10TH - 11-01-2022 -KALVI TV - MEI KEERTHI - VIDEO AND WORKSHEET

     https://tamilrk-seed.blogspot.com

காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பாடங்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதோடு அல்லாமல் அந்த பாடத்திற்குரிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. காணொலியில் பாடங்களை கற்றபின் வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக இணைய வழித் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த இணையவழித் தேர்வினை எழுதி அதன் மதிப்பெண்ணை உங்களின் தமிழாசிரியர்க்கு பகிரும் படி கேட்டுக் கொள்கிறோம். இணைய வசதி இல்லாத மாணவர்கள் இந்த வினாக்களின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிறைவு செய்து தங்கள் ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்கவும். இணைய வழித் தேர்வின் கீழ்த் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தினால் இணையவழித் தேர்வின் வினாக்கள் நீங்கள் PDF கோப்பாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் இந்த இணைய இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரும் படி அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி, வணக்கம்

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்

நாள்                           11 - 01- 2022            

வகுப்பு                    பத்தாம் வகுப்பு

பாடம்                    :     தமிழ்

பாடத்தலைப்பு :       இயல் - 7   - மெய்க்கீர்த்தி

காணொளி


பணித்தாள்

அ.சரியான விடைத் தேர்வு செய்க.

 

1. புலவர்களால் எழுதப்பட்டு கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை______________

    அ. நடுகல்                    ஆ. கல்வெட்டு                    இ. சிற்பம்                ஈ. மெய்க்கீர்த்தி

2. கோப்பரகேசரி என்ற பட்டம் பெற்றவர்_____________

அ. முதலாம் இராசராச சோழன்        ஆ. இரண்டாம் இராசராச சோழன்      இ. முதலாம் இராஜேந்திர சோழன்                  ஈ. இரண்டாம் இராஜேந்திர சோழன்

3. யாருடைய காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டு வருகின்றன?

    அ. முதலாம் இராசராச சோழன்    ஆ. இரண்டாம் இராசைராச சோழன்               இ. முதலாம் இராஜேந்திர சோழன்                  ஈ. இரண்டாம் இராஜேந்திர சோழன்

4. மெய்க்கீர்த்தியின் முதற் பகுதியில் எவை நயம் பட எழுதப்பட்டிருக்கும்?.

    அ. நாட்டைப் பற்றி      ஆ. இயற்கையைப் பற்றி            இ. வேளாண்மைப் பற்றி              ஈ.மன்னரைப் பற்றி

5. அரசர்கள் தங்கள் வரலாறும்,பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பி கல்லில் செதுக்கியதை கூறும் சங்க இலக்கிய நூல்_____

    அ. மலைபடுகடாம்            ஆ. புறநானூறு               இ. பதிற்றுப்பத்து                            ஈ. பரிபாடல்

6. பல்லவர்கள் தங்களின் வரலாற்றையும் பெருமையையும் எதில் அறியும் படி வைத்தார்கள்________________.

     அ.   பனையோலை           ஆ. செப்பேடு                இ. மெய்க்கீர்த்தி               ஈ. கல்வெட்டு

7. பாண்டியர்கள் தங்களின் வரலாற்றையும் பெருமையையும் எதில் அறியும் படி வைத்தார்கள்________________.

     அ.   பனையோலை           ஆ. செப்பேடு                இ. மெய்க்கீர்த்தி               ஈ. கல்வெட்டு

8.  சோழர்கள் தங்களின் வரலாற்றையும் பெருமையையும் எதில் அறியும் படி வைத்தார்கள்________________.

     அ.   பனையோலை           ஆ. செப்பேடு                இ. மெய்க்கீர்த்தி               ஈ. கல்வெட்டு

9.  சோழனது நாட்டில் எவை பிணிக்கப்படுகிறது?

   அ. யானை       ஆ. மக்கள்           இ. கள்வர்               ஈ. காவலர்

10. சோழனது நாட்டில் எவை புலம்புகிறது?

    அ. சொல்       ஆ. அலை               இ. சிலம்பு                ஈ.மக்கள்

 

11. சோழனது நாட்டில் எவை கலக்கமடைகின்றன?

    அ. கடல்        ஆ. மக்கள்              இ. ஓடை                ஈ. குளம்

12. சோழனது ஆட்சியில் எவை அடைக்கப்படுகின்றன?

       அ. மக்களின் உரிமை       ஆ. மக்கள்               இ.விலங்குகள்                ஈ. புனல்

13. மாமலர் – என்பதன் இலக்கண குறிப்பு யாது?

       அ. உரிச்சொல் தொடர்        ஆ. வினைத் தொகை               இ. உவமை                ஈ. பண்புத் தொகை

14. எழுகழனி – என்பதன் இலக்கண குறிப்பு யாது ?

 அ. உரிச்சொல் தொடர்        ஆ. வினைத் தொகை               இ. உவமை                ஈ. பண்புத் தொகை

15. சோழனது நாட்டில் வெறுமை எங்குள்ளது?

அ. வேளாண்மையில்        ஆ. மக்களிடத்தில்               இ. விலங்குகளிடம்             ஈ. மூங்கிலிடம்

இணைய வழித் தேர்வு

( ஒவ்வொரு வினாவிற்கும் விடையளிக்க 25 நொடிகள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது )

பணித்தாள் - PDF







Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post