காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT
நாள் : 11 - 01- 2022
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் - 9 - அணி இலக்கணம்
அ.சரியான விடைத் தேர்வு செய்க.
1. அணி
என்பதற்கு ____________________ என்பது பொருள்
அ. நிலம்
ஆ. மரம்
இ. அழகு
ஈ. கடல்
2. சொல்லாலும்
பொருளாலும் செய்யுளினை அழகு பட எடுத்துரைப்பது______________
அ. அணி ஆ. பாடல்
இ. யாப்பு
ஈ. கவிதை
3. அணிகளில்
இன்றியமையாதது ______________ அணி ஆகும்
அ. வேற்றுமை ஆ. உருவகம்
இ. உவமை
ஈ. பின் வரு நிலை அணி
4. இனிய
உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய்க்கவர்ந்தற்று – என்னும் குறட்பாவில் அமையப்
பெற்றுள்ள அணி____.
அ. வேற்றுமை ஆ. உருவகம்
இ. வஞ்சப் புகழ்ச்சி
ஈ. உவமை
5. மலர்
போன்ற பாதம் – இதில் உவம உருபு எது?
அ. பாதம்
ஆ. போன்ற
இ. மலர்
ஈ. எதுவுமில்லை
6. உவமையின்
தன்மையைப் பொருள் மேல் ஏற்றிக் கூறுவது ____________ எனக் கூறப்படும்.
அ. உவமானம்
ஆ. உருவகம்
இ. உவமை
ஈ. உருபு
7.
உவமை,உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்றுத் தோன்றக் கூறுவது ____________ அணி
ஆகும்.
அ. வேற்றுமை அணி
ஆ. உருவக அணி
இ. உவமை அணி
ஈ. பின் வரு நிலை அணி
8.
பின் வரு நிலையணி ___________ வகைப்படும்.
அ. 3 ஆ.2
இ.5 ஈ. 6
9.
ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் மீண்டும் பல இடங்களில் வருவது
___________ ஆகும்
அ. வேற்றுமை ஆ. உருவகம்
இ. உவமை
ஈ. பின் வரு நிலை அணி
10.
முன் வந்த சொல்லே பின்னும் வந்து வேறு பொருள் உணர்த்துவது _________________ அணி
அ. உருவக அணி ஆ. சொல் பின் வருநிலையணி
இ. பொருள் பின் வருநிலையணி
ஈ. சொற்பொருள்
பின் வரு நிலையணி
11.
செய்யுளில் முன் வந்த ஒரு சொல்லின் பொருள் பின்னரும் பல இடங்களில் வருவது
_____________ அணி
அ. உருவக அணி ஆ. சொல் பின் வருநிலையணி
இ. பொருள் பின் வருநிலையணி
ஈ. சொற்பொருள்
பின் வரு நிலையணி
12.
முன்னர் வந்த சொல்லும் பொருளும் பல இடங்களில் வருவது ____________ அணி
அ. உருவக அணி
ஆ. சொல் பின் வருநிலையணி
இ. பொருள் பின் வருநிலையணி
ஈ. சொற்பொருள்
பின் வரு நிலையணி
13.
பழிப்பதுப் போல புகழ்வதும், புகழ்வது போல பழிப்ப்பதும் ____________ அணி
அ. வஞ்சப் புகழ்ச்சி அணி
ஆ. சொல் பின் வருநிலையணி
இ. பொருள் பின் வருநிலையணி
ஈ. சொற்பொருள்
பின் வரு நிலையணி
14.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றவை யவை – இக்குறட்பாவில் “ செல்வத்தைக்
குறிக்கக் கூடியச் சொற்களை எவை?
அ. கேடில்,மற்றவை ஆ. கல்வி,செல்வம் இ.
மாடு,செல்வம் ஈ. கல்வி,
மாடு
15.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றவை யவை – இக்குறட்பாவில் பயின்று
வந்துள்ள அணி எது?
அ. வஞ்சப்
புகழ்ச்சி அணி ஆ. சொல்
பின் வருநிலையணி இ. பொருள் பின் வருநிலையணி
ஈ.
சொற்பொருள் பின் வரு நிலையணி
இணைய வழித் தேர்வு
பணித்தாள் - PDF