7 TH - 17-01-2022 -KALVI TV - TIRUNELVELI SEIMAIYUM,KAVIKALUM - VIDEO AND WORKSHEET

    https://tamilrk-seed.blogspot.com

காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பாடங்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதோடு அல்லாமல் அந்த பாடத்திற்குரிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. காணொலியில் பாடங்களை கற்றபின் வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக இணைய வழித் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த இணையவழித் தேர்வினை எழுதி அதன் மதிப்பெண்ணை உங்களின் தமிழாசிரியர்க்கு பகிரும் படி கேட்டுக் கொள்கிறோம். இணைய வசதி இல்லாத மாணவர்கள் இந்த வினாக்களின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிறைவு செய்து தங்கள் ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்கவும். இணைய வழித் தேர்வின் கீழ்த் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தினால் இணையவழித் தேர்வின் வினாக்கள் நீங்கள் PDF கோப்பாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் இந்த இணைய இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரும் படி அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி, வணக்கம்

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்

நாள்                           17- 01- 2022            

வகுப்பு                    ஏழாம் வகுப்பு

பாடம்                    :     தமிழ்

பாடத்தலைப்பு :      பருவம் -3 - இயல் - 1  - திருநெல்வேலி சீமையும் கவிகளும்

காணொளி

பணித்தாள்

அ.சரியான விடைத் தேர்வு செய்க.

1.ஆயிரம் வருஷத்துக்கு ஒரு தடவை-------------பிறக்கிறான் என்று சொல்லுவார்கள்

அ. நெசவாளர்            ஆ. எழுத்தாளர்            இ. கவிஞர்       ஈ. தொழில் நுட்ப வல்லுநர்

2  பாரதியார் பிறந்து வளர்ந்த இடம்

அ. எட்டையபுரம்        ஆ. கன்னியாகுமரி               இ. திருநெல்வேலி        ஈ. இராமநாதபுரம்

3. தேசிகவிநாயகனார் பிறந்த இடம்

அ. எட்டையபுரம்        ஆ. கன்னியாகுமரி               இ. திருநெல்வேலி        ஈ. இராமநாதபுரம்

4. எட்டையபுரத்தில் இருந்த மற்றொரு புலவர் _______________

அ. பெருஞ்சித்திரனார்                 ஆ. பாவாணர்                  இ. கடிகை முத்து புலவர்           ஈ. தமிழழகனார்         

5. மணியாச்சியிலிருந்து ஏழெட்டு மைல் தூரத்தில் தாமிரபரணி நதியும் சிற்றாறும் கலக்கிற இடம்தான்-----------

அ.  முக்கூடல்        ஆ. தாமிரபரணி                     இ. வைகை                             ஈ. மணிமுத்தாறு

6.  நெல்லையப்பர் கோவிலில் எழுந்தருளியுள்ள தாய் கடவுள் ---------

அ) மீனாட்சி                     ஆ) காமாட்சி                   இ) காந்திமதி                   ஈ) மாரியம்மாள்

7 திருநெல்வெலியிலிருந்து திருச்செந்தூருக்குப் போகிற மார்க்கத்திலே பதினெட்டாவது மைலில் ஆற்றுக்கு வடகரையில் -------------இருக்கிறது.

 அ) சீவைகுண்டம்             ஆ) சொக்க புரம்                          இ) திருச்சி                       ஈ) மேல்மருத்துவர்

 8. சீவைகுண்டம் ஆற்றுக்கு தென்கரையில் அமைந்த ஊர்_____________

அ) சோழவரம்      ஆ) சோளீஸ்வரம்             இ) ஆழ்வார் திருநகரி                   ஈ) பாபநாசம்

9. இரண்டாயிரம் வருடத்திற்கு முன் முத்தொள்ளயிர ஆசிரியர் இருந்த ஊர் ___________.

            அ) மதுரை                      ஆ) திருநெல்வேலி             இ) கொற்கை                              ஈ) யவனம்

 10 . காயல்பட்டணத்தில் இருநூற்றைம்பது வருஷத்துக்கு முன்-------- என்ற பெரிய வாணிகர் இருந்தார்.

அ. சீதக்காதி                          ஆ. சடையப்பர்                         இ. பரணர்                  ஈ. தொண்டைமான்

 

11. திருப்புகழ் பாடியவர்---------

அ) நக்கீரர்              ஆ)  அருணகிரி நாதர்                           இ) அப்பர்                               ஈ) குன்றக்குடி அடிகளார்

12 காவடிச்சிந்தைப் பாடியவர்

அ) நக்கீரர்              ஆ)  அருணகிரி நாதர்            இ) அருணகிரி நாதர்                             ஈ) அண்ணாமலையார்

13. வாடா’ என அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக் கூடாதென் றார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே – எனப்பாடியவர்

 அ) நக்கீரர்             ஆ)  அருணகிரி நாதர்            இ) அருணகிரி நாதர்                             ஈ) சொக்கநாதப் புலவர்

14 . நுண் துளி தூங்கும் குற்றாலம் என பாடியவர்

அ) திருஞான சம்பந்தர்            ஆ)  அப்பர்              இ) சுந்தரர்                             ஈ) சொக்கநாதப் புலவர்

15. குற்றாலக் குறவஞ்சியை இயற்றியவர்-------

அ) திருஞான சம்பந்தர்            ஆ)  அப்பர்              இ) சுந்தரர்                             ஈ) திரிக்கூடராசப்ப கவிராயர்


இணைய வழித் தேர்வு


பணித்தாள் - PDF



Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post