போல் மழை மேகம் உயர்ந்து நின்றது.

மழைப் பொழிவு :

கடலின் குளிர் நீரைப் பருகி, மலையைச் சூழ்ந்து விரைந்த வேகமாய் பெருமழைப் பொழிகிறது.

மாலைப் பொழுது :

வண்டுகளின் ஆரவாரம் கொண்ட அரும்புகள்.

முதுப் பெண்கள் மாலை வேலையில் முல்லைப் பூக்களோடு, நெல்லையும் தெய்வத்தின் முன் தூவினர்.

நற்சொல் கேட்டல் :

முதுப்பெண்கள் தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.

இது விரிச்சி என அழைக்கப்படும்

ஆற்றுப்படுத்துதல் :

இடைமகள் பாசியால் வாடிய இளங்கன்றை காணல்

உன் தாய்மாரை எம் இடையர் இப்போது வந்து விடுவர் எனக் கூறல்

முதுப் பெண்கள் இந்த நற்சொல்லை நாங்கள் கேட்டோம். உன் தலைவன் வந்து விரைந்து வந்துவிடுவான் என ஆற்றுப்படுத்தினர்

முடிவுரை :

          இவ்வாறு முல்லைப் பாட்டில் மழைமேகம், மழைப்பொழிவு, மாலைப் பொழுது, நற்சொல் கேட்டல், ஆற்றுப்படுத்துதல் என செய்திகளை கண்டோம்.

 

5

39

அ.

குறிப்புச்சட்டகம்

நூலின் தலைப்பு

நூலின் மையப் பொருள்

மொழிநடை

வெளிப்படுத்தும் கருத்து

நூலின் நயம்

நூல் கட்டமைப்பு

சிறப்புக்கூறு

  நூல் ஆசிரியர்

நூலின் தலைப்பு:

                   பரமார்த்தகுரு கதை

நூலின் மையப் பொருள்:

                      சீடர்கள் குருவிடம் கொண்டுள்ள பக்தியும்,விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது நூலின் மையப் பொருள்.

மொழிநடை:

                   நகைச்சுவையுடன் யாவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.

வெளிப்படுத்தும் கருத்து:

                   பகுத்தறிவுடன் செயலபட வேண்டும் என ஒவ்வொரு கதையிலும் வெளிப்பட்டு இருக்கிறது.

நூலின் நயம்:

                   விழிப்புணர்வுடனும் நகைச்சுவையுடனும் எழுதப்பட்டுள்ளது.

நூல் கட்டமைப்பு:

                   சிறுவர்கள் ஆர்வமுடன் படிக்கும் வகையில் நூலின் கட்டமைப்பு உள்ளது.

சிறப்புக்கூறு:

                   ஒவ்வொரு கதையும் பகுத்தறியும் திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது.

நூல் ஆசிரியர்:

                   வீரமாமுனிவர்.

 

5

39

ஆ. சேலம்

03-03-2021

அன்புள்ள நண்பனுக்கு,

            நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம்என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

            பெறுதல்

                        திரு.இரா.இளங்கோ,

                        100,பாரதி தெரு,

                        சேலம்.

 

5

40

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத  

என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி    

அர்த்தமுள்ள இந்தக் காட்சி

சமூகத்திற்கு தேவையான காட்சி

சமூக விளைவை ஏற்படுத்துக் காட்சி

எல்லோருக்கும் அறிவுறுத்தும் காட்சி

5

40

ஆ) பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.       

 

41.

படிவத்தில் அனைத்து படிநிலைகளையும் சரியாக நிரப்பி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்

5

42

அ.

பள்ளியில் நான்

வீட்டில் நான்

1.  நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்

1. அதிகாலையில் எழுவேன்

2.  ஆசிரியர் சொல்படி நடப்பேன்..

2.  பெற்றோர் சொல்படி நடப்பேன்.

3. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

3. பெரியவர்களிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

4. நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன். ..

4. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.

5. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.

5. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்

5

42

மொழிபெயர்க்க

மரியாதைக்குரியவர்களே.என் பெயர் இளங்கோவன்.நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகளைக் கூற விளைகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும்,நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர்களின் பண்பாடு இந்தியா,ஸ்ரீலங்கா,ம்லேசியா,சிங்கப்பூர்,இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நன்றி.

5

 

பகுதி – 5

 

43

அ) குறிப்புச் சட்டம்

வரவேற்பு

விருந்து உபசரிப்பு

நகர் வலம்

இரவு விருந்து

பிரியா விடை

வரவேற்பு :

·         என் இல்லத்திற்கு வந்த உறவினர்களை வருக,வருக என மகிழ்ச்சியாக வரவேற்றேன்.

·         அவர்கள் அமர்வதற்கு இருக்கையை சுத்தப்படுத்திக் கொடுத்தேன்.

·         வந்தவர்களுக்கு முதலில் நீர் அருந்தத் தந்தேன்.

விருந்து உபசரிப்பு :

·         வந்தவர்களுக்கு கறியும், மீனும் வாங்கி வந்தேன்.

·         மாமிச உணவை வாழை இலையில் பரிமாறினேன்.

·         அவர்கள் உண்ணும் வரை அருகில் இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றை பார்த்துப் பார்த்து கவனித்தேன்.

நகர்வலம் :

·         விருந்து முடித்து, எங்கள் ஊரின் சிறப்புகளை கூறினேன்.

·         ஊரின் சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று அவற்றை உறவினர்களோடு கண்டு களித்தேன்.

இரவு விருந்து :

·         நகர்வலம் முடித்து, இரவு விருந்துக்கு தேவையானவற்றை செய்தேன்.

·         இரவில் இரவு நேரத்திற்கு ஏற்ற உணவுகளை விருந்துப் படைத்தேன்.

பிரியா விடை :

·         இரவு விருந்து முடித்து அவர்கள் தங்கள் ஊருக்கு செல்வதாக கூறினர்.

·         எனக்குப் பிரிய மனமில்லாமல் அவர்கள் கூடவே பேருந்து நிறுத்தம் வரை சென்று வழி அனுப்பிவிட்டு வந்தேன்

 

8

 

ஆ.

குறிப்புச் சட்டம்

 

முன்னுரை

ஊர்திகளில் வெளிப்பாடு

கல்வித்துறையில்

பிற செயல்பாடுகள்

முடிவுரை

முன்னுரை :-

            ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்று விடுமா? என்றால் அதன் வெளிபாடு அதிகமாக இருக்கும் என்பதனை இக்கட்டுரை வாயிலாகக் காணலாம்.

ஊர்திகளில் வெளிபாடு :

            எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ஊர்திகள் வந்து விடும். இவற்றின் மூலம்

·         போக்குவரத்து நெரிசல் குறையும்

·         பயண நேரம் குறையும்

·         எரிபொருள் மிச்சமாகும்.

கல்வித்துறையில் :

          கல்வித்துறையில் இத்தகைய தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  உலகின் அதிசயங்களை நாம் இங்கிருந்தே கண்டு கற்கலாம்

பிற செயல்பாடுகள்:

·         மனிதர்களிடம் போட்டியிடலாம்

·         பல்வேறு இடங்களில் மனிதர்கள் வழங்கும் சேவைகளை வழங்கலாம்.

·         சாக்கடைகளை சுத்தம் செய்யும் இயந்திர மனிதன் கண்டுப்பிடிக்கலாம்.

முடிவுரை :

          செயற்கை நுண்ணறிவு கருவிகளால் மனிதர்களின் வேலைபளு குறைந்துள்ளது. கால விரயம் தடுக்கப்பட்டுள்ளது..

8

44.

அ.

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

தேசாந்திரி

கருணை அன்னமய்யா

முடிவுரை

முன்னுரை :

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக் காணலாம்.

தேசாந்திரி:

Ø  சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி.

Ø  அன்னமய்யாவுடன் ஒரு ஆள் உடன் வந்தான்

Ø  அவன் மிக சோர்வாக இருந்தான்

Ø  லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான்.

Ø  குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது.

Ø  வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான்

கருணை அன்னமய்யா:

Ø  அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான்.

Ø  அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும்,துவையலும் வைத்து கொடுத்தார்.

Ø  கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான்.

Ø  ஆனந்த உறக்கம் கண்டான்.

முடிவுரை:

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது.

8

44

ஆ) குறிப்புச்சட்டம்

முன்னுரை

மேரி

அவமானம்

புதிய நம்பிக்கை

கல்வி

உதவிக்கரம்

மேல்படிப்பு

முடிவுரை

முன்னுரை :

          மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மேரி :

·         சாம் – பாட்ஸி இணையருக்கு மகளாகப் பிறந்தவள் மேரி.

·         பருத்திக்காட்டில் வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள்.

அவமானம் :

·         மேரி பாட்ஸியுடன் பென்வில்ஸன் வீட்டிற்கு செல்கிறார்கள்.

·         மேரி அந்த வீட்டின் அலமாரியிலிருந்த புத்தகத்தை எடுக்கிறாள்.

·         பென்வில்ஸன் இளையமகள் அவளிடமிருந்து புத்தகத்தை பிடிங்கினாள்.

·         உனக்கு படிக்கத் தெரியாது என கூறினாள்.

·         மேரி மனம் துவண்டாள்.

புதிய நம்பிக்கை

·         மேரிக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உணடானது.

·         ஒரு நாள் மிஸ் வில்ஸன் என்பவர் “ உன் போன்ற குழந்தைகள் படிக்க வேண்டும். நீ சீக்கிரமாக மேயெஸ் வில்லிக்கு வர வேன்டும்.

·         மேரிக்கு புதிய நம்பிக்கை பிறந்தது.

கல்வி

·         மேரி ஐந்து மைல்கள் நடந்து சென்று கல்வி கற்றாள்.

·         சில வருடங்கள் கழித்து மேரிக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

·         அதில் “ இந்த பட்டம் பெறும் மாணவர் எழுதவும் படிக்கவும் கூடியவர் “ என எழுதப்பட்டிருந்தது.

உதவிக்கரம்

·         மிஸ்வில்சன் மூலம் மேரிக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி

·         அவளின் மேல்படிப்பு செலவுக்காக மேற்குப் பகுதியில் வாழ்கின்ற வெள்ளைக்கார பெண் மணி பணம் அனுப்பி இருக்கிறார்.

·         அவள் மேல் படிப்புக்காக டவுணுக்கு செல்கிறாள்.

மேல்படிப்பு

·         மேரியை மேல்படிப்பு படிப்பதற்காக இரயில் நிலையத்தில் அவளது கிராமமே வழியனுப்ப திரண்டு வந்தது.

·         மிஸ் வில்ஸனும் இரயில் நிலையத்தில் வந்தார்கள்.

முடிவுரை

          எப்படிப்பட்ட நிலையிலும் கல்வி நம்மை உயர்த்தும் என்பதற்கு மேரியின் வாழ்க்கையை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். மேரியிடமிருந்து பறிக்கப்பட்டப் புத்தகம் அவள் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றியது என்பதனை இக்கட்டுரை வழியாகக் கண்டோம்..

 

 

 

 

 

8

45

அ. உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

பொருட்காட்சி

நுழைவுச் சீட்டு

பல்துறை அரங்கம்

அங்காடிகள்

பொழுதுபோக்கு

முடிவுரை

முன்னுரை :

எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

பொருட்காட்சி :

          மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது.

நுழைவுச் சீட்டு:

          பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது.

பல்துறை அரங்கம் :

          அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன.

அங்காடிகள்:

          வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன.

பொழுதுபோக்கு :

          சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன.

முடிவுரை:

          எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம்.

மேற்கண்ட தலைப்புகளில் ஏற்புடைய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

8

45

ஆ.

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

முயற்சி

முயற்சியின் பெருமை

முயற்றின்மையால் வரும் இழிவு

ஊழையும் வெல்லும் முயற்சி

முடிவுரை

முன்னுரை:

                முயற்சியின் பெருமைகளையும், முயற்சியினால் கிடைக்கும் பயன்களையும் இக்கட்டுரையில் நாம் காணலாம்

முயற்சி

                  ஒரு செயல் முடிப்பதற்கு இயலாதது என்று எணணிச் சோர்வு அடையாதிருக்க வேண்டும். அச்செயல் முயற்சியுடன் முடிப்பது பெருமை தரும்.

முயற்சியின் பெருமை:

v  விடாமுயற்சி என்ற உயர்பண்பு கொண்டவர்களால் தான் பி்ருக்கு உதவுதல் என்ற உயர்ந்த நிலையை அடைய முடியும்.

v  முயற்சி கெய்தோல் ஒருவர்க்குச் செல்வம் பெருகும். முயற்சி இல்லாவிட்டால் அவருக்கு வறுமையே வந்து சேரும்..

முயற்றின்மையால் வரும் இழிவு:

                ஐம்புலன்களில் ஏதேனும் குறையிருப்பினும் அது இழிவன்று. அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாததே இழிவோகும

ஊழையும் வெல்லும் முயற்சி:

                சோர்வில்லாது முயற்சி செய்வோர் செய்கின்ற செயலுக்கு  இடையூறாக வரும் முன்வினையையும் தோற்கடித்து வெற்றிடையவர்

முடிவுரை:

                முயற்சி ஒருவரை சாதனையளராக மாற்றும். முயற்சியின் பெருமைகளையும், பயன்களையும் இக்கட்டுரையில் வாயிலாக கண்டோம்.

8

 CLICK HERE TO DOWNLOAD BUTTON TO GET ANSWER KEY - PDF

நீங்கள் 15 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி


ஆக்கம் :

வெ.ராமகிருஷ்ணன்,

அரசு உயர்நிலைப் பள்ளி,

கோரணம்பட்டி.

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post