காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பாடங்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதோடு அல்லாமல் அந்த பாடத்திற்குரிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. காணொலியில் பாடங்களை கற்றபின் வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக இணைய வழித் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த இணையவழித் தேர்வினை எழுதி அதன் மதிப்பெண்ணை உங்களின் தமிழாசிரியர்க்கு பகிரும் படி கேட்டுக் கொள்கிறோம். இணைய வசதி இல்லாத மாணவர்கள் இந்த வினாக்களின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிறைவு செய்து தங்கள் ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்கவும். இணைய வழித் தேர்வின் கீழ்த் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தினால் இணையவழித் தேர்வின் வினாக்கள் நீங்கள் PDF கோப்பாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் இந்த இணைய இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரும் படி அன்புடன் வேண்டுகிறோம்.
நன்றி, வணக்கம்
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
நாள் : 11- 01- 2022
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் - 6 - வளம் பெருகுக
காணொளி
பணித்தாள்
1. மன்பதை காக்கும் மாபெரும் சிறப்பு ____________________ உண்டு.
அ. நிலம் ஆ. மரம் இ. மாமழை ஈ. கடல்
2. தகடூர் யாத்திரையின் ஆசிரியர் ____________________
அ. குடபுலவியனார் ஆ. அதியமான் இ. பரணர் ஈ. அறியப்படவில்லை
3. தகடூர் என்பது இன்றைய _________________
அ. தாம்பரம் ஆ. தர்மபுரி இ. தஞ்சாவூர் ஈ. திருநெல்வேலி
4. தோட்டத்தில் தம்பி ஊன்றிய _________________ எல்லாம் முளைத்தன.
அ. சத்துகள் ஆ. பித்துகள் இ. முத்துகள் ஈ. வித்துகள்
5. என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு ____________ பெருகிற்று.
அ. காரி ஆ. ஓரி இ. வாரி ஈ. பாரி
6. ' அக்களத்து' என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________________.
அ. அ + களத்து ஆ. அக் + களத்து இ. அக்க + களத்து ஈ. அம் + களத்து.
7. கதிர் + ஈன் - என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது________________.
அ. கதிரென ஆ. கதியீன இ. கதிரீன ஈ. கதிரின்ன.
8. தகடூர் யாத்திரை என்ற பாடல் மூலம் அறியப்படும் நாடு_______________.
அ. பாண்டிய நாடு ஆ. பல்லவ நாடு இ. சோழ நாடு ஈ. சேர நாடு
9. நாரை இனங்கள் எதற்காக அஞ்சுகிறது?
அ. உழவர்களின் ஆரவார ஒலி ஆ. அலையோசை இ. இடியோசை
ஈ. குழந்தைகளின் அலறல்
10. ' வெரீஇ' என்பதன் பொருள் யாது?
அ. ஓசை ஆ. அஞ்சி இ. வருவாய் ஈ. தங்குக
11. போரெல்லாம் - என்பதனை பிரித்து எழுதக் கிடைப்பது _______________________
அ. போர் + எல்லாம் ஆ. போ + ரெல்லாம் இ. போர் + இல்லாம்
ஈ. போர் + ரில்லாம்
12. அகன்ற + அலை என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்_________________
அ. அகல் அலை ஆ. அகன்ற அலை இ. அகன்றலை
ஈ. அகன்றாலை
.