காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT
நாள் : 17 - 01- 2022
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -6 - புணர்ச்சி -2
அ.சரியான
விடைத் தேர்வு செய்க.
1. நிலைமொழி
ஈறும்,
வருமொழி முதலும் இணைவதை------- என்கிறோம்.
அ. தொடர் ஆ. பகுதி
இ. விகுதி
ஈ. புணர்ச்சி
2. நிலைமொழியின்
இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது-------
அ. மெய்முதல் புணர்ச்சி
ஆ. உயிரீறு புணர்ச்சி
இ. மெய்யீறு புணர்ச்சி
ஈ. உயிர்முதல் புணர்ச்சி
3. நிலைமொழியின்
இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அஃது------
அ. மெய்முதல் புணர்ச்சி
ஆ. உயிரீறு புணர்ச்சி இ. மெய்யீறு புணர்ச்சி
ஈ. உயிர்முதல் புணர்ச்சி
4. வருமொழியின்
முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது----------
அ. மெய்முதல் புணர்ச்சி
ஆ. உயிரீறு புணர்ச்சி இ. மெய்யீறு புணர்ச்சி
ஈ. உயிர்முதல் புணர்ச்சி
5. வருமொழியின்
முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அஃது------------------
அ. மெய்முதல் புணர்ச்சி
ஆ. உயிரீறு புணர்ச்சி இ. மெய்யீறு புணர்ச்சி
ஈ. உயிர்முதல் புணர்ச்சி
6. தாய்
+ மொழி = தாய்மொழி என்பது ___________ புணர்ச்சி
அ. விகாரம் ஆ. இயல்பு
இ. தோன்றல் ஈ.கெடுதல்
7. இரண்டு
சொற்கள் இணையும்போது நிலைமொழியிலோ வருமொழியிலோ அல்லது இரண்டிலுமோ மாற்றங்கள்
நிகழுமாயின்,
அது ----------எனப்படும்.
அ. தொடர் ஆ. பகுதி
இ. விகுதி
ஈ. விகாரம்
8. விகாரப்புணர்ச்சி
__________ வகைப்படும்?
அ. 4 ஆ. 3 இ. 2 ஈ. 5
9 நிலைமொழியும்
வருமொழியும் இணையும்போது புதிதாக ஓர் எழுத்துத் தோன்றுவது ------விகாரம் ஆகும்
அ. தோன்றல் ஆ. திரிதல்
இ. கெடுதல்
ஈ. எதுவுமில்லை
10 நிலைமொழியும்
வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது ------விகாரம் ஆகும்
அ. தோன்றல் ஆ. திரிதல்
இ. கெடுதல்
ஈ. எதுவுமில்லை