ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வணக்கம். இன்று காலை ( 16-01-2022 ) நடைபெற்ற இணையவகுப்பின் காணொளி இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த காணொளியில் மாணவர்கள் எவ்வாறு எதிர் வரும் திருப்புதல் தேர்வுக்கும், பொதுத் தேர்வுக்கும் தயாரகுவது என்பது குறித்தும், விடைத்தாள் சமர்ப்பிப்பு எவ்வாறு இருக்க வேண்டும்? தேர்வுக்கு வரக்கூடிய முக்கிய வினாக்கள், எளிமையான முறையில் இலக்கணப்பகுதிகளுக்கு விடைக்காண்பது என்பன குறித்த பகுதி - 1 க்கான காணொளி உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாணவர்களுக்கு இணையத்தில் இடம் கிடைக்காமல் இருந்ததது சற்று வருத்தமான உள்ளது. அவ்வாறு இணைய வகுப்பில் பங்கேற்காத மாணவர்களுக்காக அந்த காணொளியின் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த பகுதி -1 க்கான காணொளியில் கண்டு இன்றைய பயிற்சியில் சொல்லப்பட்ட கருத்துகளை நீங்களும் அறிந்துக் கொள்ளுங்கள். இதன் தொடர்ச்சி மற்றும் பகுதி -2 க்கான இணைய வழி வகுப்பு இன்னும் திட்டமிடப்படவில்லை. ஜனவரி 31 வரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இதன் தொடர்ச்சி பிறிதொரு நாளில் வைக்கப்படும். ஆனால் நாள்தோறும் வினாத்தாள் அடிப்படையில் இணைய வகுப்பு நடத்தலாம் என அனுமானிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தமிழ் இணைய வகுப்பில் இன்று சொல்லப்பட்ட கருத்துகளை முழுமையாக கேட்கவும், தள்ளிவிட்டு தள்ளிவிட்டு பார்ப்பதை தவிர்க்கவும். பார்த்தப்பின் இந்த காணொளியை மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பவும். மறக்காமல் SUBSCRIBE செய்து BELL பட்டனில் ALL என்பதனை அழுத்திவிடவும்,ஏனெனில் இனி நாள் தோறும் நடக்கும் இணைய வகுப்புகள் உங்களுக்கு NOTIFICATION ஆக கிடைக்கப்பெறும்.