9TH - 07 -01-2022 -KALVI TV - YASOTHARA KAVIYAM - VIDEO AND WORKSHEET

 https://tamilrk-seed.blogspot.com

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பாடங்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதோடு அல்லாமல் அந்த பாடத்திற்குரிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. காணொலியில் பாடங்களை கற்றபின் வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக இணைய வழித் தேர்வு வழங்கப்பட்டுள்ளர்து. மாணவர்கள் அந்த இணையவழித் தேர்வினை எழுதி அதன் மதிப்பெண்ணை உங்களின் தமிழாசிரியர்க்கு பகிரும் படி கேட்டுக் கொள்கிறோம். இணைய வசதி இல்லாத மாணவர்கள் இந்த வினாக்களின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிறைவு செய்து தங்கள் ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்கவும். PDF கோப்பினை பதிவிறக்கம் செய்ய நீங்கள் 20 நொடிகள் காத்திருக்கவும். ஆசிரியர்கள் இந்த இணைய இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரும் படி அன்புடன் வேண்டுகிறோம்.
நன்றி, வணக்கம்
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்

நாள்                           07 - 01- 2022            

வகுப்பு                    ஒன்பதாம் வகுப்பு

பாடம்                    :     தமிழ்

பாடத்தலைப்பு :       இயல் - 8  - யசோதர காவியம்

காணொளி

இனிய இராகத்தில் மனப்பாடப் பாடல்

ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக
போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக
நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக
காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே


பணித்தாள்
1. யசோதர காவியத்தில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை ____________
அ. 420        ஆ. 470                    இ. 320                ஈ.370

2. யசோதர காவியம் ______________ மொழியைத் தழுவி எழுதப்பட்டது.
அ. உருது     ஆ. வடமொழி        இ. தெலுங்கு    ஈ. கன்னடம்

3. யசோதர காவியம் ________________ சமயத்தைச் சார்ந்தது.
அ. புத்தம்       ஆ. இந்து                இ. ஆரியம்        ஈ. சமணம்

4. அறம்,பொருள்,இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதி பொருட்களும் காப்பியத்தில் இடம் பெற்றிருந்தால் அது _____________ காப்பியம்
அ. பெருங்காப்பியம்    ஆ. சிறு காப்பியம்        இ. தனி காப்பியம்        ஈ. காவியம்

5. பெருங்காப்பியத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை _____________
அ.     4                ஆ.    3                    இ.    5            ஈ. 6

6. வேறுபட்டதைக் காண்க:- சிறு காப்பிய நூல்கள்.
அ. யசோதர காப்பியம்        ஆ. சூளாமணி       இ. நீலகேசி            ஈ. மணிமேகலை

7. யசோதர காவியம் மூலம் மாணவர்கள் பெறுவது ____________
அ. பாடல் இனிமை            ஆ. காப்பியங்கள் பெருமை        இ. அறச்சிந்தனை அறிதல்       
 ஈ. தமிழின் பெருமை

8. யசோதர காவியத்தில் உள்ள சருக்கங்கள் _______________
அ. 5                ஆ.    6            இ.    7            ஈ.    3

9. யசோதர காவியத்தின் முதல் பதிப்பு வெளிவந்த ஆண்டு ____________
அ. 1907        ஆ. 1906         இ. 1905        ஈ. 1908

10. யசோதர காவியத்தில் பாடுபொருளில் வேறுபட்டது எது?
அ. கொலை தீயது        ஆ. ஆசையே துன்பமாகிறது            இ. உயிர்ப்பலி கொடியது        ஈ. இசை காமத்தை மிகுவிக்கும்.

11. ஆக்குவது , போக்குவது இதில் இடம் பெறும் நயம் யாது?
அ. மோனை        ஆ. முரண்            இ. எதுகை            ஈ. இயைபு

12. வெகுளி என்பதன் பொருள் யாது?
அ. அறியாமை        ஆ. ஆசை        இ. செல்வம்        ஈ. சினம்

13. ஞானம் - என்பதன் பொருள் யாது?
அ. மெய்யறிவு        ஆ. பொய்யறிவு        இ. அன்பறிவு        ஈ. ஆசையறிவு

14. எவற்றை காக்க வேண்டும்?
அ. நன்னெறி        ஆ. குடும்பம்                இ. செல்வம்        ஈ. சேமிப்பு

15. எவற்றை போக்க வேண்டும் என யசோதர காவியம் கூறுகிறது?
அ. அறியாமை        ஆ. ஆசை        இ. செல்வம்        ஈ. சினம்



நீங்கள் 20 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post