ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். நடந்து முடிந்த எட்டாம் வகுப்பு - தமிழ் - ஆண்டு இறுதித் தேர்வு தமிழ் தேர்வுக்கான வினாத்தாளின் உத்தேச விடைக் குறிப்புகள் நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். நன்றி,வணக்கம்
ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள்
மே - 2021-2022 - எட்டாம் வகுப்பு
சேலம் - மாவட்டம்
மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி – 1 மதிப்பெண்கள் - 20 | ||
வினா.எண் | விடைக் குறிப்பு | மதிப்பெண் |
1. | அ. வைப்பு | 1 |
2. | இ. நெடுந்தேர் | 1 |
3. | அ. பயிலுதல் | 1 |
4 | ஆ. இரட்டுற மொழிதல் அணி | 1 |
5. | இ. மூன்று | 1 |
6. | ஈ.அமராவதி | 1 |
7. | ஈ. கசடு + அற | 1 |
8 | இருந்து | 1 |
9. | இ. உவமைத் தொகை | 1 |
10. | ஆ. வனைதல் | 1 |
11. | ஈ. சுல்தான் அப்துல் காதர் | 1 |
12. | ஆ. தந்தை பெரியார் | 1 |
13. | ஆ. கல்லாதவர் | 1 |
14 | இ. நல்வாழ்வுக்காக | 1 |
15 | இ. மதுரை | 1 |
16. | அ. இயலாத செயல் | 1 |
17. | இ. மழை | 1 |
18. | இ. தலை | 1 |
19. | அ.அலறும் | 1 |
20. | இ. வாணிதாசன் | 1 |
II.அடிபிறழாமல் எழுதுக | ||
21 | அ. வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி! வாழிய வாழியவே! வான மளந்தது அனைத்தும் அளந்திடு வண்மொழி வாழியவே! ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே! எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி! என்றென்றும் வாழியவே! | 4 |
21. | ஆ. *ஓடை ஆட உள்ளம் தூண்டுதே! – கல்லில் உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும் பாட இந்த ஓடை எந்தப் பள்ளி சென்று பயின்ற தோடி! ஏடு போதா இதன்கவிக் கார் ஈடு செய்யப் போரா ரோடி! நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி நாட்டு மக்கள் வறுமை ஓட்டி | 4 |
22. | அ. கற்றோருக்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோர் அணி்கலம் வேண்டாவாம் - முற்ற முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே அழகுக்கு அழகுசெய் வார்* | 4 |
22 | ஆ. *ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே* . | 4 |
23 | பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்
| 2 |
24. | வானம் வரை உள்ளடங்கியுள்ள பொருண்மைகளை அறிந்து வளர்கிறது. | 2 |
25 | நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது. | 2 |
26 | தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவை மருந்தாகப் பயன்படுகின்றன. | 2 |
27. | பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும். இது பெயரெச்சம், வினையெச்சம் என்று இருவகைப்படும். | 2 |
28. | ஆல், ஆன், ஒடு, ஓடு ஆகிய நான்கும் மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உருபுகள் ஆகும். | 2 |
29. | பெரிய முயற்சியே ஒருவருக்கு பெருமையைத் தரும் | 2 |
30. | மகாதேவ் அம்பேத்கர் என்ற ஆசிரியர், இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்டவராக வி்ளங்கினார்.. இதனால், பீமாராவ் சக்பால் அம்பவாதேகர்என்னும் தம் பெயரைப் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக் கொண்டார். | 2 |
31 | தேன்மலர், தேன் கூடு, சிட்டுக் குருவி, குருவிக்கூடு, | 2 |
32. | அ. ஆயிரங்காலத்துப் பயிர் – திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் ஆ. வாழையடி வாழை – குமணனின் குடும்பம் வாழையடி வாழையாக கொடை செய்து வருகிறது | 1 1 |
33. | அந்நியர்களின் ஆட்சியை இருண்ட ஆட்சி என மீரா குறிப்பிடுகிறார். | 2 |
34. | நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் இணைவதைப் புணர்ச்சி என்கிறோம். | 2 |
35 | Tribes – பழங்குடியினர் Buds - மொட்டு | 2 |
IV – எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடையளி | ||
36 | பா நான்கு வகைப்படும். அவை வெண்பா, ஆசிரியப்பா , கலிப்பா , வஞ்சிப்பா . வெண்பா செப்பல் ஓசை உடையது. . ஆசிரியப்பா அகவல் ஓசை உடையது. கலிப்பா துள்ளல் ஓசை உடையது. கலித்தொகை கலிப்பா வால் ஆனது. வஞ்சிப்பா தூங்கல் ஓசை உடையது. | 4 |
37 | எம்.ஜி.ஆர். தமிழ் வளர்ச்சிக்காகப் பல்பவறு பணிகளை ஆற்றினார். தந்தை பெரியார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்களுள் சிலவற்றை நடைமுறைப்படுத்தித் தமிழ் எழுத்துமுறையை எளிமைப்படுத்தினார்.மதுரை மாநகரில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார், தஞ்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தார்.. | 4 |
38 | மட்டக்கூடை, தட்டுக்கூடை, கொட்டுக்கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி, கூரைத்தட்டி, தெருக்கூட்டும் துடைப்ப ம், மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி, பழக்கூடை, பூக்கூடை, பூத்தட்டு, கட்டில், புல்லாங்குழல், புட்டுக்குழாய், கால்நடைகளுக்கு மருந்து புகட்டும் குழாய் என எத்தனையோ பொருள்கள் மூங்கில் மூலம் உருவாகின்றன. | 4 |
39 | இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை க் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி எனப்படும். தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு. இத்திருக்குறளில் முதலில் நெருப்பு, கொடுஞ்சொல் ஆகிய இரண்டும் சுடும்தன்மை உடையவை என்று கூறப்படுகிறது. பின்னர், நெருப்பினால் சுட்ட காயம் ஆறிவிடும்; உள்ளத்தில் ஏற்பட்ட வடு ஆறாது என்று இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு கூறப்படுகிறது. எனவே இது வேற்றுமை அணி ஆகும் | 4 |
40. | பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும். கண்களுக்கு இனிய குளிர்ச்சி தரும் ஒளியை உடைய பொன்வண்ண நீர்நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும். நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மதயானைகள் மணிகளை வாரி வாரி வீசும். இவற்றால் இடையறாது எழும் ‘கிண்’ என்னும் ஒலியானது இசையாக முழங்கும். இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் ஆகும் | 4 |
41 | மரம் + கட்டில் = மரக்கட்டில் கெடுதல் விகாரத்தின்படி நிலைமொழி ஈற்றில் உள்ள மகர மெய் மறைந்தது. தோன்றல் விகாரத்தின்படி க் என்னும் மெய்யெழுத்து தோன்றியது | 4 |
V.எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி |
| |
42. | அன்றாடப் பயன்பாட்டுக்காக அழகிய பொருள்களைத் தொழில்முறையில் உருவாக்கும் கலையைக் கைவினைக்கலை எனலாம். Ø மிகவும் பழமையான கைவினைக்கலை களுள் ஒன்று மண்பாண்டக் கலை. சிந்துசமவெளி அகழாய்வில் பானைஓடுகள் கிடைத்துள்ளன Ø ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தா ழிகள் கிடைத்துள்ளன. நாகை மாவட்டம் செம்பியன் கண்டியூரில் கலையழகு மிகுந்த மண்கலங்க ள் கண்டுபிடிக்கப்பட்டன. மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் ஏராளமான சுடுமண் பொருள்கள் கிடைத்துள்ளன. Ø சுடுமண் சிற்பங்கள் Ø மண்பாண்டங்களை ப் போன்றே களிமண்ணால் செய்யப்பட்டுச் சூளையில் சுட்டு எடுக்கப்படுபவை சுடுமண் சிற்பங்க ள் ஆகும். Ø மூங்கிலைக் கொண்டு பலவகையான கைவினைப் பொருள்கள் செய்யப்படுகின்றன. Ø மட்டக்கூடை, தட்டுக்கூடை, கொட்டுக்கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி, கூரைத்தட்டி, தெருக்கூட்டும் துடைப்ப ம், மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி, பழக்கூடை, பூக்கூடை, பூத்தட்டு, கட்டில், புல்லாங்குழல், புட்டுக்குழாய், கால்நடை களுக்கு மருந்து புகட்டும் குழாய் என எத்தனையோ பொருள்கள் மூங்கில் மூலம் உருவாகின்றன. Ø பொயகளில் பலவ்க உணடு. குழந்தைக்்ளப் படுக்கவப்பது தைடுக்குப்பாய், உட்கொர்நது உணண உதைவுவது பந்திப்பாய் உட்காரவும், படுக்கவும் உதைவுவது திண்ணப்பாய், திருமணத்துக்குப் பயன்படுததுவது பட்டுப்பாய், இசுலாமியர் மததொழுகைக்குப் பயன்படுத்துவது மததொழுகைப்பாய். இப்படிப் பலவகைப் பாய்கள் உண்டு. Ø பனையோலைகளினால் பல வகையான பொருள்கள் உருவாக்கப்படுகின்றன. | 7 |
43. | தான் எடுத்துக்கொண்ட செயலில் வெற்றியாளராக விளங்கிட வேண்டும் என்கிற எண்ணம் எல்லோருக்கும் உண்டு. எண்ணியதை எண்ணியவாறே செய்து முடிக்கும் வல்லமை சிலருக்கே வாய்க்கும். அத்தகையோர் மக்கள் மனத்தில் தலைவர்களாக நின்று வாழ்கிறார்கள். Ø பள்ளிக்குழந்தைகளின் பசி்யத தீர்க்கத் திட்டம் தீட்டியஅந்த உயர்ந்த மனிதர் தாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்று அனைவராலும் அழைக்கப்படும் எம்.ஜி.இராமசந்திரன். Ø திரைத்துறையில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத்த திறன் கொண்டு வி்ளங்கினார்.. Ø எம்.ஜி.ஆர். தாம் ஈட்டிய செல்வத்தை மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழ்ந்தவர். புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் நிகழ்ந்த போதெல்லாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடை வழங்கி அவர்களின் துயர் துடைக்க இவரின் கொடைக்கரங்கள் நீணடன. Ø பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். Ø பல்பவறு திட்டங்களைச் செயல்ப்படுத்திப் புகழ் பெற்றார் Ø எம்.ஜி.ஆர். தமிழ் வளர்ச்சிக்காகப் பல்வேறு பணிகளை ஆற்றினார். தந்தை பெரியார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்களுள் சிலவற்றை நடைமுறைப்படுத்தித் தமிழ் எழுததுமுறையை எளி்மைப்படுத்தினார்..
| 7 |
44. | Ø காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்ப டுபவை காற்றுக் கருவிகள் எனப்படும். (எ.கா.) குழல், சங்கு Ø காடுகளில் வளரும் மூங்கிலில் வண்டுகள் துளையிடும். அவற்றின் வழியாகக் காற்று வீசும்போது இன்னிசை எழும்பும் Ø குழல் ஏழு சுரங்களை உண்டாக்குவதற்கு உரிய ஏழு துளைகளை உடையதாக இருக்கும். Ø பித்தளை அல்லது வெண்கலத்தால் கொம்புகள் செய்யப்படுகின்றன. இதனை வேடர் வேட்டையின் போது ஊதுவர். Ø ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி போன்ற பல வகையான கொம்புகள் இக்கா லத்தில் திருவிழா ஊர்வலங்களின்போது இசைக்கப்படுகின்றன. Ø கடலில் இருந்து எடுக்கப்ப டுவது. வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை வலம்புரிச்சங்கு என்பர் Ø இஃது ஓர் இயற்கைக் கருவி
| 7 |
45 | நாடகப் பாங்கில் ஏற்புடைய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக. | 7 |
46. | உள்நாட்டு வணிகம் சேரநாட்டில் உள்நாட்டு வணிகமும் நன்கு வளர்ச்சியுற்றிருந்தது. மக்கள் தத்தம் பொருள்களைத் தந்து தமக்குத் தேவையான பொருளைப் பெற்றனர். நெல்லே விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்தது என்பர். உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன வெளிநாட்டு வணிகம் உழவு, கைத்தொழில், வணிகம் என்னும் மூன்றும் ஒரு நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு அடிப்படைகளாகும் என்பர். உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளனர். கடல் வணிகத்தில் சேரநாடு சிறப்புற்றிருந்தது. அதற்கு அந்நாட்டின் இயற்கை அமைப்பே காரணமாக அமைந்திருந்தது. சேரர்கள் வலிமை மிகுந்த கப்பல் படையை வைத்திருந்தனர். செங்குட்டுவனின் கடற்போர் வெற்றியால் அவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்று அழைக்கப்பட்டான். கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களைச் சேரமன்னர்கள் அடக்கினர். முசிறி சேரர்களின் சிறந்த துறைமுகங்களுள் ஒன்றாக விளங்கியது. இங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு மிளகு, முத்து, யானைத் தந்தங்கள், பட்டு, மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. | 7 |
47 | மனிதன் தனக்கு எதிரே இல்லாத வர்களுக்கும் பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான். அதற்காகப் பாறைகளிலும் குகைச்சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும். தொடக்ககாலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர். அடுத்ததாக ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது. அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் ஓசையைக் குறிப்பதாயிற்று. | 7 |
VI – கட்டுரை வினா | ||
48 | 7, தெற்கு வீதி, மதுரை-1 11-03-2022. ஆருயிர் நண்பா, நலம் நலமறிய ஆவல்.உன்னைச்சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டன.எனினும், உன்னுடன் பழகிய நாட்கள் எனக்கு எப்போது நினைத்தாலும் இன்பம் தருவன.மாநில அளவில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் நீ முதல் பரிசு பெற்றுள்ள செய்தியைத் தொலைக்காட்சி வாயிலாக அறிந்தேன்.விளையாட்டில் நீ பெரிய அளவில் சாதிப்பாய் என்பது, ”விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப” நாம் தொடக்க கல்வி பயிலும்போதே தெரிந்தது.நீ இதே போன்று பல வெற்றிகளைபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள். இப்படிக்கு, உனது ஆருயிர் நண்பன் க.தளிர்மதியன். உறைமேல் முகவரி: த.கோவேந்தன், 12,பூங்கா வீதி, சேலம்-4
| 8 |
48 | ஆ. நான் விரும்பும் கவிஞர்-பாரதியார்முன்னுரை: இருபதாம் நூற்றாண்டின் விடிவெள்ளி, புதுமைக் கவிஞர், தேசியக் கவி, மகாகவி எனப் பாராட்டப்பட்டவர் நம் பாரதியாரே ஆவார். பாட்டுக்கொரு புலவனாய்த் திகழ்ந்த பாரதி தம் பாடல்கள் மூலம் மக்களிடையே தமிழ்ப்பற்று, விடுதலை உணர்வு ஆகியவற்றை வளர்த்தார். பிறப்பும்,இளமையும் பாரதியார் எட்டயபுரத்தில் 11.12.1882 ஆம் நாளில் பிறந்தார். இவரின் பெற்றோர் சின்னசாமி, இலக்குமி அம்மையார் ஆவார். சிறிய வயதிலேயே கவிதை புனையும் திறமையைப் பெற்றார். தமது பதினோறாம் வயதில் பாரதி என்னும் பட்டம் சான்றோர்களால் வழங்கப்பட்டது. விடுதலைவேட்கை: 'பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு' என்றார். இப்படிப்பட்ட நம் உயர்ந்த பாரதம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருப்பதை எண்ணி 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என பாடினார். வெள்ளையரின் அடக்கு முறைக்கு அஞ்சாது விடுதலை உணர்வு மிக்க பாடல்களைப் பாடி மக்களைத் தட்டி எழுப்பினார். ஒருமைப்பாட்டுணர்வு: எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்திய மக்கள் என்றார். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே எனப் பாடி மக்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தினார். மொழிப்பற்று: பல மொழிகளைக் கற்றிருந்த பாரதி யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதுஎங்கும்காணோம்என்றுதமிழின்சிறப்பை எடுத்துரைத்தார். நாட்டுப்பற்று பாரதத் தாயின் அடிமைத்தனத்தை தகர்த்தெறிய இவர் எழுதிய பாடல்கள் இளைஞர்களைவீறு கொண்டு எழச் செய்தது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் மேடைகளிலும் வீதிகளிலும் இவருடைய பாடல்களையே பாடினார்கள். சமுதாயத் தொண்டு: சாதிக் கொடுமைகள், பெண்ணடிமை, சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவை இந்நாட்டிலிருந்து விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மதவெறிப் பிடித்து அலைபவர்களின் போக்கினைக் கண்டித்தார். படைப்புகள்: பாரதியார் எண்ணற்ற கவிதை, உரைநடை நூல்களைப் படைத்துள்ளார். குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், ஞானரதம், தராசு போன்ற எண்ணற்ற படைப்புகளைப் படைத்துள்ளார். முடிவுரை: . வளமான, வலிமையான பாரதத்திற்குத் தேவையான சிறந்த வழிகள் யாவும் அவருடைய பாடல்களில் உள்ளன. அவற்றை பின்பற்றினால் அவர் கனவு கண்ட பாரதத்தை நம்மால் உருவாக்க முடியும். | 8 |
VII – சிந்தனை வினா
| ||
49 | மாணவர்கள் வினாவிற்கு ஏற்றவாறு ஏற்புடைய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக | 7 |
CLICK HERE TO GET PDF