10TH - TAMIL - ONE MARK - TEST

 

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் , அன்பான மாணவச் செல்வங்களுக்கும் தமிழ் விதையின் இனிய வணக்கம். மே 6 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கவுள்ளது. தற்சமயம் அனைத்து வகைப் பள்ளிகளிலும் மூன்றாம் திருப்புதல் தேர்வு அந்ததந்தப் பள்ளி அளவில் சம்பந்தப் பட்ட பாட ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட வினாத்தாளினைக் கொண்டு மூன்றாம் திருப்புதல் தேர்வு நடந்து முடிந்து இருக்கும். அடுத்து நமது நோக்கம் பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் நல்ல மதிப்பெண் பெற்று  நல்ல முறையில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே. நமது தமிழ் விதை தளமானது அதற்கான பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இரு மாதிரி பொதுத் தேர்வு வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு வழங்கிய பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் ( 2019- 2020 ) உள்ள குறைக்கப்பட்டப் பாடத்திற்குரிய வினாக்கள் மட்டும் எடுத்து ஒரு தொகுப்பாக உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது முதல் திருப்புதல் தேர்வு, இரண்டாம் திருப்புதல் தேர்வு, மற்றும் மாதிரி பொதுத் தேர்வு வினாத்தாளில் இடம் பெற்ற ஒரு மதிப்பெண் வினாக்கள் 100 வினாக்கள் இணைய வழித் தேர்வாக வைக்கப்பட்டுள்ளது. இந்த இணைய வழித் தேர்வில் மாணவர்கள் 85% மதிப்பெண் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் நீங்கள் வெற்றிப் பெற்றதற்கான மின் சான்றிதழ் உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். மாணவர்கள் எதிர் வரும் ஆண்டுத் தேர்வுக்கு மிகுந்த பயிற்சி பெற ஏதுவாக இருக்கும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த இணைய இணைப்பை உங்களின் சமூக வலைதளங்களிலும், தங்களுக்குத் தெரிந்து பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பகிர்ந்து உதவவும். உயர் நிலைப்பள்ளிகளில் உள்ள  உயர் தொழில் நுட்ப ஆய்வகத்திலும் பயன்படுத்தி பயிற்சிப் பெறவும்.

நன்றி , வணக்கம்

சான்றிதழுடன் கூடிய மாதிரிப் பொதுத் தேர்வு

இணைய வழித் தேர்வு எழுத

12 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post