10TH - TAMIL - PTA COLLECTIONS - POETRY QUESTION

 

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச்செல்வங்களுக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழ்ப்பாடத்திற்குத் தேவையான அனைத்து தொகுப்புகளும் நமது தமிழ் விதை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 2019- 2020 ஆம் கல்வி ஆண்டில் பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியிட்ட மாதிரி வினாத்தாளில் இடம் பெற்றுள்ள வினாக்கள் மற்றும் அதன் விடைகள் உங்களுக்கு நமது தமிழ்விதை வலைதளம் மூலம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும். இதனை தயாரித்து வழங்கிய தமிழக தமிழாசிரியர் கழகம் - சேலம் மாவட்டம் அவர்களுக்கு தமிழ்விதையின் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.


தமிழக  தமிழாசிரியர் கழகம்-சேலம் மாவட்டம்

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:

(குறைக்கப்பட்ட பாடத்திட்டம்)

பத்தாம் வகுப்புதமிழ் இயல்கள் 1-9 பயிற்சித்தாள்

1. தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே நற்கணக்கே!

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!

வினாக்கள்

1. தென்னவன் மகள் யார்?

2. தென்னன் என அழைக்கப்படுபவன் யார்?

3. இப்பகுதியில் இடம் பெற்றுள்ள நூல்கள் யாவை?

திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை

4. இப்பாடலில் இடம் பெற்றுள்ள அடி எதுகையை எடுத்தெழுதுக.

5. நற்கணக்கே - பிரித்து எழுதுக.

6. இன்னறும் - இலக்கணக் குறிப்பு தருக.

 

2. 'அன்னை மொழியே'

செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின் பெருமை

எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்?

முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்

விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும்

வினாக்கள்

அ) பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.

ஆ) பாடலின் சீர் மோனைச் சொற்களைக் குறிப்பிடுக.

இ) உள்ளுயிரே - இச்சொல்லைப் பிரித்து எழுதுக.

ஈ) செந்தமிழ் - இலக்கணக்குறிப்பு தருக.

 

3. 'காற்றே வா!'

சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே

பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே

மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம்

நின்று வீசிக் கொண்டிரு

 

உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்

உன்னை வழிபடுகின்றோம்.

வினாக்கள்

அ) பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எழுத்தெழுதுக....

ஆ) பாடலில் அடி எதுகையை எழுதுக.

இ) நெடுங்காலம் - இலக்கணக்குறிப்பு

ஈ) அவித்துவிடு - பிரித்து எழுதுக.

 

 

 

4. பின்வரும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ

ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.

வினாக்கள்:

1. இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?

2. இப்பாடலின் ஆசிரியர் யார்?

3. நோயாளி ஏன் மருத்துவரை நேசிக்கிறார்?.

4. மீளாத் துயர் - இலக்கணக்குறிப்பு தருக.

5. இப்பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகையை எடுத்தெழுதுக.

 

5. பின்வரும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி.

 அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று.

வினாக்கள்

1.இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?

2.இப்பாடல் வரிகள் இடம் பெறும் நூலின் ஆசிரியர் யார்?

3. உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது யாது?

4. எதை நாம் அகற்றிட வேண்டும்?

5. இப்பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகையை எடுத்தெழுதுக.

6. அருந்துணை - இலக்கணக்குறிப்பு தருக.

7. அருளைப் பெருக்கி, அறிவைத் திருத்துவது எது?

8.அருந்துணையாய் - இச்சொல்லைப் பிரித்தால்

 

6.பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

வண்மையில்லை யோர்வறுமை யின்மையால்

திண்மையில்லை நேர்நெறுக ரின்மையால்

உண்மையில்லை பொய்யுரை யிலாமையால்

வெண்மையில்லை பல்கேள்வி மேவலால்

 1.இப்பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.

ஆ) பாடலின் சீர்மோனைச் சொற்களைக் குறிப்பிடுக

இ) புகழுரை - பிரித்து எழுதுக

ஈ) இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

 

7.ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோ?

வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில் ஆளோ?

தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ?

ஏழைமை வேடன் இறந்திலன்" என்று எனை ஏசாரோ?

அ) இப்பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.

ஆ) பாடலின் சீர்மோனைச் சொற்களைக் குறிப்பிடுக

இ) விலங்கிடும் - பிரித்து எழுதுக

ஈ) சொல்லிய - இலக்கணக் குறிப்பு தருக.

8.பின்வரும் பாடலைப் படித்து வினாக்களுக்க விடையளிக்க.

நின்றுகாவல் நெறிபூண்டு நெறியல்லது நினையாது

மைந்தரில்லொரு மைந்தராகியும் மன்னுயிர்கட்குராகியும்

விழிபெற்ற பயனென்னவும் மெய்பெற்ற அருளென்னவும்

மொழிபெற்ற பொருளென்னவும் முகம்பெற்ற பனுவலென்னவும்

அ) இப்பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.

ஆ) பாடலின் சீர் மோனைச் சொற்களைக் குறிப்பிடுக.

இ) மன்னுயிர் - பிரித்து எழுதுக.

ஈ) பாடலில் அமைந்துள்ள இயைபுச் சொற்களைக் கூறு.

 

9. பின்வரும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி.

மண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும்

பொன்செய் கொல்லரும் நன்நலம் தருநரும்

துன்ன காரரும் தோலின் துன்னரும்

கிழியனும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்

வினாக்கள்:

1) இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

2) இப்பாடலின் ஆசிரியர் யார்?

3) மண்ணுள் வினைஞர் - பொருள் தருக?

4) நன்கலம் - இலக்கணக் குறிப்பு தருக?

5) துன்னகாரர் யார்?

 

10.பழுது இல் செய்வினைப் பால்கெழு மாக்களும்,

குழலினும் யாழினும் குரல் முதல் எழும்

வழுவின்றி இசைத்து வழித்திறம் காட்டும்

அருள்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்

வினாக்கள்:

1)இப்பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக

2) பாடலின் சீர்மோனைச் சொற்களைக் குறிப்பிடுக.

3) வழுவின்றி - பிரித்து எழுதுக

4) இசைத்து - இலக்கணக்குறிப்பு தருக.

 

11.பின்வரும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க

புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது

இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது!

வளமார் கவிகள் வாக்குமூலங்கள்

இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு!

கல்லாய் மரமாய்க் காடுமே டாக

மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்.

அ) பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.

ஆ) பாடலின் சீர் மோனைச் சொற்களைக் குறிப்பிடுக

இ) என்னுடல் - பிரித்து எழுதுக.

ஈ) இப்பாடலின் ஆசிரியர் யார்?

 

 

12.பின்வரும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி.

                                       தேம்பாவணி

             வாய்மணியாகக் கூறும்

                    வாய்மையே மழைநீராகித்

            தாய்மணியாக மார்பில்

                    தயங்கியுள் குளிர வாழ்ந்தேன்

           தூய்மணியாகத் தூவும்

                    துணியிலது இளங்கூழ் வாடிக்

          காய்மணியாகு முன்னர்க்

                    காய்ந்தெனக் காய்ந்தேன் அந்தோ

 

அ) பாடலில் இடம் பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக

ஆ) பாடலின் சீர் மோனைச் சொற்களை குறிப்பிடுக.

இ) இளங்கூழ் - பொருள் தருக.

ஈ) காய்மணி - இலக்கணக் குறிப்பு தருக.


CLICK TO DOWNLOAD BUTTON TO GET PDF



விடைக்குறிப்புகள்



Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post